Wednesday, May 18, 2011

இதுவா பள்ளி

ஒவ்வொரு விடுமுறைக்கு முதல் நாள் 10, 12 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு ஒரு மீட்டிங் போட்டு விடுமுறையில் அவர்கள் நிம்மதியில்லாமல் இருப்பது மாதிரி ஒரு மிக நீண்ட உரை.வீட்டில் வந்து அந்த பள்ளியின் மீட்டிங்கில் பேசப்பட்டதை பெற்றோர்களிடம் சொல்லும் போதே மாணவிகள் அழுகை.பெண் குழந்தைகளிடம் எவனையாவது இழுத்துட்டு ஓட வேண்டியது தானே, இங்க வந்து ஏன் எங்கள் உயிரை வாங்குகிறீர்கள் என்று கேட்பது. மாணவர்களிடமும் அதே போல அநாகரிமான பேச்சு.

9ஆவது சுமாராக படிக்கும் மாணவர்களிடம்,குறைந்தது 20 மாணவர்களிடம், அவர்களின் பெற்றோரிகளிடம் கையெழுத்து வாங்கி கொண்டு அவர்கள் 10 ஆவது படிக்கும் போது ஜனவரியில் ஸ்கூல் பெயரில் பொது தேர்வு எழுத தடை செய்து தனிதேர்வு எழுத வைக்கும் குள்ள நரி தனம். நல்லா படிக்கலை என்பதால் ஸ்கூல் ரிசல்ட் போகுமாம். அதனால் 10 ஆவது படிக்கும் மாணவர்களின் மனநிலை பாதிப்பதனை போல் திட்டுவது. தண்ணீரில் ஊறவைத்து, எண்ணெய் தடவி எடுத்து வரப்படும் ஒரு பெரிய பிரம்பால் கை, காலில் இரத்தம் வரும் வரை அடி. அடிப்பது பெண் ஆசிரியை. எவனை வேண்டுமானலும் கூட்டி வா என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று அடிப்பட்ட மாணவர்களை மிரட்டுவது.ரேங்க் வாங்காத மாணவர்களினை முழு பள்ளி நேரமும் வகுப்பு அறையில் கீழேயே உட்கார வைத்து இருப்பது.  ஒழுங்கற்ற டாய்லெட் வசதியால் காலை 8 முதல் ராத்திரி 9 வரை தங்கி இருக்கும் மாணவிகள் அனுபவிப்பது அதை விட கொடுமை. மாலை 6லிருந்து 9 வரை ஸ்பெஷல் வகுப்புகள்.ஏராளமான மாணவிகள் யூரினெரி ட்ரபிள் வந்து கஷ்டப்படுகிறார்கள்.

பெற்றோர்கள் ஏன் இதற்கு பொறுத்து போகிறார்கள் என்றால் படிக்கும் தங்கள் குழந்தைகள் அனைவரும் இஞ்சினியர், டாக்டர் ஆக வேண்டும் என்ற பேராசையில் இருக்கிறார்கள். வேறு படிப்பெல்லாம் படிப்பாக மதிப்பது இல்லை. இப்படி கஷ்டப்பட்டாவது மார்க் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.அந்த பள்ளி நிர்வாகத்தினரோ யாராவது இவர்களை பற்றி புகார் செய்தால் தங்கள் மேலதிகாரிகளுக்கு பணம் தந்து விஷயத்தினை அமுக்குவது.  கொத்தடிமைகள் போல் மாணவர்கள், ஆசிரியர்கள் நடத்த படுகிறார்கள்.

தினம் காலை 8 முதல் ராத்திரி 9 வரை 10, 12 வகுப்பு குழந்தைகள் ஸ்கூலில் இருக்க வேண்டும்.
ஆண் ஆசிரியர்களிடம் பெண்குழந்தைகள் பேசினால் என்ன அவனிடம் வழிசல் என்ற கேள்வி.
எதேனும் ஒரு நேரத்தில் தவிர்க்க முடியாமல் மாணவர்களிடம் மாணவிகள் பேசினால் எப்ப, எங்க ஓட போறீங்க சொல்லிட்டு ஓடுங்க என்று சொல்வது.

இவ்வளவு கொடுமைகள் செய்து இந்த முறை கணக்கில் மட்டும் 25 மாணவர்கள் +2-வில் ஃபெயில் ஆகி இருக்கிறார்கள் அதனால்,அந்த பள்ளியில்.இந்த ஆண்டு +2 படிக்கும் மாணவர்களுக்கு வன்முறை இன்னும் அதிகம் ஆகும்.

தான் பணம் சம்பாதிக்க ஒரு சமுதாயத்தினை கெடுத்துக் கொண்டு இருக்கும் இந்த மாதிரி லூசிடமிருந்து எப்படி தப்பிப்பது?  இப்படி லூஸ், சைக்கோ என்று திட்டுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாமல் பெற்றோர்கள்.எப்ப இந்த ஸ்கூலை விட்டு நாம் ஒழிவோம் என்று இருக்கும் மாணவர்கள்.இது ஒரு பள்ளியில் மட்டும் நடக்கிற விஷயம் இல்லை. நிறைய பள்ளிகளில் நடக்கிறது.கேள்விப்படும் விஷயங்களை கேட்டு கொதித்து மட்டும் போயிருக்கும் கையாலாகாத நான்.

இஞ்சினியர்,டாக்டர் ஆகவில்லை எனினும் இந்த நல்ல உலகத்தில் நன்கு வாழலாம் என்று எப்ப தான் தெரிய போகுதோ இந்த பாழாய் போன பெற்றோருக்கு.16 comments:

vanathy said...

நல்ல பதிவு. இதுக்கெல்லாம் காரணம் பெற்றோர்கள் தான் என்பதே என் கருத்து. பிள்ளைகளின் மீது எதையாவது திணிப்பது. அது அவர்களுக்கு ஏறுதோ இல்லையோ என்று பார்ப்பது கிடையாது. ஆசிரியர்கள் இப்படி வில்லத்தனம் பண்ணுவதை தடுக்க சட்டங்கள் வர வேண்டும் என்பதே என் கருத்து.
பாத்ரூம்... ஐயோ! அந்தக் கொடுமையை நினைச்சா அழுகை வரும் எனக்கு. அடிப்படை வசதி கூட இருப்பதில்லை. அதுவும் வீட்டு விலக்கு நாட்களில் மாணவிகள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.

rajamelaiyur said...

Which school

rajamelaiyur said...

Very true statement

இராஜராஜேஸ்வரி said...

இஞ்சினியர்,டாக்டர் ஆகவில்லை எனினும் இந்த நல்ல உலகத்தில் நன்கு வாழலாம் என்று எப்ப தான் தெரிய போகுதோ இந்த பாழாய் போன பெற்றோருக்கு.

மதுரை சரவணன் said...

உண்மையான ஆதங்கம் புரிகிறது... பெற்றோர்கள் தங்கள் ஆசையை தம் குழந்தைகளின் மீது திணிக்கக் கூடாது மற்றும் ஆசிரியர்கள் மதிப்பெண் அடிப்படையில் இயங்காமல் , அறம் சார்ந்து இயங்கினால் நலம் .உணர்த்துதல் அவசியம் . திணித்தல் என்பது மன உளைச்சலை தரும் என்பது தான் உண்மை.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Ram said...

இங்க வந்து ஏன் எங்கள் உயிரை வாங்குகிறீர்கள் என்று கேட்பது. மாணவர்களிடமும் அதே போல அநாகரிமான பேச்சு.//
உங்களுக்கு தெரியாததா.!!

Ram said...

எழுத வைக்கும் குள்ள நரி தனம்.//

நீங்கள் எப்படி.?

Ram said...

உங்களுக்கு பக்குவப்பட்ட, உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு டாபிக்கை எடுத்திருக்கிறீர்கள். ஆனால் நம்ம ஏரியாவில ஏதோ ஒரு பள்ளிய தான் தாக்குறீங்கனு புரியுது. பள்ளி பெயரை சொல்லலாமே.! சியோன் ஸ்கூல சொல்றீங்களா.? பாப்போம் இதுக்கு ஏதாவது முடிவுகட்ட முடியுதானு பாப்போம்..

செங்கோவி said...

உண்மை தான் சகோதரி. இவற்றை விட அரசுப்பள்ளிகள் எவ்வளவோ பரவாயில்லை..அங்கு சேர்க்கவும் கௌரவம் விட மாட்டேங்குதே நம்ம பெற்றோர்களுக்கு..

சிநேகிதன் அக்பர் said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது. என்னத்த சொல்ல...

சுசி said...

என்ன கொடுமைக்கா இது.. அந்தப் பசங்க மனசு என்னாகும்??

பாலா said...

உங்கள் வார்த்தைகள் உண்மை. இது குறித்து நான் எழுதிய பதிவு இது. நேரம் கிடைத்தால் படித்து பாருங்கள்.

http://balapakkangal.blogspot.com/2011/05/blog-post.html

Chitra said...

இஞ்சினியர்,டாக்டர் ஆகவில்லை எனினும் இந்த நல்ல உலகத்தில் நன்கு வாழலாம் என்று எப்ப தான் தெரிய போகுதோ இந்த பாழாய் போன பெற்றோருக்கு.


...... இதற்கு மேல என்ன சொல்ல முடியும்?

Chitra said...

இதற்கு மேல என்ன சொல்ல முடியும்? :-(

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. பள்ளிகள் படுத்தும் பாடு ஒரு பக்கம் என்றால் பேராசை படும் பெற்றோர்கள் மறு பக்கம். எங்கு செல்லும் இந்த பாதை…..

பொன்ஸ்~~Poorna said...

கொடுமையா இருக்கே! இது எந்த ஸ்கூலுங்க?! நாங்க படிச்ச பள்ளியில் கூட ஆண்கள் பெண்களுடன் பேசக் கூடாதுன்னு சொல்லுவாங்க..ஆனா ஆசிரியர்-மாணவர் பேச்சுவார்த்தையை தடை பண்ண மாட்டாங்க..

முக்கியமா இப்படி வார்த்தையால கொல்ல மாட்டாங்க.. இப்படிப் பட்ட சொற்களைக் கேட்டு வளரும் குழந்தைகள் இதே மாதிரி பேச மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?

இஞ்சினியரிங், டாக்டர் மட்டும் இல்லை, இது போன்ற அடிப்படை நாகரிகம் கூட இல்லைன்னா அடுத்த தலைமுறை சமுதாயம் என்னவாகும்? படிச்ச பின்னாடி வேலை பார்க்கும் இடத்தில் இந்த மாதிரி soft skills, attitude தான் பார்ப்பாங்க..அப்ப harrasmentஇல் வேலை போகவும் வாய்ப்பிருக்கு!

பாத்ரூம், இது ரொம்ப வருட பிரச்சனைங்க.. நிறைய பள்ளிகளில் பார்த்திருக்கேன். நம்ம வரையில் எப்படி சுத்தமா இருக்கிறதுன்னு தான் பார்க்க வேண்டி இருக்கு.. நல்ல சுத்தமான பாத்ரூம் இல்லாத பள்ளிக்கு அங்கீகாரமே கொடுக்க கூடாது.. பள்ளிகள் என்ன - கல்லூரிகளில் கூட இந்தப் பிரச்சனை இருக்கு.

என் தங்கை படித்த இஞ்சினியரிங் கல்லூரியில்- பத்து வருடத்துக்கு முன் - புது வளாகம் கட்டினாங்க. ஆனா பாத்ரூம் கட்டுறதுக்கு முன்னாடியே அந்த வளாகத்தைத் திறந்துட்டாங்க.. அப்புறமென்ன, பொண்ணுங்க ஒவ்வொரு recessஇலும், ரெண்டுமைல் தள்ளி இருக்கும் பழைய வளாகத்துக்கு ஓடிப் போய் க்யூவில் நின்னு பாத்ரூமுக்குப் போயிட்டு திரும்பி க்ளாஸ் ஆரம்பிக்குமுன் ஓடி வருவாங்க.. ஆறு மாசம் வரை இப்படித் தான் போச்சு! இன்னும் இதெல்லாம் மாறலைன்னா ரொம்ப கஷ்டமா இருக்கு!

இதெல்லாம் பார்க்காம எதுக்கு பள்ளிக்கு அனுமதி கொடுக்கிறாங்க?!