Friday, May 20, 2011

திஹார் ஆசிரமம்

1958-ல் டில்லியில் இருந்த சின்ன ஜெயில் திஹாருக்கு மாற்றப்பட்டது. திஹார் என்ற கிராமம் டில்லியின் மேற்கு பகுதியில் சாணக்கியபுரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் இருக்கிறது.அப்பொதைய ஜெயிலில் 1273 பேர் இருக்கலாம். இப்பொழுது 12 ஆயிரம் பேர் இருக்கின்றனர். ஆனால் 6500 கைதிகள் தங்க வைக்கவே போதுமான இடம் உள்ளது.திஹார் ஜெயில் ஆசியாவிலேயே மிக பெரிய ஜெயிலாகும்.மொத்தம் 10 ஜெயில்களை உள்ளடக்கியதே திஹார் ஜெயிலாகும். மிகவும் மாடர்னான ஜெயிலாகும். ஆர்.ஓ சிஸ்டத்தில் குடிக்க சுத்தமான தண்ணீர்,கேபிள் டீவி,உள்,வெளி விளையாட்டு அரங்குகள், மருத்துவ வசதி,கேண்டீன் வசதி,சந்திக்க வருபவர்களை சந்திக்க சுத்தமான ஹால்கள்,மிக நவீன சமையலறை ஆகியவற்றை கொண்டது.
பெண்களுக்கான் ஜெயிலின் நம்பர் 6 ஆகும்.

யோகா,மெடிடேஷன்,கம்ப்யூட்டர்,கைவினை பொருட்கள் பயிற்சி மட்டுமில்லாமல் இந்திராகாந்தி யுனிவர்சிட்டி நடத்தும் கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்களும் உள்ளது.

வாரம் ஒரு நாள் 5 நிமிடங்கள் ஃபோன் பேசி கொள்வதற்கு அனுமதி உண்டு. ஒரு கைதிக்கு இரு நம்பர் மட்டுமே பேச அனுமதி. பேசுவதும் முழுவதும் ரிக்கார்ட் ஆகும்.

தச்சு பட்டறை,நெசவு பட்டறை,தையலகம்,அச்சு பட்டறை,உணவு பதனிடும் தொழில்,பேக்கரி,காலனி தாயரித்தல்,விளையாட்டு உபகரணங்கள் தயாரித்தல் ஓவியம் வரைதல் என்று இந்த ஜெயிலில் நிறைய தொழில்கள் இயங்கி வருகிறது.இங்கு வேலை பார்க்கும் கைதிகளுக்கு அவர்கள் திறமைக்கு ஏற்ப சம்பளம் தின கூலி அடிப்படையில் வழங்க படுகிறது.

தாயாராகும் பொருட்கள் வெளியில் விற்கப்படுகிறது.

ஓவ்வொரு ஜெயிலிலும் பெரிய நூலகம் இயங்கி வருகிறது.மது,போதை அடிமை பட்டவர்களை மீட்க ஒரு செண்டரும் உள்ளது. 150 படிக்கைகளுடன் கூடிய ஒரு பெரிய மருத்துவமனை உள்ளது. பெண் கைதிகளின் குழந்தைகளை பராமரிக்க ஒரு சென்டரும் உள்ளது. இலவச சட்ட ஆலோசனையும் கைதிகளுக்கு உண்டு.

ஜெயில் நம்பர் 1: M - Z இந்த எழுத்துக்களில் தொடங்கும் பெயர் உள்ள கைதிகளுக்கானது.இதில் V&W எழுத்தில் ஆரம்பிக்கும் கைதிகள் மட்டும் துவாரகா ஜெயிலில். இது திஸ் ஹாசாரி கோர்ட்டில் தண்டனை பெற்ற கைதிகளுக்கானது.இதில் R என்று தொடங்கும் கைதிகளும் அடக்கம்.

ஜெயில் நம்பர் 2: A to Z ஆயுட் கைதிகளுக்கானது.

ஜெயில் நம்பர் 3: A to L பேருடைய கைதிகள்.

ஜெயில் நம்பர் 4: பாட்டியாலா கோர்டில் தண்டனை பெற்ற கைதிகள் அனைவரும்.

ஜெயில் நம்பர் 5: 10 வருட தண்டனை பெற்றவர்கள் மட்டும்.

ஜெயில் நம்பர் 6: எல்லா பெண் கைதிகளும்

ஜெயில் நம்பர் 7: 18-30 வயதிற்குட்பட்ட கைதிகளுக்கானது.

ஜெயில் நம்பர் 8 & 9: கார்கர்டோமா,சஹாதாரா கோர்டில் தண்டனை பெற்ற கைதிகளுக்கானது.

கைதிகள் தங்கள் சொந்தக்காரர்கள்,ஃப்ரெண்ட்சை வாரம் ஒரு முறை சந்திக்க முடியும். எடுத்துக்காட்டா, இப்போ 6 ஆம் நம்பர் ஜெயிலில் உள்ள K என்று ஆரம்பிக்கும் எழுத்துடைய ஒரு கைதியினை சந்திக்க வேண்டுமானால் திங்கள் அல்லது வியாழன் ஜெயில் அதிகாரியிடம் முன் அனுமதி பெற்று சந்திக்கலாம்.

ஜெயில் பற்றி முழுதும் படித்து பார்த்தால் ஜெயில் மாதிரி தெரியலை.ஏதோ ஒரு ஆசிரமம் மாதிரி தெரிகிறது. அங்கு போய் வருபவர்கள் நன்கு திருந்த அதிக வாய்ப்பு இருக்கிறது.

கிரண்பேடி இங்கு அதிகாரியாக பணியிலிருந்த போது தான் அதிக மாற்றங்களை கொண்டு வந்தார். திஹார் ஜெயில் என்பது திஹார் ஆசிரமமானதும் அப்போது தான்.

7 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice compilation of information

சுசி said...

:))

Unknown said...

புதிய தகவல்கள்....

வெங்கட் நாகராஜ் said...

ஜெயில் எண் 6 பெண்களுக்கானது.. அங்கே K என்கிற நபர் இருக்கிறார்.. ஓ அப்படியா? விவரங்கள் நல்ல பக்காவே கொடுத்து இருக்கீங்க! அது எப்புடீ…….

ஹுஸைனம்மா said...

பொதுவா புதுசா ஒரு ஊருக்குப் போறதுக்கு மின்னே இந்த மாதிரிலாம் விசாரிச்சு வச்சுப்போம்.
எதுக்கு இந்த தகவல் சேகரிப்பு இப்போ? யாரையும் அனுப்பற ஐடியா இருக்கா? (போன பதிவு ஞாபகம் வருது) ;-)))))

ஷர்புதீன் said...

//பொதுவா புதுசா ஒரு ஊருக்குப் போறதுக்கு மின்னே இந்த மாதிரிலாம் விசாரிச்சு வச்சுப்போம்.
எதுக்கு இந்த தகவல் சேகரிப்பு இப்போ? யாரையும் அனுப்பற ஐடியா இருக்கா?//

Me too thing same like hussainamma!!

A.R.ராஜகோபாலன் said...

விசாலமான திஹார் சிறையை பற்றி
விவரமான தகவல்களை தந்தது
வியாபாம் நன்றி மேடம்