Tuesday, October 16, 2012

ட்ரையின் குடும்பம்

ரொம்ப தூரம் ட்ரையினில் போனது சென்னையில் இருந்து அஸ்ஸாமில் இருக்கும் கெளஹாத்திக்கு.சென்னையில் வியாழக்கிழமை காலை 6.20 ற்கு ஏறி கல்கத்தா மறுநாள் வெள்ளி காலை 11 மணிக்கு போனது.அப்படியே நியூஜல்பைகுரி,காமாக்யா வழியாக சனிக்கிழமை காலை 6 மணிக்கு அஸ்ஸாம் தலைநகர் கெளஹாத்திக்கு போய் சேர்ந்தோம்.48 மணிநேரப் பயணம். அங்கிருந்து காரில் மேகாலயா தலைநகர் ஷில்லாங் போய் சேர்ந்தோம்.என் இரு மகன்களையும் ட்ரையினில் சீட்டில் பிடித்து உட்கார வைக்கவே பெரும்பாடு படணும்.ஏசியில் இருக்க பிடிக்காமல் இரண்டும் கேட் அருகிலேயே போய் அமர்ந்து கொள்ளும்.நைட் தான் ஒழுங்கா சீட்டிற்கு வரும்.நேரத்திற்கு சாப்பாடு,படிக்க புத்தகம்,பாட்டு கேட்க ஐ-பாட் வெளியில் வேடிக்கை என்று நாட்கள் போனதே தெரியவில்லை. போகும் போது கிருஷ்ணா,கோதாவரி,பிரம்மபுத்திரா என்று நிறைய தண்ணீருடன் கூடிய பெரிய ஆறுகள். அருணாசல்பிரதேஷில் திபுருகார் வரை ட்ரையின் போகிறது. (60 மணி நேரம்).
சென்னை - ஜம்முதாவி போனோம். (நேராக போனால் 55 மணிநேரம்) ஆனால் டில்லியில் ஒரு நாள் தங்கி அன்று இரவு ஜம்மு கிளம்பினோம். எனவே கெளஹாத்தி போனது தான் அதிக நேரம் ட்ரையினில் இருந்ததாக கணக்காகிறது.


ஒரு முறை ட்ரையினில் திண்டுக்கல்லிற்கு போகும் போது திருச்சிக்கு முன்பு டால்மியாபுரம் அருகில் காலை 4 மணிக்கு ட்ரையின் நின்றது.ஒரு மணிநேரம் ஆகியும் ட்ரையின் நகரவேயில்லை.எங்களுக்கு முன்னால் சென்ற ஒரு கூட்ஸ்  டிரெயில் ஆகி விட்டதாம்.விசாரித்ததில் எப்ப ட்ரையின் கிளம்பும் என்றே தெரியாது என்றார் ட்ரைவர். நான் என் குழந்தைகளுடன் ட்ரையினை விட்டு இறங்கி கொஞ்ச தூரம் நடந்து சென்று அங்கிருந்த ஒரு கிராமத்தில் தோட்டம்,கிணற்று மேட்டுடன் இருந்த ஒரு வீட்டில் பெர்மிஷன் கேட்டு எங்கள் குடும்பம் குளித்தே விட்டோம். என் கணவர் என்னை திரும்ப ட்ரையினில் விட்டு விட்டு அந்த கிராமத்தில் இருந்த ரிக்‌ஷாவில் ஏறி பக்கத்தில் இருந்த ஒரு ஊருக்கு போய் காலை சாப்பாடு,பசங்களுக்கு பால் எல்லாம் வாங்கி வந்தார்.மாலையில் திண்டுக்கல் போய் சேர்ந்தோம்.

 திருநெல்வேலியிலிருந்து திண்டுக்கல்லிற்கு பஸ்ஸில் வந்து கொண்டு இருந்த போது ராஜீவ் காந்தி இறந்த செய்தி.நைட் ஒரு மணிக்கு விருதுநகருக்கு 3 கி.மீ முன்னாடியே பஸ்கள் நிறுத்த பட்டன.நடந்தே விருது நகர் வந்து அங்கு கிடைத்த ஒரு பாடாதி ரூமில் தங்கி அடுத்த நாள் பஸ்கள் எதுவும் ஓடாததால் அங்கேயே இருந்தோம்.என் கணவர் ஸ்டேஷன் போய் அன்று மாலை முத்து நகர் எக்ஸ்பிரஸ் வருகிறது அதில் திண்டுக்கல் போய் விடலாம் என்று சொல்லவே அன்று ட்ரைனால் தான் தப்பித்தோம். இரவு திண்டுக்கல் வந்து நிம்மதியானோம்.

மங்களூரிலிருந்து கோவா வரை ட்ரையினில் இரண்டாவது வகுப்பில் பயணம் செய்ய வேண்டும். அவ்வளவு அருமையான கொங்கன் ரயில்வே பாதையாகும்.மிகப்பெரிய சுரங்கப்பாதைகளும்,ஆறுகளும்,பச்சை பசேலென்று எதை பார்ப்பது என திண்டாட வேண்டும்.

ஜெய்ப்பூரிலிருந்து ஜெய்சால்மர் வரும் போது ஓர் இடத்தில் மெல்லிய சலித்தமாதிரியான மண் துகள்கள் ட்ரையின் எங்கும் பரவியது. வாயெல்லாம் மண்.அந்த இடம் போக்ரான். வாஜ்பாய் பிரதமராய் இருந்த போது அணுவெடிப்பு நிகழ்த்திய பாலைவன பகுதியாகும். ட்ரைன் போற வேகத்தில் அப்படி ட்ரையினே மண்.

 இப்பவும் சென்னையில் எங்கேனும் போக வேண்டும் என்றால் என் சாய்ஸ் எலக்ட்ரிக் ட்ரையின் தான். என் மகன் நகுல் அவனின் 10 வயது வரை பெரியவனாகி ஏசிகார் வாங்கி அதில் அமர்ந்து ரயில்வே கேட் அருகில் நிறுத்தி போற வர ட்ரைன்,குட்ஸ் வண்டிகளை பார்த்து கொண்டே இருப்பேன்மா என்பான்.அப்போது அவனுடைய மிக பெரிய ஆசை அது ஒன்று தான்.எங்கள் குடும்பமே ட்ரையினில் பயணிப்பதை மிக விரும்பும்.ட்ரையினில் ஏறியதும் side lower berth-க்கு இப்பவும் சண்டை போட்டு கொள்வோம்.என் கணவர் ரயில்வேயில் இருந்த போது ரிசர்வ் செய்ற போதே இரண்டு சைட் லோயர் கேட்டு வாங்கி வருவார்.என் சின்ன மகன் Rishi ட்ரையின் போகாத ஊருக்கு வரவே மாட்டான்.பஸ் என்றால் வரவில்லை என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்லி விடுவான்.ரயில் போகும் ஊரில் தான் அவனுக்கு பெண் பார்க்கணும்.

ஒரு முறை தெரிந்த ட்ரைவர் ஒருவருடன் சேர்ந்து இரண்டும் அவர் கூடவே இஞ்சினில் 3 மணிநேரம் பயணம் செய்தார்கள்.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை அடிக்கடி இப்படி ட்ரையின் பயணம் செய்வதற்கு காரணம் எங்களுக்கு டிக்கெட் ஃப்ரீ.
 

12 comments:

ஹுஸைனம்மா said...

அதானே பாத்தேன்... வாழ்க்கையில் பெரும்பகுதி ட்ரெயின்லயே ஓடினா மாதிரி தெரியுதே... எப்படின்னு யோசிக்கும்போதே, கரெக்டா சொல்லிட்டீங்க...

//அடிக்கடி இப்படி ட்ரையின் பயணம் செய்வதற்கு காரணம் எங்களுக்கு டிக்கெட் ஃப்ரீ.//

;-))))))

ஏன்னு தெரிஞ்சுக்கலாமா? ரெயில்வே வேலையா?

CS. Mohan Kumar said...

சுவாரஸ்யம்

எனக்கும் ரயிலில் தான் பயணம் செய்யவே பிடிக்கும்

//மங்களூரிலிருந்து கோவா வரை ட்ரையினில் இரண்டாவது வகுப்பில் பயணம் செய்ய வேண்டும். அவ்வளவு அருமையான கொங்கன் ரயில்வே பாதையாகும்.மிகப்பெரிய சுரங்கப்பாதைகளும்,ஆறுகளும்,பச்சை பசேலென்று எதை பார்ப்பது என திண்டாட வேண்டும்//

அவசியம் போகணும் என ஆசை வருது !

ஹுசைனம்மா: அவங்க சார் ரயில்வேயில் வேலை செய்கிறார் என நினைக்கிறேன்

அமுதா கிருஷ்ணா said...

ஹூஸைனம்மா கிருஷ்ணாவிற்கு ரயில்வேயில் வேலை.

அமுதா கிருஷ்ணா said...

மோகன் குமார் ஒரு முறை கொங்கன் ரயில்வேயில் போய் வாருங்கள். ஆமாம் சார் ரயில்வேயில் 21 வருடங்கள் வேலை பார்த்தார்.

வெங்கட் நாகராஜ் said...

கொங்கன் ரயில்வே - இந்திய ரயில்வேயின் அற்புதமான ஒரு திட்டம்... போகும் இடங்களெல்லாம் அள்ளிக்கொண்டு போகும் அழகு கொட்டிக்கிடக்கும்... நிச்சயம் செல்ல வேண்டிய பாதை - செல்லாதவர்கள் நிச்சயம் செல்ல வேண்டும்!

எனக்கும் ரயில் தான் பிடிக்கும்! பேருந்து எனில் இரவு நேரப் பயணம்! அதுவும் தூங்காது விழித்து பயணம் செய்வது...

ADHI VENKAT said...

எனக்கும் பேருந்தை விட ரயில் பயணம் தான் பிடிக்கும். திருமணமானதிலிருந்து கோவையிலிருந்தும், சென்னையிலிருந்தும் தில்லிக்கு நீண்ட பிரயாணம் செய்தாயிற்று.

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்,கோவை2தில்லி.

Anonymous said...

இடைவிடாத இலவச ரயில் பயணம். ஒரு பாடாதி ரூமில் ஹிஹிஹி:)

ஸ்வர்ணரேக்கா said...

ரிக்‌ஷாவில் ஏறி பக்கத்தில் இருந்த ஒரு ஊருக்கு போய் காலை சாப்பாடு,பசங்களுக்கு பால் எல்லாம் வாங்கி வந்தார்.

--- அடேயப்பா.. ஆச்சர்யமா இருக்கு.. ட்ரெயின் நின்னுட்டா இப்படிக்கூட பாசிட்டீவா வேலை செய்யலாமா.. ட்ரையின் குடும்பம் மட்டும் அல்ல ஆச்சர்யமான குடும்பமும் கூட தான்...

இராஜராஜேஸ்வரி said...

"ட்ரையின் குடும்பம்"

எப்போதும் அலுக்கவே அலுக்காத சலிக்கவே சலிக்காத பயணம் ரயில் பயணம்தான்

குட்டன்ஜி said...

இலவசமா?ஜோர்தான்;ஆனாலும் பயணங்கள் பற்றிய நினைவு அருமை!

Vetirmagal said...

ரொம்ப ரசித்து பயணம் செய்து எழுதப் பட்டுள்ளது. நீங்கள் சொல்வது சரி. ட்ரெயின் பயணங்கள் நன்றாக இருக்கும்,.