காரைக்கால் மாங்கனி திருவிழா, என் அம்மா ஒவ்வொரு வருடமும் போக வேண்டும் என கேட்டு கேட்டு இந்த வருடம் காரைக்காலுக்கு மாங்கனி திருவிழாவிற்கு போனோம்.
காரைக்கால் அம்மையார் எனப்படும் புனிதவதி அவரின் கணவருக்கு வாங்கி வைத்திருந்த மாங்கனிகளை சிவனடியாருக்கு கொடுத்து விடுகிறார். மதியம் உணவிற்கு வரும் அவரின் கணவருக்கு மாங்கனிகள் இல்லையே என கவலையில் புலம்ப சிவன் அவருக்கு இரண்டு மாங்கனிகள் தருவதாக சொல்லப்படுகிறது.
அந்த அம்மையாரின் கணவன் இதை அறிந்து இவ்வளவு பக்தியா தன் மனைவி மனித பிறவி இல்லை என பயந்து வேறு ஊருக்கு சென்று இன்னொரு திருமணம் செய்து பிறக்கும் தன் மகளுக்கு புனிதவதி என்று பெயர் சூட்ட.தன் கணவரை காண காரைக்கால் அம்மையார் செல்கிறார். தன் இரண்டாவது மனைவி மற்றும் தன் மகளுடன் அவரின் கணவர் காலில் விழுந்து வணங்குகிறார். காரைக்கால் அம்மையார் சிவனிடம் தன் இளமை மறைந்து பேய் உருவம் வேண்டும் என்று வரம் பெற்று அப்படியே மாறி விடுகிறார். பின் கைலாய்ம் செல்கிறார். தலைகீழாக கைகளால் மலை முழுவதும் ஏறினார் என்று கதை உள்ளது. அவர் சிவனிடம் மாங்கனி பெற்ற ஆனி மாதம் பெளர்ணமி தினம் அன்று காரைக்காலில் கொண்டாடுகிறார்கள்.
மாங்கனிகளை கூட்டத்தில் எறிவதும் அதை மற்றவர்கள் பிடிப்பதும் என்று ஒரே கூட்டம். சின்ன பையன்கள் பைகளில் அப்படியே தூக்கி எறியும் மாங்கனிகளை பிடித்து பையினை நிரப்பிக் கொண்டு இருந்தனர்.அந்த மாங்கனிகளை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு எளிதில் திருமணம் நடக்கும் என்று நம்புகிறார்கள்.
அன்று மாலை வேளாங்கண்ணி சென்றோம். மாலை வேளையில் வேளாங்கண்ணி கோயில் இப்படி மிக அழகாக இருந்தது.
1 comment:
அருமையான பதிவு.வேளாங்கண்ணி பற்றி இன்னும் எழுதி இருக்கலாம்
Post a Comment