இன்றைய காலாமானால் மிக எளிதாக மருத்துவர்கள் இவர்களை உயிருடனே பிரித்து இருப்பார்கள். இறந்த இவர்களின் ஒரே லிவரை இன்றும் பென்சில்வேனியா மியூசியத்தில் வைத்து இருக்கிறார்கள். இவர்களுடைய 200 ஆவது பிறந்த நாளை போன வருடம் இவர்களின் வம்சத்தில் வந்தவர்கள் ஒன்று கூடி கொண்டாடி இருக்கிறார்கள்.
ஒட்டி பிறந்த இந்த இரட்டை சகோதரிகள் டோரி,லோரி போன செப்டம்பர் 14-ல் தங்கள் 52 ஆவது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்கள்.
இப்படி பிறக்கும் இரட்டையர்களுக்கு சயாமிஸ் இரட்டையர்கள் என்று பெயர். லோரி Ten-pin பவுலர்.டோரி பாடகராம். தலை ஒட்டி பிறந்த இவர்களை பிரிக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.ஆனால் எல்லோருடைய கணிப்பையும் மீறி 50 வருடங்கள் வாழ்ந்து வருகிறார்கள். டோரி தன் பெயரை ஜார்ஜ் என்று மாற்றி கொண்டார். சிறிய வயதிலிருந்து இவருக்கு ஆண் போல் இருக்க தான் பிடித்துள்ளதாம். இவரால் நடக்க முடியாது. வீல் சேரில் அமர்ந்துக் கொள்ள அதை மற்றவர் தள்ளிக் கொண்டே நடக்கிறார். இவர்கள் வசிப்பது அமெரிக்காவின் பென்சில்வேனியாவில்.லோரியின் உயரம் 5’1.ஜார்ஜின் உயரம் 4’4.என்ன வாழ்க்கை.
ரிலீஸான முதல் மூன்று நாட்கள் இனிமேல் எந்த தமிழ் படமும் பார்க்க கூடாது என்று சகுனி முதல் நாள் பார்த்து விட்டு சபதம் போட்டு இருக்கிறேன். என் மகன் நகுல் காலை 8 மணிஷோவிற்கு போய்விட்டு அப்படியே ஆஃபிஸ் போய் இருக்கிறான்.அவன் நல்லாயிருக்குன்னு சொன்னா, இன்னும் ப்ளாக்கர்ஸ் சொன்னா மட்டுமே மாற்றான் படம் பார்க்கும் எண்ணம். அது வரை உண்மையான மாற்றான்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
5 comments:
சரி உங்க மகன் என்ன சொன்னார் ? படம் தேறுமா ?
மாற்றான்....
என்ன ஒரு கஷ்டம் இவர்களுக்கு!
ஓ! யூ டூ "சகுனி" விக்டிம்?? சேம் ப்ளட்!! :-))
"தாண்டவம்" பாத்தீங்களா அக்கா?! என் விமர்சனம் பாத்துட்டு போகணும்னு கமெண்ட் போட்டிருந்தீங்க.. எனக்கு ஒரே டென்ஷன்.... எங்க பாத்துட்டுவந்து திட்டுவீங்களோன்னு! :-))
இந்தப் பதிவு ரொம்ப ரொம்ப அழகா இருந்திச்சு....... உண்மையிலேயே என்ன வாழ்க்கைன்னு தோணுதுதான் ஆனாலும் அதையும் அர்த்தமுள்ளாதாக்கி வாழ்ந்திருக்காங்களே இந்த "4" பேரும் :-)
அருமையான பதிவு அக்கா....
உண்மையான மாற்றான்கள் பற்றீய தகவல்களுக்கு நன்றி.
என்ன வாழ்க்கையோ !!
மாற்றான் வாழ்க்கை !
Post a Comment