Wednesday, November 14, 2012

ஒரு அழகு படமும் ஒரு அழுக்கு படமும்

இரண்டாவது முறை வாழ்க்கை கிடைக்காது-
Zindagi Na Milegi Dobara,(ZNMD)

 Zoya Akhtar என்ற பெண் டைரக்டர் எடுத்த படம். Farhan Akhtar தயாரித்து உள்ளார். தம்பி தயாரிக்க அக்கா இயக்கிய படம். HRITHIK ROSHAN,ABHAY DEOL,FARHAN AKHTAR இவர்களுடன் காத்ரீனா கயிஃப் நடித்த படம்.படம் முழுவதும் ஸ்பெயின்,எகிப்தில் எடுக்க பட்டுள்ளது.மூன்று ஃப்ரெண்ட்களும் பேச்சிலராக இருக்கும் போதே வாழ்க்கையை நன்கு அனுபவிக்க ஸ்பெயின் போகிறார்கள்.ஸ்கூபா டைவ்,ஸ்கை டைவ்,புல் ரன் என்று மூன்று வித விளையாட்டுகளில் மூவரும் ஈடுபடுவதை கொஞ்சமா கதையும், நிறைய பணமும் சேர்த்து சொல்லி இருக்கிறார்கள். காத்ரீனா,ஹிரித்திக் ரோஷன் காதலும், காரில் மூன்று நண்பர்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதும் நல்லாயிருக்கு. Javed Akhtar கவிதை சில காட்சிகளில் வந்து கொண்டே இருக்கிறது. இதர்,உதர்,ஸிந்தஹி,பாரத்,மேரா,துமாரா,கஹாங்,ஹவா,ஹை பஹூத்,அச்சா அப்படி இப்படின்னு 30 வார்த்தைகள் மட்டுமே ஹிந்தியில் தோடா தோடா தெரியும் ஹை. எனவே, கவிதைகளை ரசிக்க முடியலை.

 16 டன் தக்காளி போர்ச்சுகலிலிருந்து ஸ்பெயினிற்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கொண்டு வந்து தக்காளி பாட்டை ஷூட் செய்தார்களாம்.இந்த பாடலில் நடித்த பிறகு நால்வரும் ரொம்ப நாளைக்கு தக்காளி சேர்த்த எந்த உணவையும் சாப்பிடவேயில்லையாம்.இந்த பாட்டை பார்த்தாலே ஒரு மாதத்திற்கு தக்காளி வேண்டாம் போல.

                             படத்தில் வரும்  ஊர்கள்,ஹீரோ,ஹீரோயின் அழகோ அழகு.


DELHI BELLY:

முதல் படத்தில் கவிதையை மட்டும் தான் ரசிக்க முடியவில்லை. இதில் நிறைய காட்சிகளை பார்க்கவே முடியவில்லை. டெஸ்ட்டிற்காக லேப்பிற்கு கொடுக்க வேண்டியதை(?) கடத்தல்கார்ருக்கும்,கடத்தல்காரருக்கு கொடுக்க வேண்டிய வைர பார்சலை லேப்பிற்கும் கொடுத்து தொலைப்பதால் என்ன நேரிடுகிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார்கள்.ரொம்ப நேரம் ஆங்கிலத்திலேயே அனைவரும் பேசி கொண்டு இருந்தனர். திடீரென்று ஹிந்தியிலும் பேசினார்கள். இது ஹிந்தி படம் தானா? அமீர்கான் தயாரித்து இருக்கிறார். அழகான இம்ரன் இதில் ஒரு சீனில் கூட அழகா இல்லை. டில்லியின் மிக குறுகலான சந்துக்கள்,ஹீரோ தங்கி இருக்கும் அந்த அரத பழைய வீடு என்ன ஒரு வீடு.பார்த்தாலே ஓடி விடலாம் போல இருக்கிறது.  அப்படி ஒரு வீட்டை அமைக்க இண்டீரியர் டிசைனர் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார்!!! பேச்சிலர்ஸ் வீடு இவ்ளோ மோசமாகவா இருக்கும்.ஒரு அழகான காரையும் நாசமாக்கி.கடத்தல்க்காரர் அசத்தலாய் நடித்து இருக்கிறார். நிறைய ஹிந்தி வார்த்தைகள் தெரியாததால் இதில் வரும் கெட்ட வார்த்தைகள் புரியவில்லை.நல்லதா போச்சு. இந்த படம் தான் தமிழில் ஆர்யா நடிக்க சேட்டை என்ற பெயரில் வர இருக்கிறது. இங்கே ரொம்ப அழுக்கு இல்லாமல் கண்ணியமா வருமா பொறுத்திருந்து பார்ப்போம்.


படத்தில் வரும் ஊர்,ஹீரோ, ஹீரோயின் அழுக்கோ அழுக்கு.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சேட்டை- இந்த படம் மூலம் தான் வருகிறதா...? நன்றி...

எம்.ஞானசேகரன் said...

ஏதோ ஒரு இணைப்பின் மூலம் உங்கள் வலைப்பக்கம் வந்தேன். வந்து.... இன்று முழுவதும் உங்கள் வலைப்பதிவுகளிலேயே லயித்துப்போய் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தேன். மிக நன்றாக எழுதுகிறீர்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

சாந்தி மாரியப்பன் said...

ஜிந்தகி நா மிலே தோபாரா.. அருமையான படம். எவ்ளோ தடவை பார்த்தாலும் ரசிக்கலாம்.

டெல்லி பெல்லி.. இங்கே ரொம்ப எதிர்பார்ப்பையும் எதிர்ப்பையும் கிளப்பியது. இம்ரானுக்காக பார்க்கலாம் என்று உட்கார்ந்தால்,.. நாலு சீனுக்கு மேல் பார்க்க முடியலை.

Anonymous said...

மிக நன்றாக இருந்தது.