Thursday, April 19, 2012

மரக்கடையில் இரண்டு நாட்கள்

நெல்லையில் இருந்த போது எங்கள் வீட்டின் பின்னால் மிக பெரிய வேப்பமரம் ஒன்று இருந்தது.அந்த மரத்தின் அடியில் மட்டும் மண் விட்டு மற்ற இடங்களில் சிமெண்ட் பூசப்பட்டு இருக்கும்.கீழ் வீட்டில் இருக்கும் போது அதன் அருமை தெரியாது. மாடிக்கு செல்லும் போது தான் அதன் மிக பெரிய கிளைகளும், பறவைகளும், பறவை கூடுகளும் தெரியும்.மிகவும் பெரியதான அந்த மரம் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய வழவின் பாதி இடத்திற்கு நிழல் தந்தது.எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் பாதி இடம் நிழலாக இருக்கும். சீசனில் வேப்பங்கொட்டை சேகரித்து கொண்டே இருப்பார்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள்.எங்கள் காம்பவுண்டில் பழங்கள் அதிகம் விழாது.

ஒரு நாள் மரம் அறுப்பவர்கள் வந்து மரத்தினை தட்டி பார்த்துட்டு மிக வயசானதால் உள்ளே உலுத்து போய் விட்டதாய் அதற்கு விலை பேசி சென்றார்கள். ஒரு கெட்ட நாளில் அதனை வெட்ட ஆரம்பித்தார்கள்.ஒரு வாரமாய் தினம் வெட்டி வெட்டி சாய்த்தார்கள்.தெருவில் போகிறவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்ப்பார்கள். ரோடெல்லாம் வேப்ப இலைகள், எப்ப பார்த்தாலும் வேப்ப வாசனை.முழு மரமும் மொட்டையாக்கிய பின் எங்கள் வீட்டின் பின்புறம் இருந்த மரத்தின் அடி பகுதியினை கட் செய்து வாசல் வழியே வெளியே எடுத்து போக வாசல் பத்தாது என்பதால் சுவரில் பெரிய அளவில் வட்டமாக ஒரு ஓட்டை போட்டு அதன் வழியே எடுத்து சென்றார்கள். ஒரு 50 பேராவது அதனை அன்று வேடிக்கை பார்த்தோம்.
அப்புறம் ஒரு நாள் அதன் வேர் பகுதியினை பெரிய குழி தோண்டி வெளியில் எடுத்தார்கள்.ஆ வென்று பார்த்து கொண்டேயிருந்தோம்.வேப்ப மரம் வெட்ட பட்ட போது மனது மிகவும் கஷ்டப்பட்டது.


இப்ப ஏன் இந்த கொசுவர்த்தி என்றால் சமீபத்தில் ஒரு மரக்கடையில் முழுதாய் இரண்டு நாட்கள் இருக்க வேண்டியிருந்தது. புதியதாய் நாங்கள் கட்டிய வீட்டிற்கு மரங்கள் வாங்க ஆசாரியுடன் சென்றிருந்தேன். ஆசாரி படாக் படாக் என்று சொல்லியும் நான் ஜன்னல் சட்டங்களுக்கு வேப்பமரம் தான் வாங்க வேண்டும் என்று பிடிவாதமாய் வாங்கியும் விட்டேன். விசாரித்த வகையில் விலையும் மிக குறைவு, நல்லது என்றும் கேள்வி பட்டேன். ரெட் ஹில்ஸ் பக்கத்தில் அல்மாத்தி என்ற இடத்தில் மரம் நன்றாக இருக்கிறது.அங்கு விலையும் பரவாயில்லை. மரக்கடையில் முழுநாளும் அமர்ந்து மரத்துண்டுகளையும்,அதற்கு செய்யும் சடங்குகளையும் பார்த்த போது எங்க வீட்டின் அந்த பெரிய வேப்ப மரம் தான் நினைவிற்கு வந்தது. அது வெட்டப்பட்டு யார் வீட்டு ஜன்னலுக்கு சட்டமாகியதோ.இப்பொழுது நான் வாங்கி இருப்பது யார் வீட்டு வேப்பமரமோ?


7 comments:

ADHI VENKAT said...

நம்ம வீட்டு மரத்தை வெட்டும் போது கஷ்டமாக இருக்கும்.....:(

உங்க வீட்டிற்கு ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கீங்க.... பாராட்டுகள்.

குறையொன்றுமில்லை. said...

நினைக்க தெரிந்தமன்மே உனக்கு மறக்கதெரியாதா? இல்லியா?

Unknown said...

ரெட் ஹில்ஸ் பக்கத்தில் அல்மாத்தி என்ற இடத்தில் மரம் நன்றாக இருக்கிறது.அங்கு விலையும் பரவாயில்லை.////

என்ன விளம்பரமா

வெங்கட் நாகராஜ் said...

மரக்கடை - அங்கே நிரந்தரமாய் ஒரு வாசம் - மரங்கள் பசுமையாய் இருந்த தனது நினைவினை வாசமாக ப்ரப்பிக் கொண்டு இருக்கும்!

வல்லிசிம்ஹன் said...

எங்க வீட்டு மரத்து விளாம்பழ மரத்தையும், வேப்ப மரத்தையும் இப்படித் தான் சாய்த்தார்கள். வேப்பமரத்தின் வேர் பக்கத்துவீட்டுக்குப் போய்விட்டதாம்:(
அதோட வேரை வெட்டி எடுக்க மூன்று நாளும் இரண்டு ஆட்களும்தேவையாக இருந்தது.
இதில வேடிக்கை என்னன்னா அவங்களே இப்ப வேப்பமரம் நட்டு இருக்காங்க.
உங்கள் வருத்தம் புரிகிறது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மனிதனைத் தவிர உலகில் எல்லாமே பயனுள்ளவைதான். மிக நல்ல பதிவு. மிக்க நன்றி அமுதா.

Thava said...

பதிவு நன்று..