எங்கள் ஏரியா பக்கத்தில் இருக்கும் சிட்லபாக்கம் என்னும் இடத்தில் வரதராஜா என்று ஒரு தியேட்டர் உண்டு.என்ன படம் போடுகிறார்கள், யார் பார்க்கிறார்கள் என்று அந்த தியேட்டரை கடக்கும் போதெல்லாம் நிமிர்ந்து பார்க்காமல் அவசரமாய் கடந்து விடுவேன். யாரோ ஒரு புண்ணியவான் கொடுத்த ஐடியாவால் + பணத்தால் இன்று அந்த தியேட்டர் ஜொலிக்கிறது. அட்டகாசமான சிட்டி தியேட்டர் மாதிரி மாற்றி விட்டார்கள். டிக்கெட் 100 ரூபாய்.ஞாயிறன்று அந்த தியேட்டரில் நாங்கள் 10 பேர் வானம் பார்த்து வந்தோம்.தியேட்டர் ஃபுல்லாகி இருந்தது. 80-களில் படம் பார்த்த மாதிரி ஒரு ஃபீலிங்.முன் வரிசையில் இருந்த கொஞ்சம் பசங்க சிம்புவை பார்க்கும் போதெல்லாம் செம சவுண்ட் விட்டு கொண்டு இருந்தனர். கொஞ்ச நேரத்தில் சத்தமே இல்லை. கதை என்று ஒன்று இருந்தால் மக்கள் அமைதியாகி விடுகின்றனர்.
பரத்,அனுஷ்கா,சரண்யா,பிரகாஷ்ராஜ்,சிம்பு-சந்தானம் என்று ஐந்து பேர்களை பற்றிய கதை.ஐவரையும் கடைசி காட்சியில் ஒன்றாக மீட் செய்ய வைத்து கதை முடிக்க பட்டுள்ளது. விமர்சனம் எதுவும் படிக்காமல் போனதால் கோ படம் மாதிரி இந்த படமும் எங்களுக்கு பிடித்து இருந்தது.
குட் சிம்பு. இந்த மாதிரி கதையில் நடித்தமைக்கு. சந்தானம் வரும் சீன்களில் மனம் விட்டு சிரிக்க முடிகிறது. பரத் ஸ்டைலிஷாக வருகிறார்.பசங்க படத்தில் வரும் பெண்ணும் அப்படியே.மற்ற அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர். எவண்டி உன்னை பெத்தான் பாட்டை அனுஷ்காவை பார்த்து சிம்பு பாடுவதாய் அமைத்து வேறு விதமாய் எடுத்து இருக்கலாம்.சிம்பு லவ் செய்யும் அந்த பெண்ணிற்கு இந்த பாட்டு வேஸ்ட்.
தெய்வம் வாழ்வது எங்கே, தவறுகளை உணரும் மனிதம் நெஞ்சில்---- யுவன் பாடல் அற்புதம்.அப்பாடல் படத்தில் வரும் சீன்களில் அப்படியே பொருந்துகிறது. படம் எப்படி இருக்குமோ என்று பயந்து கொண்டே படத்திற்கு போனோம்.எங்களுக்கு இனிமையான ஷாக்.எல்லோரும் பார்க்கலாம்.வீட்டிற்கு பக்கத்தில் ஒரு அருமையான தியேட்டர் கிடைத்ததும் சந்தோஷமாய் இருக்கிறது.
12 comments:
//பசங்க படத்தில் வரும் பெண்ணும் அப்படியே//
என்னங்க வேகாவை தெரியாதா? உங்க பையனுக்கு தெரிஞ்சிருக்குமே :))
வீட்டுக்கு பக்கத்தில் புது தியேட்டர் !! வாழ்த்துகள் !! (எதுக்கெல்லாம் வாழ்த்து சொல்றோம் பாத்தீங்களா?)
படம் நல்லா இருக்குன்னு சொல்றீங்க... பார்க்கலாம்.. தில்லியில் ஏதாவது திரையரங்கத்தில் போடறாங்களான்னு.. :)
//லவ் செய்யும் அந்த பெண்ணிற்கு இந்த பாட்டு வேஸ்ட்.// அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஅ!
ஆஹா...நல்லா இருந்ததா...
எதோ எனக்கு தான் அந்த படம் பிடிக்கவில்லை...
நெட்ல பாத்துடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
வீட்டுக்கு பக்கத்தில் தியேட்டரா! வானம் பார்த்து விடுவோம்.
அட... நீங்க சிட்லபாக்கமா... நான் குடியிருப்பது கிழக்கு தாம்பரத்தில்... சிட்லபாக்கம் வரதராஜா என்ற பெயரைப் பார்த்ததும் வந்தேன். படம் நல்லாயிருக்கா?அப்ப பார்க்கலாமா?
சிம்பிள் ஆக மனதில் பட்டதை சொல்லி விமர்சித்து இருப்பது, நல்லா இருக்குதுங்க.
அருமை
விமர்சனம் அருமை.. கட்டாயம் மெரினா மீட்டுக்கு வாங்க..:))
நல்ல இருக்கு
ஒரு வித்தியாசமான கதை
ஷர்ட் சிம்பிள் ஸ்வீட் இப்படி நச்சுன்னு விமர்சனம் படிச்சு நாள் ஆகி போச்சு
Post a Comment