Thursday, September 20, 2012

ஓ இது தான் ஹார்ட் அட்டாக்கா?

 போன வியாழக்கிழமை(13/09)வழக்கம் போல நான் காலை 6.30க்கு எழுந்து வரும் போது அம்மா விஜய் டிவி பார்த்துக் கொண்டே (அந்த டைமில் டீ கையில் இருக்கும்) நிறைய வெள்ளை பூண்டினை உரித்து கொண்டு இருந்தார்கள். சமையலுக்கு இப்பவே உரிக்கிறார்கள் போல என்று என்னம்மா இவ்ளோ பூண்டு காலங்காத்தால என்றதும் உடம்பு ரொம்ப வலிக்குதும்மா காலையில் பூண்டு சட்னியும், மதியத்திற்கு மிளகு குழம்பும் செய்யலாம் என்றார்கள்.

ஓகே என்று சொல்லிட்டு பேப்பர் படிச்சுட்டு,காஃபி குடிச்சிட்டு கிச்சனுக்கு போனேன். காயெல்லாம் கட் செய்துட்டு,மிக்சி போட்டுட்டு அம்மா குழம்பு வைக்க வாங்க என்றதும் அம்மா கிச்சனுக்கு வந்து மிளகு குழம்பு செய்தார்கள். கோஸ் தாளித்துக் கொண்டு இருக்கும் போது ரொம்ப வேர்க்கிறது கொஞ்ச நேரம் ஃபேனில் உட்கார்ந்துட்டு வரேன்மா என்று அவர்களின் ரூமிற்கு போனார்கள். போனவர்கள் இரண்டே நிமிடத்தில் வெளியில் வந்து மூர்த்தி எனக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு என்று என் கணவரிடத்தில் சொல்லவும் நான் உடனே அடுப்பை ஆஃப் செய்துட்டு ஓடி போய் அப்படியே சேரில் உட்கார வைக்க தொடுகிறேன் அப்படி வேர்த்து போய் இருந்தார்கள்.வாந்தி வர மாதிரி இருக்கு.நெஞ்சும் வலிக்குது என்று சொல்லவும் உடனே அடுத்த 20 நிமிடத்தில் ஆஸ்பத்திரிக்கு போய் விட்டோம்.

உடல் மொத்தமும் வேர்த்து போய் கையெல்லாம் சில்லென்று இருந்தார்கள். எமர்ஜென்சியில் உடனே ட்ரிப் ஏற்றி,பி.பி.இசிஜி பார்த்து கொண்டே இருக்கும் போது கார்டியாலஜிஸ்ட் வந்து உடனே ஆஞ்சியோகிராம் செய்ய அழைத்து போய்,அடைப்பு இருக்கிறது என்று ஆஞ்சியோ ப்ளாஸ்டியும் செய்து மேஜராய் அடைப்பிருந்த இடத்தில் ஸ்டெண்ட் பொறுத்தி விட்டார்கள். அரை மணிநேரத்தில் அம்மாவிற்கு மிக சுறுசுறுபாய் அனைத்தும் செய்து விட்டு டாக்டர் எங்களை அழைத்து அவர்கள் செய்த ப்ரொசீஜரை கம்ப்யூட்டரில் என்ன செய்தோம் என்று அருமையாக விளக்கினார்.

மூன்று நாட்கள் ஐ.சி.யூ வாசம்,மூன்று நாட்கள் ரூமில் இருந்து செவ்வாய் இரவு வீட்டிற்கு வந்து விட்டோம். ஹாஸ்பிட்டலில் தெரிந்து கொண்டது ஹார்ட் அட்டாக் வருவது ஒருவரது குடும்பத்து சொத்தல்ல அது யாருக்கு வேண்டுமானாலும் வரும் நமது தேசத்து சொத்து என்று.மிக சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு போனதால் காப்பாற்றி விட்டோம். அம்மாவிற்கு பி.பி கடந்த 15 வருடங்களாக உண்டு அதற்கு மருந்தும் எடுத்து கொள்கிறார்கள்.  சுறுசுறுப்பான அம்மா இப்ப படுக்க முடியாமல் தவிக்கிறார்கள். பத்ராசலம்,பண்டரிபுரம்,துவாரகா,இன்னொரு முறை காசி இவை அவர்கள் போக நினைத்த லிஸ்டில் பாக்கி இருக்கும் ஊர்கள். கட்டாயம் போய் வருவோம் என்ற நம்பிக்கையில்

15 comments:

மோகன் குமார் said...

Good that you took her to the hospital immediately and she became allright and discharged in 3 days.

ஹுஸைனம்மா said...

பெண்களுக்குப் பொதுவா ஹார்ட் அட்டாக் வர்ற வாய்ப்புகள் குறைவுன்னுதான் சொல்வாங்க. ஆனால், அபூர்வமில்லைன்னு உங்க பதிவைப் பாத்து தெரிஞ்சுகிட்டேன்.

இறைவனருள், உடனே டாக்டரிடம் போய்ட்டீங்க. ஹார்ட் அட்டாகின்போது, அந்த முதல் ஒரு மணி நேரம்தான் "golden hour" என்பார்கள். அதற்குள் மருத்துவ உதவி கிடைத்திடுதல் நல்லது.

மாடி வீட்டில் இருப்பதாகச் சொன்னீங்களே, அம்மாவுக்கு மாடிப்படி ஏற இறங்க செய்யலாமா?

indhira said...

அம்மா விரைவில் நலம்பெற என்னுடைய பிரார்த்தனைகள்.

ஸ்வர்ணரேக்கா said...

கடவுள் அருளால் அம்மா நிச்சயம் மீண்டும் காசி, பண்டரிபுரம் சென்று வருவார்...

கவலை வேண்டாம்...

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி மோகன் குமார்.6 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்தோம்.

அமுதா கிருஷ்ணா said...

ஹூஸைனம்மா தம்பி வீடு கீழே அதனால் அம்மா கீழ் வீட்டில் இப்போ இருக்கிறார்கள்.

அமுதா கிருஷ்ணா said...

இந்திரா,ஸ்வர்ணரேக்கா நன்றி.

Lakshmi said...

எனக்கு 5 வருஷம் முன்பு மைல்ட் மாசிவ் அட்டாக் ரெண்டும் ஒரே நேரத்தில் உண்டானது. ரொமப அவஸதைஆயிடுச்சு.

Avargal Unmaigal said...


அம்மா விரைவில் நலம்பெற என்னுடைய பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்

அமைதிச்சாரல் said...

அம்மா விரைவில் நலம் பெற என்னோட பிரார்த்தனைகளும்..

சுசி said...

அம்மாவுக்கு விரைவில் எல்லாம் சரியாய்டும்.. விருப்பம் போல லிஸ்ட்ல இருக்கற இடங்களுக்கு போய் வருவாங்க.. பிள்ளையார் துணை இருப்பார்..

ஆதி மனிதன் said...

அம்மா பூரண குணமாகி அவர்களின் எல்லா ஆசைகளும் நிறைவேற வேண்டிக்கொள்கிறேன்.

Unknown said...

amma poorana nalam pera
vazthukkal

பால கணேஷ் said...

அடாடா... படிச்சதும் மனசே கனத்துப் போச்சுங்க, அம்மா பூரண நலம் பெற்று அவங்க ஆசைப்படி எல்லா இடங்களுக்கும் போய்வரணும்னு நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்ங்க.

இராஜராஜேஸ்வரி said...

இறையருளால் தாயார் பூரண நலம் பெற பிரார்த்தனைகள் !