Tuesday, October 30, 2012

வெரைட்டி- அக்டோபர்(2012)

போத்தீஸ் புதிய கடை ஜி.என்.செட்டி ரோடில் திறந்து இருக்கிறார்கள். விலை அதிகம் என்று தோன்றுகிறது. 10 மாடிகளுக்கும் எக்ஸ்கலேட்டர் வைத்திருப்பது அருமை. அதான் விலை ஜாஸ்தியோ. கடையின் அகலம் சிறியது. கார் பார்க்கிங்கிற்கு சைடில் நிறைய இடம் விட்டிருக்கிறார்கள். முதன் முதலில் திருநெல்வேலியில் இவர்கள் கடையினை திறந்த போது நானும் என் தங்கையும் அங்கு போனதை பற்றி பேசி கொண்டே இந்த புதுக் கடையில் ஒன்றுமே எடுக்காமல் சும்மா சுத்தி பார்த்துட்டு திரும்பிவிட்டோம். அங்கிருந்து நிறைய பேர் பழைய போத்திஸுக்கு வழி கேட்டு கொண்டும், ஆட்டோ வைத்து கொண்டும் இருந்தார்கள்.

 எலக்ட்ரிக் ட்ரையினில் ஃப்ர்ஸ்ட்க்ளாஸில் தி.நகர் போய் கொண்டிருந்த போது கிண்டியில் ஒரு கிராமத்து பையனும் பெண்ணும் ஏறினார்கள்.அவர்களிடம் இது ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் என்று சொன்னதும் அடுத்த பெண்கள் கம்பார்ட்மெண்ட்டில் அந்த பெண் மட்டும் ஓடி போய் ஏறி விட்டது. அந்த பையனிடம் அடுத்த ஸ்டேஷனில் பெட்டி மாறிவிடு என்று சொல்லி கொண்டிருக்கும் போதே வந்து கொண்டிருந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் சைதா பேட்டை ஸ்டேஷன் வரும் போது கரெக்டா அந்த பையனை பிடித்து விட்டார். தெரியாமல் ஏறிட்டேன் என்று அந்த பையன் கெஞ்சியதை சிறிதும் மதிக்கவில்லை.கீழே இறக்கி வசூலிக்க ட்ரை செய்து கொண்டிருந்தார். பாவம் அந்த பையன் கையில் ஒரு 500 அல்லது 1000 ரூபாய் மட்டுமே இருந்திருக்கும். அந்த பெண்ணும் இறங்கி கெஞ்சி கொண்டிருந்தது. நிறைய பேர் தெரியாமல் ஏறி இப்படி மாட்டி கொள்கிறார்கள்.தீவாளி ட்ரெஸ் வாங்க போய் கொண்டிருந்தவர்களுக்கு தண்டம்.அடிக்கடி இப்படி தெரியாமல் சிலர் ஏறி தண்டம் அழுகிறார்கள்.ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் பெட்டியின் வெளியில் ஏதாவது டார்க் கலர் பெயிண்டாவது அடித்து வைக்கலாம்.ஃபர்ஸ்ட் க்ளாஸ் என எழுதி இருப்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை.

 கார் ஆக்ஸிடெண்ட்டால் ஏற்பட்ட முதுகு பிரச்சனைக்கு டச் தெரபி போகலாம் என்று ஃப்ரெண்டிடம் விசாரித்ததில் பல்லாவரம் கண்டோன்மெண்ட் ஸ்கூலில் திங்கள், வியாழகிழமைகளில் மாலையில் ட்ரீட்மெண்ட் எடுத்து கொள்ளலாம் என்று தெரிந்து நேற்று போய் வந்தேன். சித்தா டாக்டர் ஒருவரிடம் கன்சல்ட் செய்து கொண்டு அவர் சொன்ன ஒரு தொடுவர்மத்தை அங்கிருந்த வாலண்டியர்ஸ் செய்து விடுகிறார்கள். செய்யும் போது உடனே பாரம் குறைந்த மாதிரி இருந்துச்சு. ஆயில் ஒன்றும் கொடுத்து இருக்கிறார்கள். வலி இல்லை.ஏதோ முதுகில் வெயிட்டாக இருப்பது போல ஒரு உணர்வு. அங்கே நான் போன போது 50க்கும் மேற்பட்டவர்கள் ரெகுலராக வருவது தெரிந்தது. சுகர்,பி.பி. கை,கால், இடுப்பு, முதுகு, கழுத்து வலிக்கு நிறைய பேர் வருவது தெரிந்தது. 8 சிட்டிங்கிற்கு 200 ரூபாய் தான் வாங்குகிறார்கள். எண்ணெய்க்கு 100 ரூபாய். திருமூலர் வர்ம ஆராய்ச்சி நிலையம் இந்த மையத்தை நடத்துகிறது.

2021 வரை கரெண்ட் பிரச்சனை இருக்க தான் செய்யுமாம்.கரெண்ட் உற்பத்தி அதிகரித்தாலும் உபயோகமும் அதிகரிக்கும் அதனால் பிரச்சனை தான். எல்லா மாநிலங்களுக்கும் குஜராத் தவிர இதே பிரச்சனை அடுத்த இரண்டு வருடங்களில் வருமாம். . இப்பவே மேட்டூர், வடசென்னையில் போடப்பட்ட புது ப்ராஜ்க்டுகள் முடிவடைந்த நிலையில் இருந்தாலும் உற்பத்தி ஆன கரெண்டை எடுத்து செல்ல துணை மின்நிலையங்கள் அமைக்க நில கையகப்படுத்தும் நடவடிக்கை பேப்பர் வடிவிலேயே இருக்கிறதாம். அதை விரைந்து முடிப்பதை விட்டுட்டு முதலமைச்சர் தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதி வருவதை அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறதாம். கிடைக்கும் மின்சாரத்தை சிக்கனமாய் பயன்படுத்துவோம்.


12 comments:

CS. Mohan Kumar said...

//அங்கிருந்து நிறைய பேர் பழைய போத்திஸுக்கு வழி கேட்டு கொண்டும், ஆட்டோ வைத்து கொண்டும் இருந்தார்கள்.//

:))



Avargal Unmaigal said...

//கார் ஆக்ஸிடெண்ட்டால் ஏற்பட்ட முதுகு பிரச்சனை//

எப்ப எப்படி ஆச்சு?

Avargal Unmaigal said...


//முதலமைச்சர் தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதி வருவதை அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறதாம்///

நடக்கிற காரியத்தை எந்த முதலைமைச்சர்களும் செய்ய மாட்டார்களோ?

ADHI VENKAT said...

நிறைய தகவல்கள்....

முதுகு வலிக்கு தெரபி பரவாயில்லையே....

கோவை நேரம் said...

தீபாவளி பர்ச்சேஸ் முடிந்தது போல...

வெங்கட் நாகராஜ் said...

சுவையான வெரைட்டி...

மின்சாரம் - :(

rajalakshmiparamasivam said...

உங்கள் வெரைட்டி சூப்பர்.
தீபாவளி மிக்சர் போல் சுவையாக இருந்தது.

அமுதா கிருஷ்ணா said...

அவர்கள் உண்மைகள் S ஆக பார்த்தேன் என்ற என்னுடைய முந்தைய பதிவில் ஆக்சிடெண்ட் பத்தி எழுதி இருக்கேனே.

அமுதா கிருஷ்ணா said...

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி

காப்பிகாரன் said...

இந்த நாடுள்ள பிறந்தாச்சு வேற என்ன பண்ற்றது

வலையுகம் said...

பகிர்வுக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

முதுகுவலி குணமாகிவிட்டதா?