விமானத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது குழந்தை பிறந்தால் பிறப்பு சான்றிதழில் பிறந்த இடம் என்ன போடுவது? 30,000 அடி உயரம் என்றா? குழந்தையின் சிட்டிசன்ஷிப்? இதற்கு தீர்வாக UNO பறந்து கொண்டிருக்கும் ஃப்ளைட் எந்த நாட்டுடையதோ அந்த நாட்டின் பெயரை குழந்தையின் சிட்டிசன்ஷிப்பாக குறிப்பிட சொல்கிறது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது பணிபெண்களுக்கு பிரசவம் பார்க்க ட்ரையினிங்கே கொடுத்து வருகிறதாம். ஏனெனில் வருடம் ஒரு முறை அவர்களின் ஃப்ளைட்டில் பிரசவம் நடக்கிறதாம். இந்த குழந்தைகளுக்கு பிறக்கும் போதே அவசரம் தான்.அப்பெல்லாம் அம்மாக்கள்,பாட்டிகள் வீட்டிலேயே இந்த ரூமில் அவன் பிறந்தான், அந்த ரூமில் இவன் பிறந்தான் என்று காண்பிப்பார்கள்.
அமெரிக்காவில் தன் அப்பாவையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி இருக்கிறார் வலாரி என்ற 60 வயது பெண். கணவர் இறந்த பிறகே அவருக்கு இந்த உண்மை தெரிந்து உள்ளது. என்ன கொடுமை இது.
"Feeling cool. Today Dumped My ex-girlfriend.Happy independence Day" அப்படிங்கிற தன் காதலனின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் பார்த்துட்டு ஜார்கண்ட்டை சேர்ந்த பெங்களூரு ஐ.ஐ.எம்மில் படித்த மாலினி என்ற பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கிறார்.ஸ்டேட்டஸ் போட்ட அறிவாளி ரூர்க்கி ஐ.ஐ.டி மாணவராம்.என்ன படிச்சு என்ன யூஸ்?
புரூனே சுல்தானின் பெண் கல்யாணம் செப்டம்பர் 22-ல் நடந்ததாய் பேப்பரில் படித்தேன்.சரி நகை விற்கிற விலையிலே 11 குழந்தைகளை பெற்ற சுல்தான் நகை நட்டுன்னு தன் பெண்ணிற்கு என்ன போட்டார்னு கொஞ்சம் நெட்ல ஆராய்ந்ததில் இந்த சுல்தானுக்கு சுக்கிரன் செம உச்சம். நம்ம திருப்பதி வெங்கியையே முந்திடுவார் போல இந்த புரூனே நாட்டு சுல்தான்.அந்த நாட்டில் 167,000 பேரல் ஆயில் ஒரு நாளைக்கு எடுக்கப்படுகிறதாம்.மலாய் மொழியும்,இஸ்லாமும் தான் பெரும்பான்மையினரின் மொழியாக,மதமாகவும் உள்ளது. அங்கு அரசு ஆஸ்பத்திரியில் கிடைக்காத ட்ரீட்மெண்டிற்கு மக்களை மேல் நாடுகளுக்கு அரசே தன் செலவில் அனுப்பி வைக்குமாம். அங்கு இரண்டு பேர்களுக்கு ஒரு கார் இருக்குதாம். இருக்காதா பின்ன பெட்ரோல் இப்படி சல்லிசா கிடைச்சா?சுல்தானின் அரண்மனையில் 1788 அறைகளாம்.சுல்தான் 3000 கார்கள் வைத்திருக்கிறாராம்.சரி சரி சொர்க்கமே என்றாலும் அது நம்மை ஊரை போல வருமா?

6 comments:
கொஞ்சம் நம்மூருக்கும் சல்லிசா பெட்ரோல் அனுப்பலாமே.
யாராவது மெயில் அனுப்பலாமா:)
பல்சுவை செய்திகளின் தொகுப்பு அருமை.
சுவாரஸ்யமாக இருந்தது....
சில செய்திகள் ஏற்கனவே படித்தது என்றாலும் தமிழில் இந்த செய்திகளை படிப்பதில் ஒரு அழாதி சுகம்தான்...தொடருங்கள்
சுவாரசியமான செய்திகள்...
வெரைட்டியான தகவல்கள்...
Post a Comment