Friday, May 20, 2011

கொள்ளைக்காரர்கள்

என் பெரிய மகன் சொந்த வீடு இல்லை என்று ஒவ்வொரு முறை வீடு மாற்றும் போதும் எப்பம்மா சொந்த வீட்டிற்கு போவோம் என்று புலம்புவான்.ஏனெனில், ஒவ்வொரு முறை வீடு மாற்றும் போதும் அதிகம் வெயிட் தூக்கி கஷ்டப்படுவது அவனே.நான், என் கணவர் எங்கள் திருமணம் வரை அவர் அவர் சொந்த ஊரில் மிக பெரிய சொந்த வீட்டில் இருந்தோம்.உங்கள் ராசி உங்களுக்கு வாடகை வீடு இளமை பருவத்தில் வாய்த்துள்ளது.ஆனால்,நிச்சயம் சீக்கிரம் சொந்த வீட்டிற்கு போய் விடுவோம் என்று சொல்லி சமாதான படுத்துவேன்.அப்பாவினை பார் எவ்வளவு பெரிய வீட்டில் வளர்ந்தவர் இன்று அவரும் தானே வாடகை வீட்டில் இருக்கிறார் என்று சமாதானம் செய்வேன்.வாடகை வீடு கூட இல்லாமல் ப்ளாட்ஃபார்ம்வாசிகளையெல்லாம் பாருங்கள் என்பேன். வீடு மாற்றும் போது தான் புலம்பல்கள்.அப்புறம் அதை மறந்தும் விடுவோம்.

ப்ளாட்ஸ் பிடிக்காது என்பதால் வாங்கவே முற்படவில்லை அதுவுமில்லாமல் ஏகப்பட்ட கமிட்மெண்ட்கள் என் கணவருக்கும். 12 வருடங்கள் முன்பு வாங்கி போட்டிருந்த ஒரு கிரவுண்டில் தற்போது வீடு கட்டலாம் என்று இந்த வருடம் ஜனவரியில் வேலை ஆரம்பித்து இப்பொழுது வீடும் அஸ்திவாரம் போட்டு கொண்டு இருக்கிறோம்.போன மாதம் நான் கட்டிக் கொண்டு இருக்கும் வீட்டிற்கு போகும் போதெல்லாம் மேஸ்த்ரி கவுன்சிலர் மகன் வந்தார்மா.அவரை வந்து சந்திக்க சொன்னார் என்று சொன்னார். அடுத்த முறை வரும் போது ஃபோன் நம்பர் வாங்கி வையுங்கள் என்று கூறி விட்டேன்.நம்பரும் கொடுத்தார்,அவரிடம் பேசினேன் என்ன விபரம் என்று கேட்டேன்.நாங்கள் கல்,மண் சப்ளை செய்கிறோம் எங்களிடம் நீங்கள் வாங்க வேண்டும் என்று அந்த மகர் சொன்னார்.இப்பொழுது எங்களுக்கு தெரிந்த சப்ளையரிடம் கடனுக்கு வாங்கி கொண்டு உள்ளோம்.லோன் இன்னும் வரவில்லை வந்ததும் உங்களிடம் வாங்க முயற்சி செய்கிறேன் என்று கோபத்தினை அடக்கி கொண்டு நல்லவிதமாய் பேசினேன். அந்த புது ஏரியாவில் போய் வசிக்கணுமே ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும் என்று கோபப்படாத மாதிரி நடித்தேன்.

நேற்று காலை வழக்கம் போல் வீடு கட்டும் இடத்திற்கு போனால் மேஸ்த்திரி இன்றைக்கு காலையிலிருந்து 4 முறை அவர் வந்து போனார்ம்மா.இந்த இடத்து ஓனரை உடனே வந்து என்னை பார்க்க சொல்.இல்லையெனில் மேற்கொண்டு வீடு கட்ட முடியாது என்று மிரட்டி சென்றுள்ளார் அந்த மகர்.இன்று பார்த்துட்டு போய்டுங்கம்மா.இல்லையெனில் வீண்பிரச்சனை என்றார். அட பாவிகளா, என் கணவர் காலை 9 மணியிலிருந்து ராத்திரி 12 மணிவரை கவர்ண்மெண்ட் பணியில் உண்மையாய் உழைத்து சம்பாதித்த காசு (சனி,ஞாயிறு கூட வேலைக்கு போவார்) + 17 வயதிலேயே தகப்பன் இழந்த,வெயில்,மழை என்று பாராமல் உழைத்த என் தம்பியின் காசு சேர்ந்து இந்த இடத்தை வாங்கி பதிவு செய்து, என் மகன்கள் படிப்பு காலேஜ் வரும் வரை + அந்த இடம் கொஞ்சம் டெவலப் ஆக வேண்டும் என்று 12 வருடங்களாய் பொறுமையாய் இருந்து இன்னும் லோன் கிடைக்காத நிலையில் வீடு கட்ட ஆரம்பித்தால் இந்த பிச்சைக்காரனை எதற்கு நான் போய் பார்க்க வேண்டும் என்று அந்த வேகாத உச்சி வெயிலில் கோபம் தான் முதலில் வந்தது.

என் தம்பிக்கு ஃபோன் செய்தால் ஆஃப் செய்து உள்ளது. என் கணவருக்கு ஃபோன் செய்தால் அவர் ஒரு மீட்டிங்கில் இருக்கேன் அப்புறம் கூப்பிடுகிறேன்மா என்கிறார்.

அடுத்த தெருவில் சில வீடுகளை விசாரித்தேன்.அவர் எந்த கட்சி, என்ன பெயர் என்று தெரிந்து கொள்வதற்கு. மிக பெரிய லெவலில் தற்போது தோந்து போன கட்சியினை சேர்ந்தவர்.ஆகா,நல்லா வேண்டும்டா உங்களுக்கு என்று கொஞ்சம் நிம்மதியாச்சு.சரி என்ன செய்வது என்று யோசித்து கொண்டே என் தம்பியின் ஃப்ரெண்டிற்கு ஃபோன் செய்தேன்.அந்த ஏரியாவில் அவருக்கும் நிலம் உள்ளது. அவர் உடனே அக்கா நீங்கள் அங்கேயே இருங்கள் அந்த ஏரியா தலைவரின் தம்பியினை அனுப்புகிறேன் என்றார். 1 மணிநேரத்தில் அந்த தலைவரின் தம்பி வந்தார். விபரம் சொன்னேன். பயப்பட வேண்டாம் இனி யார் வந்து கேட்டாலும் என் பெயரை சொல்லி என்னிடம் பேச சொல்லுங்கள் என்றார்.நான் பார்த்து கொள்கிறேன் என்றார். அவரின் ஃபோன் நம்பரையும் கொடுத்து சென்றார்.நான் வீடு கட்டுவதற்கு இந்த தலைவர்களும்,கவுன்சிலர்களும் எதற்கு? நிஜமாகவே எனக்கு புரியவில்லை.

மேஸ்த்ரி சொல்கிறார் ஏதாவது பணம் எதிர்பார்ப்பார்கள்,இல்லையெனில் தகராறு செய்வார்கள் என்று.

எதற்கு நான் வீடு கட்டுவதற்கு இவர்களுக்கு பணம் தரவேண்டும்.இவர்களிடத்தில் தான் மண்,கல் வாங்க வேண்டும் என்று என்ன கட்டாயம்? நியாயமாக உழைத்த காசில்,யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யாமல் நாம் பாட்டுக்கு நம் வேலையினை பார்த்தால் எதற்கு இப்படி தேவையில்லாத பிரச்சனை என்று மிகவும் மனசு கஷ்டமாக உள்ளது.

1 லாரியுடன் பிசினஸ் ஆரம்பித்த அந்த மகர் இன்று 3 வருடங்களில் 15 லாரிக்கு உரிமையாளராம். இவர்களையெல்லாம் என்ன செய்வது? பயந்து கொண்டு பணம் கொடுப்பதற்கு என்னிடம் பணமில்லை. இருந்தாலும் எதற்கு கொடுக்க வேண்டும்?

நன்கு படிக்கும் என் மகனிடம் நான் சொன்னது. இப்பொழுது இருக்கும் வேலையினை விட்டு விட்டு IAS படிடா என்று.இது வரை அதை படி, இதை படி என்று அவனை சொன்னதேயில்லை.வெயிலில் அடிக்கடி அலைவதால் எனக்கு என்னமோ ஆகி போச்சு போல என்று ஒரு லுக் விடுகிறான். அவன் என்னை கொடுமை செய்யாதம்மா என்று அலறுகிறான்.ஒரு சொந்த வீடு வேண்டும் என்று கேட்டதற்கு நான் படிக்கணுமா? அம்மா தாயே நாம் வாடகை வீட்டிலேயே இருந்து விடலாம்,வெயிட் தூக்குவதே ஈசி என்கிறான். கலெக்டர் ஆனாலும் இவர்களையெல்லாம் களையெடுக்க முடியுமா தெரியவில்லை. எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.என்ன செய்யறது என்று தெரியாமல் மனம் நிறைய கோபத்துடனும், நிறைய வெறுப்புடனும் என்ன ஆனாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற எண்ணத்துடனும்...வீடு கட்டி முடியும் வரை பிரச்சனை எதுவும் ஆக கூடாது என்று வேண்டுதலுடனும் நான்.


20 comments:

செங்கோவி said...

தோற்றுமா அவர்களது திமிர் அடங்கவில்லை..அரசு ஊழியர் என்றால் கொஞ்சம் பம்முவார்களே..அதைத் தெரிந்துமா மிரட்டுகிறார்கள்..இப்போது தானே ஆட்சி மாறி உள்ளது..இனி அடங்குவார்கள்.

நசரேயன் said...

என் பேர சொன்னீங்களா ?

vanathy said...

படிக்கவே எரிச்சலா வருது. இந்தியாவின் சாபக்கேடு இந்த அரசியல்வாதிகள். நினைப்பது போலவே எல்லாம் நடக்க ஆண்டவன் துணை நிற்பார்.

Chitra said...

எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.என்ன செய்யறது என்று தெரியாமல் மனம் நிறைய கோபத்துடனும், நிறைய வெறுப்புடனும் என்ன ஆனாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற எண்ணத்துடனும்...வீடு கட்டி முடியும் வரை பிரச்சனை எதுவும் ஆக கூடாது என்று வேண்டுதலுடனும் நான்.


..... நானும் உங்கள் பிரார்த்தனைகளில் சேர்ந்து கொள்கிறேன்.

Chitra said...

நடவடிக்கை எதுவும் எடுக்க - புகார் கொடுக்க வழி இல்லையா? :-(

எண்ணங்கள் 13189034291840215795 said...

எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.என்ன செய்யறது என்று தெரியாமல் மனம் நிறைய கோபத்துடனும், நிறைய வெறுப்புடனும் என்ன ஆனாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற எண்ணத்துடனும்..//

வீட்டைக்கட்டிப்பார் என்பார்கள்..

இது வேறு புது பிரச்னையா.?

இத்தகைய வெறுப்புதான் சமூகம் பக்கம் நம் பார்வையை கோபமாகத்திருப்பி கேள்வி கேட்க வைக்கும்..

ஆரம்பியுங்கள்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்லபடியாக கட்டி முடிக்க வாழ்த்துகள்..

நானானி said...

எல்லா தடைகளையும் மீறி விரைவில்
புகு விழா காண வாழ்த்துக்கள்!!!

நடந்தது, நடப்பது எல்லாம் நல்லாலே!
நடக்காப் போவதாவது நல்லா நடக்கட்டும்.

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் செங்கோவி அடங்குவார்கள் என்ற நம்பிக்கையில்..

யெஸ் நசரேயன் உங்கள் பேரை சொல்லியும் காரியம் ஆகவில்லை..

கெட்டது எதுவும் நாம் செய்யவில்லை எனவே நமக்கு கெட்டது நடக்காது என்ற நம்பிக்கை வானதி

அமுதா கிருஷ்ணா said...

பேசி சென்றதற்கு ஆதாரம், புகார் கொடுத்தால் அலைச்சல் என்று ஒரு வழி செய்து விடுவார்களே சித்ரா...

அமுதா கிருஷ்ணா said...

நன்றி எண்ணங்கள்...

அமுதா கிருஷ்ணா said...

நன்றி நானானி...

ADHI VENKAT said...

உங்கள் வீடு நல்ல படியாக கட்டி முடிக்கப்பட்டு நீங்கள் அங்கு நிம்மதியாக வாழ என் பிரார்த்தனைகள்.

இராஜராஜேஸ்வரி said...

எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.என்ன செய்யறது என்று தெரியாமல் மனம் நிறைய கோபத்துடனும், நிறைய வெறுப்புடனும் என்ன ஆனாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற எண்ணத்துடனும்...வீடு கட்டி முடியும் வரை பிரச்சனை எதுவும் ஆக கூடாது என்று வேண்டுதலுடனும் நான்.
நிறைய போரின் மனக்குமுறல் இதுதான்.

Dubukku said...

இந்த மாதிரி கட்டப் பஞ்சாயத்து மீது வெறுப்பு மிஞ்சுகிறது. தற்போது தான் அம்மாவின் ஒரு இன்டர்வியூ பார்த்தேன். இந்த மாதிரி மிரட்டல்கள் இருக்காது என்று சொல்கிறார். சி.எம். செல்லுக்கு ஒரு வரி எழுதி போடுங்களேன் உதவி கிட்டலாம்? என்ன செய்வது இவர்களை விட்டால் அவர்கள் அவர்களை விட்டால் இவர்கள் என்று மாறி மாறி நாமும் நம்பத் தான் வேண்டியிருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

தோற்ற கட்சி, ஜெயித்த கட்சி என்று இல்லை, எல்லா இடங்களிலும் இப்படித்தான் படுத்துகிறார்கள். இவர்கள் தொல்லை என்று அடங்குமோ தெரியவில்லை.

தொல்லைகள் நீங்கி, நல்லபடியாய் வீடு கட்டி குடியேற எனது பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும்.

குடந்தை அன்புமணி said...

ஆளுங்கட்சியினர் (இதில் எந்தக்கட்சியும் அடங்கும்) இப்படி நடந்துகொண்டால் மக்கள் மனதில் எப்படி இடம் பிடிக்க முடியும்? இவர்களைப்போன்றவர்களால்தான் ஒட்டுமொத்தமாக தோற்றுப்போக நேர்கிறது.
வீடுகட்டும் பணிகள் நல்லமுறையில் நடக்கட்டும். அழைப்பிதழ் உண்டா?

Katz said...

நானும் வீடு ஒன்னு கட்டனும். ஆனா இது மாதிரி ஏதாவது பிரச்சனை வருமான்னு பயமா இருக்கு. ;-)

Mahaneeya said...

Just say you are ADMK. They won't come near you. ;)

A.R.ராஜகோபாலன் said...

மனதுக்கு ஏற்று கொள்ள முடியாத விஷயம்
சமூகத்தில் சர்வமாய் பரவியுள்ள விஷம்