Thursday, November 21, 2013

நான் படிச்சா -2

நான் +2 படிச்ச போது திண்டுக்கல் போன என் அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்து அங்கேயே இரண்டு மாதங்கள் தங்க வேண்டியதாயிற்று. இதெல்லாம் +2 பாசாகுமா என்ற கவலை போல. ஹாஸ்ட்டல் இல்லாததால் நானும் என் தம்பிகளும் திநெவேலியிலிருந்து திண்டுக்கல் போனோம். என் தம்பிகள் இருவருக்கும் உடனே பள்ளியில் இடம் கிடைத்து விட +2 என்பதால் எனக்கு இடமே கிடைக்கவில்லை. அதுவும் நான் காமர்ஸ்,கெமிஸ்ட்ரி,பிஸிக்ஸ் மேக்ஸ் என்று  அவியல் மாதிரி ஒரு படிப்பை +1- ல் படித்து இருந்தேன்.திண்டுக்கல்லில் காமர்ஸ்க்கு பதிலாக பயாலஜி இருந்துச்சு. ஆனாலும் என் மாமாவின் ஃப்ரெண்ட் உதவியுடன் நானும் ஒரு ஸ்கூலில் செப்டப்மரில் +2 சேர்ந்தும் விட்டேன்.

சும்மாவே படிப்பில் புலியான நான் இப்போ சிங்கமாகி விட்டேன். சிங்கம் அமைதியா உட்கார்ந்து இருக்குமே அப்படி எடுத்தக்கணும். ஸ்கூல் போகவே பிடிக்கலை. முன்னெல்லாம் ஃப்ரெண்ட்ஸ் பார்க்க இண்ட்ரெஸ்ட்டாக..சினிமா கதை எல்லாம் பேச அப்படி இப்படின்னு ஸ்கூலிற்கு போவேன். இங்கோ ஒரு புள்ளையும் ஃப்ரெண்ட்ஸ் இல்லை. புது யூனிஃபார்ம் வேறு பிடிக்கவேயில்லை.சரியென்று ஒரு மாதிரி அட்ஜஸ்ட் ஆகி ஸ்கூலிற்கு போய் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் மதியம் பிசிக்ஸ் லேபில் என் மாஸ்டருக்கு (சின்ன வயதுக்காரர்) என்ன கோபமோ அங்கிருந்த ஒரு பெரிய ஸ்கேலால் என் தலையில் டேபிளின் அடுத்த பக்கத்தில் இருந்து ஒரு அடி அடித்து விட்டார். எனக்கு குபுக்குன்னு கண்ணில் அப்படி ஒரு தண்ணீர் டேம்.கூட இருந்த கடங்காரிகள் வேறு சிரிச்சுட்டாங்க. சம்பவம் நடந்தது மதியம் 3.30 மணி.வீடு போகும் வரை கண்ணில் கண்ணீர் டேம் உடையாமல் பார்த்து கொண்டு 4.30 மணிக்கு வீட்டிற்கு போனதும் நைனாவை பார்த்ததும் டேமை உடைத்து விட்டேன்.
 நைனா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்து 25 நாட்கள் இருக்கும்.

மறுநாள் ஸ்கூலிற்கு போனா அங்கிருந்த சிஸ்டர்கள் மூன்று பேர் மற்றும் பிசிக்ஸ் மாஸ்டர் மூணு க்ளாஸ் பொண்ணுங்களை ஒன்றாக உட்கார வைத்து யார் வீட்டில் போய் மாஸ்டர் அடித்ததாய் சொன்னது? யாருடைய சொந்தக்காரரோ அவர் வீட்டிற்கு வந்து மிரட்டி போனதாகவும் உண்மையை சொல்லாட்டி முட்டை,வெத்திலை மை வச்சு(???) யாரு அந்த பொண்ணு என்று உண்மையை கண்டுபிடிச்சு விடுவதாகவும் ஒரே ரகளை. ஒரு மூன்று நாட்கள் தினம் க்ளாஸ் மொத்தமும் மிரட்டலுக்கு உள்ளானது. நானும் மிரண்டு போய் மூச்சே விடாமல் ”ஙே”ன்னு முழிச்சுட்டு ஸ்கூல்,வீடுன்னு போயிட்டு வந்துட்டு இருந்தேன்.

அந்த மாஸ்டர் வீட்டிற்கு போய் பெண் குழந்தைகளை எப்படி அடிக்கலாம்,இனிமேலும் இப்படி அடித்தால் நடப்பதே வேறு என்று மிரட்டி வந்த அந்த சொந்தக்காரர் என் நைனா என்று எனக்கே ஒரு மாசம் கழித்து தான் தெரியும்.


10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஙே...!

Avargal Unmaigal said...

///ஒரு நாள் மதியம் பிசிக்ஸ் லேபில் என் மாஸ்டருக்கு (சின்ன வயதுக்காரர்) என்ன கோபமோ அங்கிருந்த ஒரு பெரிய ஸ்கேலால் என் தலையில் டேபிளின் அடுத்த பக்கத்தில் இருந்து ஒரு அடி அடித்து விட்டார்.///

ஜய்யோ பாவம் ஸ்கேலுக்கு வாய் இருந்தா அழுது இருக்குமே.. அப்புறம் அந்த ஸ்கேலுக்கு எதாவது டேமேஜ் ஆச்சா என்று நீங்கள் எதுவே சொல்லவில்லையே.... அது பற்றி எனக்கு மிகவும் கவலையாக இருக்குதுங்க்

சாந்தி மாரியப்பன் said...

//உண்மையை சொல்லாட்டி முட்டை,வெத்திலை மை வச்சு(???) யாரு அந்த பொண்ணு என்று உண்மையை கண்டுபிடிச்சு விடுவதாகவும் ஒரே ரகளை.//

ஏம்ப்பா.. உண்மையைச் சொல்லாட்டி ரத்தம் கக்க வைக்கிற டெக்கினிக்கு தெரியாதா அவங்களுக்கு?.. சின்னப்புள்ளத்தனமாவே முட்டை, மைய்யின்னு யோசிச்சிருக்காங்க. என்னவோ போங்க :-))

உஷா அன்பரசு said...

//ஒரு நாள் மதியம் பிசிக்ஸ் லேபில் என் மாஸ்டருக்கு (சின்ன வயதுக்காரர்) என்ன கோபமோ அங்கிருந்த ஒரு பெரிய ஸ்கேலால் என் தலையில் டேபிளின் அடுத்த பக்கத்தில் இருந்து ஒரு அடி அடித்து விட்டார். //- அட எனக்கும் இப்படியேதாங்க ஒரு மாஸ்டர் சின்ன வயசா அழகானவரா வந்தாரு .. சும்மா லுக் விட்டுக்கிட்டே இருந்தாரு.. எல்லா பொண்ணுங்களும் சார்... சார்..ன்னு வழிவாங்க... நானும் என் ப்ரெண்ட்டும் மட்டும் அவரை கண்டுக்காம முறைச்சிடுக்குவோம்.. அதனால் எதோ சாக்கு வச்சி எங்களை ஸ்கேல்ல தலை மேல் ஒண்ணு போட்டார்... பாருங்க. அப்பறம் அவருக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சதும்.. எங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் போறது உங்களுக்கு சந்தோஷமா இருக்கும்ல ன்னு கேட்டார் பாருங்க... பாவமா ஆயிடுச்சி...

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் தனபாலன்”ஙே” தான்..

அமுதா கிருஷ்ணா said...

அவர்கள் உண்மைகள். அந்த ஸ்கேலை அப்படியே உங்க வீட்டுக்கு பார்சல் செய்றேன் உங்க மனைவிக்கு யூஸாகும்..

அமுதா கிருஷ்ணா said...

நிறைய பேர் ரத்தம் கக்கிட்டா என்னா பண்றது அமைதி சாரல்...

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா உஷா அன்பரசு...எல்லா பிசிக்ஸ் மாஸ்டர்களுக்கும் அந்த ஸ்கேல் தான் போலேயே..

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்ம்...

ஙே! :)

Anonymous said...

எங்க பிசிக்ஸ் சார் வாட்ச் எல்லாம் கழட்டி வச்சுட்டு இடது கையால் அறை விடுவார்..ஆனால் சிறப்பாக பாடம் நடத்தும் ஒரு அற்புதமான ஆசிரியர்..