Monday, April 25, 2011

பாருங் ”கோ” நான் பார்த்துட்டேன்

குட் ஃப்ரைடே அன்று காலையில் நகுல் மாயாஜாலில் மாலை காட்சிக்கு டிக்கெட் இருக்கு புக் செய்யட்டுமா யார் வரீங்க என்று கேட்டதும் நான் வரேன்,நான் வரேன் என்று 5 பேர் சேர்ந்து போனோம்.படம் வந்த முதல் நாளே எந்த விமர்சனமும் படிக்காமல் பார்த்ததால் படம் பார்க்க நல்லாயிருந்தது.

டைட்டிலில் வரும் ஃபோட்டாக்கள் அருமை.ராதா,அம்பிகாவிற்கு இடையில் இன்னொரு சகோதரி மல்லிகா என்று உண்டு அந்த பெண் தன் முகத்தினை எந்த பத்திரிக்கையிலும் காண்பித்தது இல்லை. கார்த்திகா அந்த பெரியம்மா போல் இருக்கிறார் போலும்.ராதா மாதிரி இல்லை.

டைரக்டருக்கு அழகான ஆண்கள் மேல் ஏதோ கோபம் போல் இருக்கிறது. கனாகண்டேன் பிரிதிவிராஜ் போல் இதில் அஜ்மல்.அஜ்மல் அசத்தி இருக்கிறார். என்னமோ ஏதோ பாட்டை இன்னும் நல்லா எடுத்து இருக்கலாம்.இந்த பாட்டில் வரும் குவியமில்லா,காட்சிப்பேழை என்றால் என்ன என்று என் அருமை புத்திரர்களுக்கு விளக்கினேன்.

ஸ்டேஜில் வெடி வெடிக்கும் போதே என் கணவர் யார் வில்லன் என்று சொல்லி விட்டார்.நான் நம்பவில்லை.ரிஷியோ அந்த ஸ்டேஜ் தன் காலேஜில்(SRM)போடப்பட்டதாய் சொல்லி பெருமைப் பட்டான்.

ப்யா சுறுசுறுன்னு இருக்காங்க.கார்த்திகா முழி முழின்னு முழிக்காங்க.

ஈ பார்த்துட்டு ஜீவா பிடித்து போச்சு.இதிலும் ஏமாற்றவில்லை.ப்யா ஜீவா நட்பு இந்த காலத்திய நட்பு.பிரகாஷ் ராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் நச்.காரில் கார்த்திகா இண்டர்வியூ செய்யும் காட்சியில் நடக்கிறேன்,நடக்கிறேன், நான் நடந்தா என்னா ஆகும் என்று பார்க்கிறீயா என்று அழுத்தி சொல்வது அவருடைய ஸ்டைல்.

கடைசி சண்டை காட்சியினை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.சண்டை முடிந்ததும் தீபாவளி கொண்டாடி முடிச்ச மாதிரி இருந்தது அவ்வளவு டமால்,டுமீல்.காலேஜ் பாட்டு,முதல் கெட்-டு-கெதர் பாட்டு,வெண்பனி பாட்டை தவிர்த்து இருந்தால் படத்தின் நீளமும் கம்மியாகி இருக்கும்.அமளி துமளி பாட்டினை எடுத்தவிதம் மிக அருமை.மலை விளிம்பிலேயே ஜீவா,கார்த்திகாவினை நிறுத்தி எடுத்து இருக்கிறார்கள்.ஆடும் போது கீழே விழுந்து விடுவார்களோ என்று பக் பக்கென்று இருந்தது.லொகேஷன் நார்வேயாம். வெண்பனி பாட்டு சைனாவாம்.

படம் ஆரம்பம் முதல் கடைசி வரை போர் இல்லை.ஸோ, எல்லோரும் பாருங்”கோ”.


18 comments:

நசரேயன் said...

சரிங்க

Ram said...

ஆஹா பதிவு போட்டுட்டீங்க.. சரி சரி.. எல்லாரும் பாருங்க பாருங்கனு சொல்றாங்க.. ஆனா நேரம் தான் கிடைக்கல.. இந்த வெள்ளி கண்டிப்பா போயிடுறன்..

குறையொன்றுமில்லை. said...

உங்களுக்கு நல்லா வே விமரிசனம் எழுதவருது.

செங்கோவி said...

ஆஹா..கலக்கலான விமரிசனம்..நாங்கள்லாம் ஜாக்ரதையா இருக்கணும் போலிருக்கே!

சுசி said...

பார்த்திட்டு சொல்றேன் :)

பார்த்தவங்க ஜீவா நடிப்பு ஓக்கேன்னுதான் சொல்றாங்க.

சாந்தி மாரியப்பன் said...

படம் பார்க்கத்தூண்டும் விமர்சனம்..

CS. Mohan Kumar said...

Good review.

ஹுஸைனம்மா said...

//குவியமில்லா,காட்சிப்பேழை //

எச்சூஸ்மி, அப்படின்னா என்ன?

ராதா-அம்பிகாவுக்கு இன்னொரு சகோதரி உண்டா? அட, தகவலுக்கு நன்றி.

//அந்த பெண் தன் முகத்தினை எந்த பத்திரிக்கையிலும் காண்பித்தது இல்லை.... கார்த்திகா அந்த பெரியம்மா போல் இருக்கிறார் போலும்//
அப்ப நீங்க எப்படிப் பாத்தீங்க? பக்கத்து வீடா? (அய், அய், மாட்டிகிட்டீங்களா? ;-))))) )

கலகலன்னு இருக்கு விமர்சனம். படம் பார்க்கலாம் அப்ப?

அமுதா கிருஷ்ணா said...

நன்றி நசரேயன்..

கட்டாயம் பாருங்க தம்பி கூர்மதியன்..

தாங்ஸ் லக்‌ஷ்மி மேடம்..

அமுதா கிருஷ்ணா said...

சாக்கிரதை செங்கோவி..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி சுசி,அமைதிச்சாரல்,மோகன்குமார்..

அமுதா கிருஷ்ணா said...

ஹீசைனம்மா குவியமில்லா எனில் அவுட் ஆஃப் ஃபோகஸ்,காட்சிப்பேழை எனில் ஒரு ஃபோட்டோ மாதிரி...
இல்லை அவர்கள் எதிர் வீடுப்பா.

rajamelaiyur said...

Very Good analysis;)

rajamelaiyur said...

Child photo very cute

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம். பார்க்க முயற்சிக்கிறேன்...

vanathy said...

super review!

RVS said...

பார்க்கறேங்'கோ'. ;-))

இராஜராஜேஸ்வரி said...

எல்லோரும் பாருங்”கோ”.
சாரிங் "கோ"