சில வருடங்களாக வாங்கணும் என்று சொல்லி கொண்டே இருந்த லேப்ரடார் வகை நாயினை இந்த லீவில் என் மகன் ரிஷி வாங்கியே விட்டான். உங்களை வளர்த்தது போதாதா என்று அலுத்துக் கொள்வதால்,லீவில் இருக்கும் போது நான் வளர்த்து விடுகிறேன் என்று அவன் கூறியதால் நான் ஒத்துக் கொண்டேன். பெயர் வைக்க 3 நாட்கள் ஆனது. கடைசியில் ரியோ என்று எல்லோரும் ஒத்துக் கொண்டோம்..
ஆனால், என் தம்பி வைத்த பெயர் இசக்கி!!
வீட்டிற்கு வந்த முதல் நாள் ரியோ வீட்டின் ஒவ்வொரு கதவின் பக்கத்தில் கொஞ்ச நேரம் அமர்ந்து என்னவோ நினைத்துக் கொண்டது போல ஓரமாய் போய் விடும்.ஏசி ரூமின் கதவிற்கு வெளியில் போய் நின்ற ரியோ உடனே அங்கேயே படுத்துக் கொண்டது. கதவின் அடியில் வந்த ஜில் காத்து தான் காரணம்.கூடவே என் தம்பியின் மகன்கள் விஷால்,சித்தார்த்தும் படுத்து கொண்டபோது க்ளிக்கியது.
7 comments:
கூடவே என் தம்பியின் மகன்கள் விஷால்,சித்தார்த்தும் படுத்து கொண்டபோது க்ளிக்கியது.//
Nallairrukku. Super.
இசக்கி வாழ்க
very cute pics.
க்க்க்க்யூட்டா இருக்கு ரியோ.. :)
:) ரியோ - நல்ல பெயர்.. :)
இசக்கி வந்து உங்க வாழ்க்கையை ஜாலியா ஆக்கபோகுது... enjoy madam...
நாய் வளர்ப்பு அனுபவமே இனிமைதான். படங்கள் சூப்பரா க்ளிக்கி யிருக்கீங்க,
Post a Comment