என் ஃப்ரெண்ட் ஜெயாவின் அண்ணன் திருநெல்வேலியில் மெசானிக் லாட்ஜ் என்னும் ஒரு பழமையான கிள்ப் மீட்டிங்கை வீட்டில் நடத்துவதால் அதில் கலந்து கொள்ள தனியா ட்ராவல் செய்ய தயக்கமாய் இருப்பதால் என்னை துணைக்கு கூப்பிட்டார். சரி வீக் எண்டில் ஒரு மாறுதலாய் இருக்குமே என்று போனேன்.
வெள்ளி மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் எனக்கு மிக பிடித்த சைட் லோயர்,அப்பர் பெர்த் எங்களுடையது.காலை எதிர் எதிரில் நீட்டி அமர்ந்து பேச ஆரம்பித்தோம். உள்ளே இருக்கும் 6 சீட்டிலும் ஒரு குடும்பம் இரண்டு 8,10 வயது பெண் குழந்தைகளுடன் வந்து இருந்தனர். அவர்கள் நான்கு பேரும் பேசி கொண்டு இருந்தனர். அந்த குழந்தைகள் எங்கள் சீட்டில் ஏறி மேலே ஏறுவதும் இறங்குவாதாகவும் மாலை 6லிருந்து 10 வரை செம சேட்டை. எங்களுக்கு நிம்மதியாய் பேசவே முடியவில்லை. ஏதோ எங்கள் பிள்ளைகள் போல அவர்கள் கீழே விழாமல் இருக்க அடிக்கடி பிடித்துக் கொண்டு இருந்தோம்.
சாப்பாட்டுக் கடை முடித்து திரும்ப 10.30 வரை பேசிக் கொண்டு இருந்தோம்.அனைவரும் லைட் அணைத்து படுக்க ஆயத்தமானோம்.
ஜெயா கீழ் பெர்த்திலும், நான் மேல் பெர்த்திலும் படுத்து விட்டோம்.
அப்போது அவர்களுடைய 2 வயதுடைய ஒரு பெண் குழந்தை தூங்கி எழுந்தது.இப்போது அவர்களின் பெரிய குழந்தைகளை தூங்க வைத்தார்கள்.அம்மாவும் உடனே தூங்கி விட்டார். அப்பா குழந்தையுடன் விளையாட ஆரம்பித்தார். லைட் அணைக்காமால் அக்குழந்தையுடன் இரவு 1 மணிவரை ஒரே சத்தம். அடுத்தவர்களுக்கு தொந்தரவே என்ற எண்ணம் அவருக்கு துளி கூட இல்லை. ஆனால் அவருடன் வந்தவர்கள் அனைவரும் நன்றாக தூங்கினர்.பழக்க தோஷம் போல் இருக்கிறது. மதுரையில் இரவு 1.50க்கு அவர்கள் இறங்கின பின் தான் நாங்கள் இருவரும் தூங்க முடிந்தது. இரண்டரை மணி நேரத்தில் திருநெல்வேலி வந்தது.சின்ன குழந்தையையும் ராத்திரியில் தூங்க செய்து இருக்கலாம் மாலையில் அந்த குழந்தையினை விளையாட வைத்து இருக்கலாம்.என்னதான் குழந்தை ஆசை இருந்தாலும் இந்த மாதிரி நேரத்தில் அய்யோ என்று இருந்தது.
இரண்டு நாட்கள் வீட்டினை விட்டு போவதால் வெள்ளி முழுவதும் எங்கள் இருவருக்கும் வீட்டில் செமத்தியாய் வேலை இருந்தது. ஊருக்கு திடீரென்று செல்வதால் ஷாப்பிங் வேறு சென்று வந்து இருந்தோம்.சனி முழுவதும் அங்கு போனதில் இருந்து மீட்டிங்கிற்காக ஒரே வேலை. சனி இரவு அந்த மீட்டிங் முடிந்து திருநெல்வேலியில் படுக்க இரவு 1 மணி ஆனது. ஞாயிறு முழுவதும் இன்னும் சில ஃப்ரெண்ட் வீட்டிற்கு விசிட். ஞாயிறு இரவு பஸ்ஸில் சென்னை திரும்பினோம்.எனவே மூன்று நாட்களும் சரியான தூக்கம் இல்லை. திங்கள் முழுவதும் கனவில் மிதப்பது மாதிரி ஒரு நிலையில் இருந்தேன். தூங்கி தூங்கி எழுந்தேன்.
அவர் அவர் குழந்தைகளை அவர் அவர் கொஞ்ச வேண்டியது தான் அடுத்தவர்களுக்கு தொந்தரவு தராமல்.எப்ப தான் மாறுவார்களோ இந்த பேரண்ட்ஸ்.எதோ குடும்பத்தினை விட்டு ஜாலியாக இரண்டு நாட்கள் ஃப்ரெண்டுடன் இருக்கலாம் என்று போனதற்கு யார் கண்ணு பட்டது என்று தெரியவில்லை இன்னும் தூக்க கலக்கத்தில் இருக்கிறேன்.
1 comment:
யக்கோவ் உங்கள ஃபாலோ பண்ணினாலும் புது பதிவு போட்டா எனக்கு தெரிய மாட்டேங்குதே.
நல்ல பதிவு.
Post a Comment