Wednesday, September 21, 2011

ராயல் நகைகள்


 டயானா - சார்லஸ் மகன் வில்லியம் தன் தாய் டயானாவின் இந்த நிச்சயதார்த்த மோதிரத்தை தான் தன் மனைவி கேதரினிற்கு அணிவித்தார்.சிலோன் சஃபையர் என்ற அந்த புளூ நிற மோதிரம் சுற்றிலும் 14 மிக சிறிய வைரத்திற்கு நடுவில் சும்மா பளிச்சென்று இருக்குல்ல. அப்பொழுதைய பொதுமக்களும் வாங்கும் விலையில் ஒரு மோதிரத்தை டயானா செலக்ட் செய்தது மக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.


கேட் கேதரின் தலையில் வைத்திருக்கும் அந்த சிறிய க்ரீடம்(halo tiara). இந்த tiara வில்லியமின் பாட்டி இரண்டாம் எலிசபெத்துடையது.இரண்டாம் எலிசபெத்தின் 18 ஆவது பிறந்த நாளிற்கு அன்பளிப்பாக அவரது தாய் எலிசபெத்(1) கொடுக்கப்பட்ட இந்த க்ரீடம் 1936-ல் செய்யப்பட்டதாம்.

 எலிசபெத் halo tiara-வுடன் சின்ன வயதில்


கேட் கேதரின் திருமணத்தில் அணிந்திருந்த தோடுகள் அவரின் பெற்றோர் அந்த(halo-tiara) கிரிட டிசைனில் செய்து கொடுத்ததாம்.டயானாவின் மகன்கள் வில்லியம்,ஹாரி இருவரும் யாருக்கு முதலில் திருமணம் நடைபெறுகிறதோ அவர்களின் மனைவிக்கு நிச்சய மோதிரமாய் இந்த மோதிரத்தை அணிவிக்க பேசி கொண்டார்களாம்.வில்லியம் முந்திக் கொண்டார்.இத்திருமணம் நடந்ததில் இருந்து இந்த புளூ கல் மோதிர விற்பனை இங்கிலாந்தில் அதிகரித்துள்ளதாம்.

டயானா அவர் திருமணத்தின் போது அணிந்திருந்த இந்த (spencer family tiara) க்ரீடத்தினால் மாலையில் தலைவலியினால் மிகவும் அவஸ்தை அடைந்தாராம்.


அதனால் தான் கேதரின் மிக எளிமையான க்ரீடத்தை செலக்ட் செய்து கொண்டாரோ? (cartier halo tiara).

குயின் மேரி

ஜார்ஜ் V 1911-ல் டில்லியில் ஸ்பெஷல் தர்பாரில் கலந்து கொள்ள வந்த போது அவருடைய மனைவி குயின் மேரி அணிந்துள்ள இந்த க்ரீடம் டெல்லி தர்பார் tiara என்றழைக்கப்பட்டது. இந்த க்ரீடம் மேரியின் மருமகள் எலிசபெத்திற்கு(1) அளிக்கப்பட்டது. 1947-ல் எலிசபெத் டெல்லி தர்பார் கிரீடத்தை தன் தென் ஆப்பிரிக்கா விஜயத்தின் போது அணிந்திருந்தார். 60 வருடங்களுக்கு பிறகு 2005 சார்லஸின் இரண்டாவது மனைவி கமீலா ஒரு பார்ட்டியில் அணிந்து வந்தார். மேடம் பெரிய கிரீடத்தை தான் செலக்ட் செய்துள்ளார்.

கமீலா

இந்த டெல்லி தர்பார் கிரீடத்தின் மேலே இருந்த எமரால்ட் நீக்கப்பட்டிருக்கிறது.

நல்ல வேளை நம் திருமணத்தில் இப்படி க்ரீடம் வைக்கும் பழக்கம் இல்லை.இப்ப நகை விற்கும் விலையில் யாரால் முடியும்?


1911-ல் டெல்லி வந்த குயின் மேரிக்கு இந்த டெல்லி தர்பார் நெக்லஸ் பாட்டியாலா மகாராணியால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதன் பிறகு இந்த நெக்லஸ் குயின் மேரி தன் மருமகள் எலிசபெத்திற்கு கொடுத்து விட எலிசபெத் ராணிக்கு மிகவும் பிடித்த ஒரு நெக்லஸ் ஆகியது.


\
இது குயின் மேரி உள்ளங்கழுத்தில் அணிந்துள்ள நகையாகும்.
இந்த எமரால்ட் சோக்கர் டயானாவால் விரும்பி அணிய பட்டது. கழுத்தில் போட வேண்டிய இதை நெற்றியில் சில சமயம் மிக ஸ்டைலாக டயானா அணிந்து கொண்டார். 

கேதரின் தன் மாமியார் டயானாவின் சஃபையர் தோடை சிறுது மாறுதல் செய்து தொங்குவது போல் செய்துள்ளார். நகை விற்கும் விலையில் இப்படி தான் ராணிகளே ஓசியில் காலம் தள்ளுகிறார்களோ!!!! திருமணம் மற்றும் பார்ட்டிகளுக்கு போட கொடுக்கப்படும் இந்த நகைகளை யாருக்கும் கடனாக கொடுக்கவோ அல்லது விற்கவோ ராஜ பரம்பரையில் பெண்களுக்கு உரிமை கிடையாதாம்.டயானா தன் டைவர்சிற்கு பிறகு அனைத்து நகைகளையும் தன் மாமியாரிடமே திரும்ப கொடுத்து விட்டாராம். 

11 comments:

மோகன் குமார் said...

ம்ம் நான் இந்த விளையாட்டுக்கு வரலை. நல்ல வேளை நம்ம ஹவுஸ் பாஸ் அதிகம் ப்ளாக் படிப்பதில்லை

வைரை சதிஷ் said...

படங்கள் அழகா இருக்கிறது

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா எனக்கு இது புதிய தகவல் நன்றி....!!!

வெங்கட் நாகராஜ் said...

அட இவ்வளவு விஷயங்கள் ராய்ல் நகை பற்றி.... இன்னிக்கு விக்கிற விலையில் இது எல்லாம் பார்க்கத்தான் முடியும்....

ஹுஸைனம்மா said...

படங்களைப் பாத்துப் பெருமூச்சு விட்டாலும், ஒரே விஷயம் ஆறுதலாயிருக்கு!! “எங்க பரம்பரை ராஜபரம்பரையாக்கும். வர்ற மருமவளும் இதுபோல வெலகூடுன நகநட்டு கொண்டாரணும்”னு எலிசபெத் மாமியாரம்மா சொல்லாம, தன் மருமகள்களுக்குத் தன் நகைகளையே பெருந்தன்மையா கொடுத்துப் போட வச்சிருக்காங்களே!!

கோவை2தில்லி said...

படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்குங்க. தகவல்களும் அருமை.இப்போ இருக்கற நிலமையில பார்க்கத்தான் முடியும்.

குயின் மேரியின் மகள் எலிசபெத் என்று இரண்டு இடத்திலும், மருமகள் என்று ஒரு இடத்திலும் வருகிறது. எது சரி?

ஆமினா said...

//நகை விற்கும் விலையில் இப்படி தான் ராணிகளே ஓசியில் காலம் தள்ளுகிறார்களோ!!!!//
இத தான் நானும் நெனச்சேன்

Anonymous said...

Window shopping அதுக்கு தான் உள்ளதோ...?

அமைதிச்சாரல் said...

நம்ம நாட்டுலயும், மார்வாடிகளில் மருமகளுக்கு செட்டு செட்டா நகை போடற பழக்கமுண்டு. ஆனா, என்ன.. அனுபவிக்கும் உரிமை மட்டுமே அவங்களுக்கு உண்டு. விற்க முடியாது. அதே சமயம் குடும்பத்துல சொத்துப் பிரிக்கிறதா இருந்தா, மாமியார் கிட்ட அந்த நகைகளை திரும்ப கொடுத்துடவும் செய்யணும். ராஜ குடும்பத்துலயும் அப்டித்தான் போலிருக்கு.

அங்க கிரீடம்.. இங்க நெத்திச்சுட்டி. அளவு மட்டும்தான் மாறுதுங்க :-))

அப்பாவி தங்கமணி said...

ராயல் நகைகள் பற்றி சூப்பர் போஸ்ட்... அவங்களே ஓசி தான்னா...ஹ்ம்ம்... கஷ்டம் தான் போங்க... Thanks for sharing nice rare pics...

Lakshmi said...

ராயல் நகைகள் பார்க்க மட்டுமே. படங்கள் நல்லா இருக்கு.