Thursday, July 22, 2010

குத்துக் குடும்பம்

காலையில் எழுந்த உடன், ஆபிஸிலிருந்து வந்தவுடன் ஆக மொத்தம் வீட்டில் இருக்கும் போதெல்லாம் ஸ்டார் மூவிஸ்,HBO என டீவியே கதி என்று இருக்கும் மாமாக்கு அடிக்கடி குத்து.

எப்ப வெளியில் போக வேண்டுமோ அதற்கு 10 நிமிடங்கள் முன்னால் படுக்கையினை விட்டு எழுந்து அதன் பின் அரக்க பரக்க கிளம்பும் என் பெரிய மகனுக்கு அப்படி கிளம்பும் நேரத்தில் ஒரு குத்து.

ஒரு மணிநேரமாக இந்த ட்ரஸ் அந்த ட்ரஸ் என் அயர்ன் செய்து வைத்து இருக்கும் எல்லா ட்ரஸ்களையும் தினம் போட்டு போட்டு கலைத்து, களைத்து கடைசியில் முதலாவது போட்ட டிரஸையே போட்டு காலேஜ் போகும் என் இரண்டாவது மகனுக்கு ஒரு குத்து.

இவர்கள் மூவரும் கிளம்பும் காலை நேரத்தில் என்னமோ ஆபிஸிற்கு லேட்டான மாதிரி சாமி அறையில் பூஜை செய்ய போவதற்கு அவசரமாய் தயாராகும் என் தாயாருக்கு ஒரு குத்து.

வருவாரா மாட்டாரா என்று தெரியாமல் நேரம் ஆக ஆக மதியம் 12 மணிக்கு அனைத்து பாத்திரங்களையும் நான் சுத்தம் செய்து வைத்த பின் வரும் பணிப்பெண்ணிற்கு ஒரு குத்து.

சொன்ன பேச்சை சுத்தமாய் கேட்காமல் திமிராய் திரியும் எங்கள் நாய் ரீனா தெரியாதவர்களிடம் குலைந்து கொண்டும் தெரிந்தவர்கள் வீட்டிற்கு வரும் போது குலைத்து கொண்டும் இருக்கும் போது ஒரு குத்து.

இந்த வீக் எண்டில் எங்காவது குடும்பத்துடன் போகலாம் என்று இருக்கும் போது என் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி செல்லும் என் தம்பிக்கு கும்மாங் குத்து.ரெஸ்ட் எடுக்கிறானாம்.

என் டிரஸ்களையெல்லாம் நானே மறந்து போய் விடும் அளவிற்கு அவரின் உபயோகத்திற்கு எடுத்து போனால் திரும்ப கொடுக்க மறக்கும் என் தங்கைக்கு குத்து. வேலைக்கு போறாராம்.

நான் பேசும் போது காது கொடுத்து கேட்காமல் குத்து மதிப்பாய் தலையினை ஆட்டிக் கொண்டே செல் ஃபோனில் sms அனுப்பிக் கொண்டே இருக்கும அனைவருக்கும் அவ்வப்போது குத்து நிச்சயம்.

பிட்ஸா,மேரிப்ரவுன் என்று பிளான் போடும் நேரத்தில் அது எல்லாம் அடிக்கடி சாப்பிட்டால் நல்லது இல்லை என்று இட்லி, தோசை செய்து வைக்கும் எனக்கு மகன்கள் கொடுக்கும் குத்து.

ஏ ஜோக் எழுதி உடன் எழுதும் மற்ற நல்ல செய்திகளை நாம் பாராட்ட முடியாமல் செய்யும் நம்மில் சில பதிவர்களுக்கு எப்படியும் உண்டு ஒரு மைனஸ் குத்து.

இப்போது இந்த காரணங்களுக்காக தான் குத்துக்கள் கொடுக்கப்படுகிறது. காரணங்கள் அவ்வப்போது மாறலாம் ஆனால் குத்துக்கள் தொடர்கின்றன்.

9 comments:

Thamira said...

ஃபேமிலிக் குத்துகள் உண்மைய்யில் வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும் இருந்தன. குறிப்பா பணிப்பெண்ணுக்கு, ரீனாவுக்கு, தம்பிக்கு என சூப்பர்.

Thamira said...

நானும் ஒரு ஃபேமிலிக் குத்து போடலாமான்னு யோசிக்கிறேன். :-))

ஸ்வர்ணரேக்கா said...

//காலையில் எழுந்த உடன், ஆபிஸிலிருந்து வந்தவுடன் ஆக மொத்தம் வீட்டில் இருக்கும் போதெல்லாம் //

உண்மைதாங்க... அப்ப வர கோவம் இருக்கே...

//நான் சுத்தம் செய்து வைத்த பின் வரும் பணிப்பெண்ணிற்கு ஒரு குத்து//

நியாயமான குத்து...


//ஏ ஜோக் எழுதி உடன் எழுதும் மற்ற நல்ல செய்திகளை நாம் பாராட்ட முடியாமல் செய்யும் நம்மில் சில பதிவர்களுக்கு எப்படியும் உண்டு ஒரு மைனஸ் குத்து.//

எனக்கும் அப்பல்லாம் எரிச்சலா இருக்கும்...

//நான் பேசும் போது காது கொடுத்து கேட்காமல் குத்து மதிப்பாய் தலையினை ஆட்டிக் கொண்டே செல் ஃபோனில் sms அனுப்பிக் கொண்டே இருக்கும அனைவருக்கும் அவ்வப்போது குத்து நிச்சயம்.//

கண்டிப்பா குத்தனும்...

கார்க்கிபவா said...

குத்து குத்த்த்த்த்த்தா இருக்கோ? :))

Anonymous said...

Like the 9th one. :)

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ஆதி,ஸ்வர்ண்ரேக்கா,கார்க்கி,அனாமிகா.

தெய்வசுகந்தி said...

சூப்பர் குத்து!!!

Cable சங்கர் said...

குத்துக்கு நன்றி..:)

Prathap Kumar S. said...

குத்து ஒவ்வொண்ணா முத்தா இருக்கு...:)
உங்க ரெண்டாவது பையன் குத்து வாங்க காரணமான செயலை நானும் செய்தததுண்டு.:)

இந்த பதிவை உங்ககுடும்பத்துல யாராவது படிச்சாங்கனா பெரிய குழப்பத்தை உண்டுபண்ணிடும் போல இருக்கே....:)