பிறந்த (செப்டம்பர் 7) அன்றே சூர்யா ஹாஸ்ப்பிட்டலில் சேர்க்கப்பட்ட என் தம்பி மகள் அக்டோபர் ஒன்றில் நலமுடன் வீடு திரும்பினாள். ஐம்பது ஆயிரம் சம்பாதிக்க வேண்டும் என்றே அவசரமாக குழந்தையினை பிரீமெச்சூராக தாம்பரம் ஆஸ்பத்திரியில் சிசேரியன் செய்துள்ளார்கள்.செப்டம்பர் 10-ல் குழந்தையின் அம்மாவை டிஸ்சார்ஜ் செய்து வடபழனி சூர்யாவிற்கு அனுப்பிய தாம்பரம் லேடி டாக்டர் தன் சொந்த ஊருக்கு அன்று இரவே ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த ட்ரையினில்(நர்ஸ் கொடுத்த தகவல்) நலமுடன் போய் சேர்ந்தார். ஊரிலிருந்து திரும்பி வர 6 நாட்கள் ஆகும் அதற்குள் என் தம்பி வேறு டாக்டரிம் போய் விட்டால் என்ன செய்வது என்ற நல்லெண்ணத்தில் சீக்கிரமாக சிசேரியன் செய்துவிட்ட அந்த லேடி டாக்டருக்கு குழந்தை கிடையாதாம்.யாருக்கு சொத்து சேர்க்கிறாரோ தெரியவில்லை. சூரியா ஆஸ்பத்திரிக்கு ஒரு லட்சம் மொய் எழுதிவிட்டு தப்பித்தோம்,பிழைத்தோம் என்று தன் அருமை மகளுடன் வீடு திரும்பினான் என் தம்பி.
தாம்பரம் ஹாஸ்பிட்டல் லட்சணம் இப்ப தான் தெரியுது.
சூரியா ஹாஸ்பிட்டல் லட்சணம். ஒரு லட்சணம் தன் குணமுள்ள இன்னொரு லட்சணத்திடம் தானே நம்மை அனுப்பும். டாக்டர் சொல்வதை அப்படியே உண்மை என்று எடுத்து கொண்டு யோசிக்க முடியாமல் இரண்டு ஹாஸ்பிட்டலுக்கும் போய் மாட்டி கொண்டு தப்பித்து வந்தார்கள்.இனிமேல் பிரசவத்திற்கும் செகண்ட் ஒப்பினியன் கட்டாயம் கேட்க வேண்டுமோ?
தாம்பரம் ஹாஸ்பிட்டல் லட்சணம் இப்ப தான் தெரியுது.
சூரியா ஹாஸ்பிட்டல் லட்சணம். ஒரு லட்சணம் தன் குணமுள்ள இன்னொரு லட்சணத்திடம் தானே நம்மை அனுப்பும். டாக்டர் சொல்வதை அப்படியே உண்மை என்று எடுத்து கொண்டு யோசிக்க முடியாமல் இரண்டு ஹாஸ்பிட்டலுக்கும் போய் மாட்டி கொண்டு தப்பித்து வந்தார்கள்.இனிமேல் பிரசவத்திற்கும் செகண்ட் ஒப்பினியன் கட்டாயம் கேட்க வேண்டுமோ?
23 comments:
//
இனிமேல் பிரசவத்திற்கும் செகண்ட் ஒப்பினியன் கட்டாயம் கேட்க வேண்டுமோ?
//
கண்டிப்பா ..
குழந்தைக்கும் பெற்றோருக்கும் எனது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளூம் . எல்லாம் வல்ல ஆண்டவன் மேலும் குழந்தைக்கு எல்லா நலங்களையும், வளங்களையும் அருள வேண்டுகின்றேன். ... வாழ்க வளமுடன்
மருத்துவமனையில் சேர்க்கும்போது அந்த மருத்துவமனையைப் பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்து அதன் பிறகே செல்ல வேண்டும். மருத்துவம் என்பது வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் நமது கவனமும் முக்கியம். இழப்பீடு என்னவோ நமக்குத்தானே...
குழந்தை நலமுடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. ஹாஸ்பிட்டல்கள் கொடுமை பயங்கரம் !!
இதுபோல முக்கியமான தருணங்களில் நாம்தான் கவனமுடன் இருக்கனும்.
அல்ஹம்துலில்லாஹ்
நல்ல தகவலை சொல்லியிருக்கீங்க
தாய்க்கும் சேய்க்கும் வாழ்த்துக்கள்
சரியான எச்சரிக்கை பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
தாயும் சேயும் நலம் பெற வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html
அப்பாடா..நல்லபடியாக திரும்பி வந்ததில் மகிழ்ச்சி.
என்ன செய்வது நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்
குழந்தை நலமுடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
ஹாஸ்பிடல்கள் பணம் பிடுங்கும் இடங்களாக மாறிவிட்டன....
தாயும் சேயும் நலன் என அறிந்து மகிழ்ச்சி...
இதுபோன்ற சிக்கலான தருணங்களில் நமக்கு மருத்துவரை நம்புவதைத் தவிர வேறு ஆப்ஷனே கிடையாது என்பதுதான் இவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. இறைவன்தான் இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து காக்க வேண்டும்.
குட்டிப் பாப்பாவுக்கு வாழ்த்துகள் :))
பிள்ளையாரே.. இந்த டாக்டருங்க எப்போ மனுஷங்களா நடந்துக்குவாங்களோ :((
பாப்பா நலமுடன் இருப்பது குறித்து மகிழ்ச்சி.
அவசர நேரத்தில் மருத்துவமனை பற்றியோ, மருத்துவரைப் பற்றியோ யோசிக்க தோணாது...அது தான் அவர்களுக்கு வசதியாக போய் விட்டது.
சுயநலத்திறகாக இவ்வாறு மருத்துவர்கள் செய்கிறார்கள் என அறியும்போது வேதனையாக இருக்கிறது.
பணத்துக்காக உயிர்களோட விளையாடற இவங்களை என்னன்னு சொல்றது :-(
Thank God that the baby is safe. I can't believe they did this..... mmmm.....
டாக்டர்களை நம்பித்தானே அவர்களிடம் போகிறோம். நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று நாம் நம்புகிற டாக்டர்களே இப்படி நடந்து கொண்டால் என்ன செய்வது? ஆண்டவன்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்!
“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
பாருங்க அந்த டாக்டருக்கே குழந்தை இல்லைன்னா, குழந்தையின் அருமை இனிமை எப்பிடி புரியும்...!!!
Dear Madam,
I am Sarangapani from West Tambaram.I kindly request you to attend 6 hour talk by Healer Basker on 25.12.2011 at Perambur(free entry and free food).For more details refer www.anatomictheraphy.org.
vaazgha valamudan.
எனக்கு தெரிந்து நிறைய மருத்துவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்….. என்ன செய்ய...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.
டாக்டர்கள் கிட்ட போகணும்னாலே பயம்மா இருக்கு
Post a Comment