இன்றைய அரசியல் தானே நாளைய வரலாறு. பெண் என ஒதுங்காமல் தைரியமாய் அரசியிலில் ஈடுபடுகிறார்களே என்று அரசியலில் இருக்கும் ஜெயலலிதா,சுஸ்மா,ஜெயந்தி நடராஜன்,மம்தா பேனர்ஜி போன்றவர்கள் மீது மரியாதை உண்டு.நாமும் அரசியிலில் ஏதாவது பங்கெடுக்கலாமா என்ற எண்ணம் கூட உண்டு.
வட்டம்,கட்டம்,சதுரம்,கவுன்சிலர்,மேயர் அப்படி இப்படி என்று எதாவது ஆகலாமா? என்ற ஆசை கூட உண்டு. விமர்சனங்கள்,அடாவடிகள்,பணப்பற்றாக்குறை,குடும்ப முன்னேற்றம் என ஆயிரத்தெட்டு காரணங்களுக்கு பயந்து கொண்டு அரசியல் எண்ணத்தினை செயல் படுத்த முயலவில்லை.நான் கொஞ்சம் அழுமூஞ்சி வேறு எனவே இந்த பழம் புளிக்கும் என்றும் பாவம் அரசியல் பிழைத்து கொள்ளட்டும் என்றும், சரியாக கத்தியோ, அரிவாளோ பிடிக்க தெரியாது என்றும்,ஒழுங்கா ஒரு லட்சத்தை லட்சணமா எண்ண கூட தெரியாது என்றும் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. ஓட்டு மட்டும் கட்டாயம் போட்டு விடுவேன்.
இலங்கை வெளியிட்டு இருக்கும் அந்த கார்ட்டூனை பார்த்து விட்டு அந்த பத்திரிக்கையில் பணிபுரிபவர்களில் பெண்களே கிடையாதா? என்றே தோன்றியது.
முதல்வரின் தைரியம் எப்பவுமே பாராட்டுக்குரியது.இங்கே,அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை,அவர்களின் குணநலன்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. அந்த கார்ட்டூனை வெளியிட்டு இருக்கும் நம் பதிவுலக சகோதரர்கள் அனைவரும் அதை எடுத்து விடுங்கள். கார்ட்டூன் என்றால் சிந்தனையுடன் சிரிப்பும் வர வேண்டும். இது ஒரு வக்கிரம் பிடித்தவனின் வக்கிரமான வெளிப்பாடு. அதை வெளியிட்டு நம் பதிவின் தரத்தினை குறைத்து கொள்ள வேண்டாம். இதனை அனைத்து கட்சியினரும் ஒருமித்த குரலில் எதிர்த்து குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும். பதிவுலகில் நம் எதிர்ப்பை பதிவு செய்வோம்.

4 comments:
ஆமா நீங்க சொல்வது சரிதான்
You are right
அந்த கார்ட்டூனை நான் பார்க்கவில்லை.. பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை... வக்கிர சிந்தனைகளை வெளிப்படுத்தும் கார்ட்டூன்கள், ஓவியங்கள், கதைகள், கட்டுரைகள் அனைத்தும் கண்டனத்திற்கு உரியவையே!!!
கண்டிக்கப் பட வேண்டிய செயல்தான்!
Post a Comment