Monday, November 11, 2013

சென்னை எக்ஸ்பிரஸ்ஸில் இளிச்சவாய் தமிழன்ஸ்

 மும்பையில் இருந்து திரும்ப வரும் போது நாங்க இருந்த கோச்சில்அடுத்த ஆறு கோச்சுகளில் டிடிஆர் என்று ஒருவர் இல்லவே இல்லை. ஆறு கோச் ஆடி ஆடி நடந்து போய் தேடி பார்த்துட்டு வந்து படுத்து விட்டேன். RAC டிக்கெட் என்பதால் அவரை தேடி போனேன். காலை 8 மணிக்கு திடீரென்று  SQUAD என்று ஒருவர் ஃபைல் சகிதம் வந்து ஒவ்வொரு 8 பேருக்கு ஒருத்தர் அல்லது இருவர் என்று ஃபைன் வசூலித்து ரசீதும் கொடுத்து கொண்டிருந்தார். தக்கலில் பதிவு செய்தவர்கள் பயணத்தின் போது கட்டாயம் ஒரிஜினல் ஐ.டி ஃப்ரூப் வைத்து இருக்க வேண்டும் என்பது ரயில்வே ரூல். அது தெரியாமல் தமிழர்கள் நிறைய பேர் டிக்கெட் எடுக்கும் போது ஒரிஜினல் கேட்கலை அதான் இப்போ ஜெராக்ஸ் வைத்து கொண்டிருக்கிறோம் என்று தண்டம் அழுது கொண்டிருந்தனர். என் எதிர் இருந்த ஒருவர் ஷிப்பில் வேலை ஒரு வருடம் முடித்து சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்.சின்ன பையனாக இருந்தான். அவனிடம் ஒரிஜினல் பாஸ்போர்ட் இருக்கு. ஆனால் தக்கல் ரிசர்வ் செய்த போது டிரைவிங் லைசன்ஸ் நம்பர் கொடுத்து விட்டு பயணத்தின் போது அதன் டூப்ளிகேட்டை காண்பிக்க ஒத்து கொள்ளவில்லை அவனிடம் 1000 ரூபாயும் இல்லை. அடுத்த ஸ்டேஷனில் இறங்கி ஃபைன் கட்ட சொல்லி கட்டாய படுத்திவிட்டார் அந்த SQUAD. என்னிடம் பரிதாபமாக பணம் இருக்கா என்று கேட்க நான் சென்னையில் வந்து பணம் பெற்று கொள்வதாய் சொல்லி அந்த பையனிடம் பணம் கொடுக்க அந்த பையன் தன் ஏ.டி.எம் கார்டை என்னிடம் கொடுத்து நீங்க சென்னை வந்து என்னிடம் கொடுங்கள் என்று சொல்கிறான். நான் ஏடிஎம் கார்ட் வேணாம்பா சென்னை வந்ததும் பணம் எடுத்து கொடு என்று சொல்லி விட்டேன்.

அந்த வசூல் ராஜா ஸ்குவாட் சோலாப்பூரில் காலை 9.30 க்கு இறங்கி விட்டார். டிடிஆர்  காலை 11 மணிக்கு ஆடி அசைந்து வருகிறார். அதற்குள் கோச் முழுவதும் அன் - ரிசர்வ்ட் மாதிரி ஒரே கூட்டம். அவர்களை டிடிஆர் ஒன்றுமே கேட்கவில்லை. ரூல் ரூல் என்று அவ்ளோ பணம் வசூலித்தீர்களே, ஆந்திரா மக்கள் இப்படி ரிசர்வ்டு கோச்சில் ஏறுகிறார்களே அவர்களிடம் ஃபைன் கேக்க மாட்டீங்களா என்றதற்கு நீங்கள் லெட்டரா எழுதி சென்னையில் ரயில்வேயில் கம்ப்ளெய்ண்ட்டாக கொடுங்க மேடம் என்று சொல்லி விட்டு அடுத்த கோச்சிற்கு போய் விட்டார். நான் கேட்டதும் மற்றவர்களும் கேட்க ஆரம்பித்தார்கள் அவர் ஏன் அங்கே நிற்கிறார். ஏற்கனவே தக்கல் என்றும் ஏஜெண்ட் என்றும் அதிக பணம் கொடுத்து இப்போ ஃபைன் வேறு கட்டி நிறைய பேர் புலம்பி கொண்டு இருந்தார்கள்.

டிஸ்கி: ஏடிஎம் கார்டை நம்பி கொஞ்சமாய் பணம் வைத்து கொண்டு நீண்ட தூர ரயில் பயணம் செய்ய வேண்டாம். பயணத்தின் போது ஐ.டி ஒரிஜினல் கட்டாயம் வைத்து கொள்ள வேண்டும்.
சென்னையில் இறங்கியதும் அந்த பையன் என்னிடம் வாங்கிய பணத்தை ஏடிஎம்-ல் எடுத்து கொடுத்து விட்டான்.

5 comments:

”தளிர் சுரேஷ்” said...

இரயில் பயணங்களில் ஐடி கார்டு ஒரிஜினல் எடுத்து செல்லவேண்டும்தான்! பலருக்கு இது தெரிவதில்லை! நல்லதொரு பகிர்வு! நன்றி!

ராஜி said...

நல்லதஒரு விழிப்புணர்வு கட்டுரை. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டிப் போல தமிழன் இளைச்சவாயங்கள்தான். நாமளாம் தயிர்சாத கோஷ்டி. “அவங்க”லாம் கோங்ரா பார்ட்டி

Karthik Somalinga said...

இந்த அழகில் IRCTC-யில் புக் செய்த டிக்கட்டை, பிரிண்ட் செய்ய முயலும் போது, "காகித உபயோகத்தை கட்டுப் படுத்துங்கள் - மரங்களை காப்பாற்றுங்கள்; டிக்கட்டிற்கு பதிலாக SMS காட்டினாலே போதும்" என்ற ரீதியில் வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மெசேஜ்களுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை!

MANO நாஞ்சில் மனோ said...

ஐயோ நானும் மும்பை டூ நாகர்கோவில் ரயிலில் தண்டம் அழுதுருக்கேன்.

ஆனாலும் ஆந்திராவில் அநியாயத்துக்கு மக்கள் ரிசர்வேஷன் கம்பார்மேண்டில் ஏறி கடுப்பேத்துவதை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை...!

வெங்கட் நாகராஜ் said...

ரிசர்வ் செய்த பெட்டியில் ரிசர்வ் செய்யாதவர்கள் தான் இங்கே அதிகம் பயணிப்பார்கள்....

நீங்கள் உத்திரப் பிரதேசம் அல்லது பீஹார் பக்கம் செல்லும் வண்டிகளில் சென்று பாருங்கள் - நிலமை ரொம்பவே மோசம்.

ஐ.டி. இல்லையெனில் ரொம்பவே படுத்துவார்கள் சில டிடிஇக்கள்! இங்கே நேர் எதிர். பல சமயங்களில் வருவதே இல்லை! :(