Tuesday, November 26, 2013

நான் படிச்சா -3

          நான் படிச்சா --1 ...நான் படிச்சா-2

டிகிரி முடிச்சுட்டு PG படிக்க  யுனிவர்சிட்டி கேம்பஸிற்கு போன போதே தெரிஞ்சுடுச்சு இங்கேயும் கட்டாயம் வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்குவேன்னு.

என் கூட படிச்ச ராஜி கல்லிடைக்குறிச்சியிலிருந்து தினம் ட்ரையினில் வருவாள்.டிகிரி படிக்கும் போது முழு நாள் க்ளாஸ் முடித்து மாலையில் ட்ரையினில் போய் விடுவாள்.PGயில் முதல் வருடம் முழுவதும் பாதி நாள் தான் க்ளாஸ் இருக்கும்.மதியம் ட்ரையின் கிடையாது.

அதனால் மாலை நேர ட்ரையுனுக்காக  ஸ்டேஷனில் போய் ட்ரையினே வராத ப்ளாட்ஃபார்ம்களில் காத்து வாங்குவது,கடைகடையாய் ஒண்ணுமே வாங்காம சுத்துவது,லைப்ரரியில் போய் உட்கார்ந்து போறவரவுங்களை வேடிக்கை பார்ப்பது,ஒரு படம் விடாமல் மதிய வேளையில் தியேட்டர் போவது இல்லாட்டி எங்க வீட்டில் கொட்டம் அடிப்பது என்று சூப்பரா ஒரு இரண்டு மாதம் பொழுது அதுபாட்டுக்கு போய்கிட்டு இருந்துச்சு.

முதல் இண்டெர்னல் டெஸ்ட் எழுதி மார்க் வந்தது. எங்களுக்கு நான்கு மாஸ்டர்கள் க்ளாஸ் எடுத்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் கொஞ்சம் முரடாக இருப்பார். அவர் க்ளாசில் அனைவரிடமும் எல்லா பேப்பர் மார்க்கும் கேட்டு கொண்டே வந்தார். என்னையும் ராஜியையும் சேர்ந்து எழுந்து நிற்க சொன்னார். சரி நல்ல மார்க் தானே வாங்கி இருக்கோம் என்று சந்தோஷமாக எழுந்து நின்று எங்கள் மார்க்கை சொல்ல ஆரம்பிக்கோம். அவர் பாடத்து மார்க் கேக்கலை படத்து மார்க் கேக்கேன் என்று நக்கல் அடித்தார். முதல் நாள் மதியம் சினிமா போனதை எந்த சீனியர் பக்கியோ அவர்ட்ட போட்டு கொடுத்து இருக்கு. முதல் நாள் 5 சீனியர் பசங்களை தியேட்டரில் பார்த்து இருந்தோம்.

ராஜிக்கு கண்ணில் டேம் கட்டிடுச்சு. எனக்கோ பயங்கர கோபம்.சார்,,நாங்க வீட்டிற்கு தெரிந்து தான் சினிமாக்கு போனோம்,இனிமேலும் போவோம் என கொஞ்சம் ரஃப்பாக சொல்லிட்டு உட்கார்ந்து கொண்டேன்.  கன்னாபின்னான்னு அவமானம்+கோபம்.

வீட்டில் நைனாவிடம் போய் விஷயத்தை சொல்லி ராஜி அழுது விட்டதையும் சொல்லி நானும் கொஞ்சமா கண்ணை கசக்கினேன். அடுத்த INTERNAL டெஸ்ட்டில் நான் தான் அந்த பேப்பரில் கடைசி மார்க். எனக்கு முந்தைய மார்க் ராஜி. நாமெல்லாம் என்னைக்கு மார்க்குக்கு கலங்கி இருக்கோம். ஃபெயில் ஆகாம படித்தா போதுங்குற சங்கத்தை சேர்ந்தவுங்க.

ஆனா முதல் செமஸ்டருக்கு எக்சாம் எழுத ராஜி வரவேயில்லை. அத்தோடு காலேஜ் வருவதை நிறுத்தி கொண்டாள். நானும் ஒரு நல்ல ஃப்ரெண்டை இழந்தேன்.அந்த சார் அப்படி கேட்டதை மனசில் வச்சுகிட்டு க்ளாசில் ஒருத்தியும் இரண்டு வருடமும் சினிமாக்கே ஃப்ரெண்ட்ஸ்களுடன் போனதேயில்லை.

இரண்டு வருடமும் அவர் எடுக்கும் பேப்பரில் எழுதிய அனைத்து INTERNAL டெஸ்டிலும் நான் தான் கடைசி மார்க்.
ஆனால் வைச்சேன் பாருங்க ஆப்பு..EXTERNAL EXAM-ல் நான் தான் அந்த பேப்பரில் முதல் மார்க்.ஆனால் இரண்டையும் கூட்டும் போது என் மார்க் குறைஞ்சுடுச்சு.

என் நைனா நான் இரண்டாவது வருடம் படிக்கும் போது நவம்பர் 26-ல் இறந்து விட்டார். இரண்டு நாள் கழிச்சு காலேஜ் போன போது இன்னொரு ஆசிரியர் என்னிடம் வந்து என்னம்மா ஆச்சு என்று விசாரித்துவிட்டு ரொம்ப ஷார்ட் டெம்பரோ உங்கப்பா என்றும் கேட்டார். எப்படி சார் தெரியும் என்று கேட்ட போது உங்க அப்பா ஒரு நாள் மாலையில் நாங்க தங்கி இருந்த(4 ஆசிரியர்கள் ஒன்றாக தங்கி இருந்தார்கள்) வீட்டிற்கு வந்து பசங்களுக்கு முன்னாடி லேடிஸ் ஸ்டூண்ட்களிடம் எப்படி பேசுவது என்று ஒரு முறை இருக்கு அது தெரியாமல் நீங்க எல்லாம் எப்படி காலெஜிற்கு க்ளாஸ் எடுக்க வர்ரீங்க..அந்த பெண் பயந்து போய் தானே(ராஜி) காலேஜிற்கு வரலை.இனிமேல் எந்த பெண்ணிடமும் அப்படி பேசாதீங்க பேசினால் அப்புறம் நடப்பதே வேறு என்று மிரட்டி விட்டு இப்படி நான் வந்து பேசினதை என் மகளிடமும் சொல்ல கூடாது என்றும் சொல்லிட்டு வந்திருக்கார்.

அந்த நல்லாசிரியர் என்னிடம் இதை பற்றி எதுவும் கேக்கவேயில்லை. ஆனால் மார்க் குறைவாக போட்டு பழிவாங்கி உள்ளார்.


இன்று என் அப்பா இறந்து 25 வருடங்கள் ஆகிறது.

3 comments:

ADHI VENKAT said...

ம்ம்ம்....

உங்ககிட்ட கொஞ்சம் பார்த்து தான் பேசணும் போலிருக்கே.....:)))

ஆனா! உங்கப்பா கிரேட்...

எங்க வீட்டுல தலைகீழா நடக்கும்....:)) அப்பா அடிச்சதேயில்லை... அதற்கும் சேர்த்து வைத்து அம்மாவிடம் செம மொத்து வாங்கியிருக்கிறேன். அடி வாங்காத பொருளில்லை....:))

ஹுஸைனம்மா said...

அப்பா கிரேட்!!

ஆனா, ஆனா... படம் பார்த்ததைச் சொல்லிக் காட்டினதுக்கா உங்க ஃப்ரண்ட் காலேஜை நிறுத்திட்டாங்க? என்னக் கொடுமை இது!! ரொம்ப்ப்ப்ப சென்ஸிடிவ்வோ அவங்க... அதுவும் உங்க ஃப்ரண்ட்டாக இருந்தும்.... :-))))

எனக்கும் இந்த இண்டெர்னல் மார்க்கில் பழிவாங்கல் நடந்து இருக்கு - கடைசி செமஸ்டர் பிராக்டிகலில்!! :-((

Anonymous said...

எனக்கும் இதுபோன்ற பதிவுகள் படிக்கும்போது அப்பா செண்டிமென்டு வந்துவிடும்..என்னைக் கஷ்டப்பட்டு படிக்கவைத்த என் அப்பா நான் படித்து முடித்த ஒரு மாதத்திலேயே இறந்துவிட்டார்..