Wednesday, March 23, 2011

18 வருடமாய் ஏர்போர்ட்டில்

அரை மணிநேரம் ரயில்வே ஸ்டேஷனில் வெயிட் செய்யணும் என்றாலே லொள், லொள்ளுன்னு கூட இருப்பவர்கள் யாரிடமாவது எறிந்து விழுவோம். மேலே இருக்கும் இந்த மனிதர் பாரீஸில் இருக்கும் Charles de Gaulle  ஏர்போர்ட்டில் 1988-லிருந்து 2006 வரை வாழ்ந்து  இருக்கிறார். Mehran Karimi Nasseri என்ற இந்த மனிதர் லண்டனில் வாழ்வதற்காக ஃப்ரான்ஸ் வழியாக ஈரானிலிருந்து செல்லும் போது அவருடைய சூட்கேஸை தவறவிட்டார்.அதில் அவருடைய பாஸ்போர்ட்டும், ஐக்கிய நாட்டு சபை அளித்து இருந்த அகதிக்கான ஐடியும் இருந்தது.

பெல்ஜியத்தில் வாழ்வதற்காக அவருக்கு அகதி அட்டை வழங்கப்பட்டிருந்தது. அவருக்கு லண்டனில் வாழதான் விருப்பம். ஃப்ரான்ஸ் ரயில்வே ஸ்டேஷனில் பெட்டியினை தவற விட்ட இவர் இங்கிலாந்திற்கு எப்படியோ சென்றும் இருக்கிறார். ஆனால், பாஸ்போர்ட் இல்லாததால் ஃப்ரான்ஸிற்கு திரும்ப அனுப்பி உள்ளனர். முதலில் ஃப்ரென்ச் போலீஸ் இவரை கைது செய்தது. அதன்பிறகு இவர் ஏர்போர்ட்டிற்கு நுழைந்தது குற்றமில்லை என்று விடுவித்தது. ஈரானுக்கு திரும்பி செல்ல முடியாததால் ஏர்போர்ட்டிலேயே தங்கி விட்டார். கிட்டதட்ட 18 வருடங்கள். கோர்ட்டும் இவர் ஃப்ரான்ஸ் உள்ளே நுழைய தடை விதித்தது.

ஜூலை 2006-ல் அவர் உடல்நிலை சரியில்லாமல் போகவே ஒரு வருடம் ஃப்ரான்சில் ஹாஸ்பிட்டலில் இருந்து இருக்கிறார். அதன் பிறகு எம்மாஸ் என்ற ஃப்ரான்ஸின் சமூக அமைப்பில் இருந்து இருக்கிறார்.



ஏர்போர்ட்டில் இருந்த போது அவரது லக்கேஜ்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு எழுதுவது, படிப்பது என்று பொழுது போக்கி உள்ளார். சாப்பாடு, புத்தகங்கள் ஏர்ப்போர்ட்டில் வேலை செய்பவர்கள் தந்து உள்ளனர்.
சர் ஆல்ஃப்ரெட் என்றும் அழைக்க படுகிறார்.
1999-ல் இவருக்கு ஃப்ரான்ஸில் தங்குவதற்கு அடையாள அட்டை வழங்க பட்டது.

Lost in transit என்ற ஃப்ரென்ச் படமும்(1993), The Terminal(2004) என்ற ஆங்கில படமும் இவரின் கதையினை போல எடுக்கப்பட்ட படங்கள். டெர்மினல் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் எடுத்து உள்ளார்.

The Terminal படத்தை z-studio சானலில் இந்த வாரம் பார்த்து விட்டு ஃபோட்டாவிற்க்காக நெட்டில் தேடிய போது இது உண்மை கதை என்று தெரிந்தது.



 Cast Away, Forrest Gump படங்களில் நடித்த Tom Hanks இதில் நடித்து உள்ளார். நகைச்சுவை கலந்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. க்ரோகோச்லேவியா (கற்பனை நாடு) என்ற ஐரோப்பிய நாட்டிலிருந்து நியூயார்க் JF Kennedy ஏர்போர்ட்டிற்கு வருகிறார் நாவோஸ்கி (டாம்). அவர் விமானத்தில் இருக்கும் போது அவரின் நாட்டில் கலவரம் ஏற்பட்டு அவரின் நாடு தனிமை படுத்தப்படுகிறது. அங்கிருந்து வருபவர்களை அமெரிக்கா உள்ளே நுழைய தடை விதிக்கிறது. ஆங்கிலம் தெரியாமல் அவர் கஷ்டப்படுவதை நகைச்சுவையாக காண்பித்து உள்ளனர். கேட் 64-ல் தங்கிக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார்.  விமான பயணிகளுக்கு உதவி செய்து கிடைக்கும் சில்லறையில் உணவு வாங்கி உண்கிறார். தன் நாட்டினை பற்றி டிவி வாயிலாக அறிந்து கொள்கிறார். ஒரு காதல் ஜோடிக்கு காதல் தூதுவராய் பணிசெய்கிறார். அதில் பணமும் கிடைக்கிறது.

மேலதிகாரியாக Stanley Tucci அருமையான நடிப்பு. 
ஒரு விமான பணிபெண்ணின் கதையினை கேட்டு அவருக்கு காதலும் வருகிறது. பணியாளர்கள் இவரை CIA என்று சந்தேகப்படுகிறார்கள். ஏர்போர்ட்டின் மேலதிகாரியினை தவிர அனைவரிடமும் நண்பராகிறார். ஏர்போர்டினை விட்டு ஒரு முறையும் தப்பிக்க ஹீரோ நினைப்பதில்லை. இன்னும் அருமையான காட்சிகள் படம் முழுவதும். எதற்காக அமெரிக்கா வந்தார், வந்த வேலையினை அதன் பின் முடித்தாரா?

முடிவினை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

டாமின் அசத்தலான நடிப்பிற்க்காக இதை இன்னொரு முறை டிவியில் பார்க்கணும். திரும்ப ஒலிப்பரப்பாகும். நீங்களும் பாருங்கள். 9 மாதங்கள் இவர் ஒரு டெர்மினலில் காலம் தள்ளுவதாய் கதை.

ஆனால், ஒருவர் நிஜத்தில் எப்படி 18 வருடங்கள் ஏர்போர்டில் காலம் தள்ளினார் என்று நினைத்தாலே கலக்கமாய் உள்ளது.

15 comments:

Anonymous said...

வாழ்நாள் முழுவதும் பஸ் ஸ்டாண்டில் வாழும் மனிதர்களில் இவர் வித்தியாசமானவர் !

Manoj said...

there are few corrections regarding nasseri... he is not going from iran to london. he was born as an iranian, and he was started revolution against Iranian govt. so he was நாடு கடத்தப்பட்டு by iranian govt அகதியாக U N யிடம் ஒப்படைக்க பட்டார். Belgium gave him அகதி status. nasserri's mother ( died long time back ) was from UK. so he thought of finding mother side relatives in UK, so he thought of leaving to london. he travelled from brussels to paris via train. during the train journey he lost is suitcase, but he had paris to london air ticket in his hand bag. thats how he flee to london. rest other informations are correct.

Manoj said...

I am living in paris, also i had a chance to work with emmaus ( the charity taking care of nasseri ) thats how i came to know these informations..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி நையாண்டி மேளம்.

அமுதா கிருஷ்ணா said...

தகவல்களுக்கு நன்றி மனோஜ். ஆமாம் நானும் இப்படி தான் நெட்டில் படித்தேன். ஆனால், பதிவின் நீளம் கருதி சில செய்திகளை பதியவில்லை.இனிமேல் ஒரு செய்தி சொல்லும் போது கரெக்டா, முழு செய்தியினையும் சொல்ல முயல்கிறேன். நன்றி மனோஜ்.

Ram said...

இப்படி கூடவா நடக்கும்.. மனோஜ் அவர்களின் கருத்தையும் உங்கள் பதிவோடு இணைத்திடுங்கள்.. படிக்கும் சிலர் மற்றவர்களின் கருத்தை படிக்கமாட்டர்.. 18வருஷம்... உஷ்ஷ்ஷ்.. இப்பவே கண்ண கட்டுதே

pudugaithendral said...

பதுக்கு பஸ்ஸ்டாண்டுன்னு சொல்வது போய் பதுக்கு(வாழ்க்கை) ஏர்போர்டுன்னு சுத்தறீங்களேன்னு அயித்தானை கலாய்ப்பேன். இங்க ஒருத்தர் நெஜமாவே பதுக்கு ஏர்போர்டுன்னு படிக்கும்போது பாவமா இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

புது விஷயமா இருக்கே. ஐயோ பாவம்தான் அந்த ஆளு.

Prasanna said...

Terminal படத்தில் காதல் இருந்ததால் அவரால் காலம் தள்ள முடிந்தது. Nasseri-ம் ஒரு வேலை..?? ;)

வெங்கட் நாகராஜ் said...

ஏர்போர்ட்டில் 18 வருடமா! அப்பாடி!!!

மைதீன் said...

இந்தப் படம் நானும் பார்த்தேன். ஸ்பீல்பெர்க் எடுக்கும் படங்கள் நிறைய உண்மைக்கதையை சார்ந்துதான் எடுப்பார்.பகிர்விற்கு நன்றி!

சுசி said...

The Terminal நானும் பாத்தேன் அமுதாக்கா..

ஆனா 18 வருஷம்.. யப்பா..

அமுதா கிருஷ்ணா said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

தல தளபதி said...

இந்த படத்துல குப்தாணு ஒருத்தர் தரை சுத்தம் பன்றவரா நடிச்சுருக்காரு, ஹீரோகிட்ட பிளாஷ்பேக் சொல்லும்போது இந்தியால இருக்கற சென்னைல பீடா கடை வச்சுருந்தத சொல்லுவாரு. ஏன் அமெரிக்கா வந்தாருனு ஒரு காரணம் நம்ம ஊரபத்தி ரொம்ப பெருமையா சொல்லுவாரு பாருங்க!!! சான்சே இல்ல....
திரும்ப அந்த படத்த பாத்தா அந்த சீன கண்டிப்பா பாருங்க.

vanathy said...

படம் நல்லா இருக்கும் போல இருக்கே. எனக்கு Tom Hanks மிகவும் பிடிக்கும். நல்ல விமர்சனம்.