Tuesday, April 17, 2012

புது வீட்டிற்கு வாங்க..


ஆச்சு..2011 அக்டோபரில் கடைசியாக ஒரு பதிவு போட்டது.2012 வருடம் தொடங்கியவுடன் ஒரு பதிவு போடணுமே இல்லைனா உம்மாச்சி கண்ணை குத்திடும் என்று பரணில்(ட்ராஃப்டில்) இருந்த ஒரு பதிவினை தூசி தட்டி ஜனவரியில் ஒரு பதிவினை போட்டுட்டு அப்படியே காணா போயாச்சு.

2011 மார்ச்சில் கட்ட ஆரம்பித்த வீட்டினை 2012 மார்ச்சிற்குள் கட்டி முடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பதிவுலகமே மறக்க ஆரம்பித்தது. பிப்ரவரியில் புது வீட்டிற்கும் குடி வந்தாச்சு. பழைய வீட்டில் ஏற்கனவே இருந்த ஏர்டெல் நெட் புது வீட்டு ஏரியாவில் நெட்வொர்க் இல்லையென்று கை விரித்ததும் தான் ஆஹா பதிவுலகத்தினை மிகவும் மிஸ் செய்தேன். எல்லோரையும் விட்டு ரொம்ப தூரம் போன மாதிரி ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் ஜமீன் பல்லாவரம் ஆனேன். புது வீடு இருப்பது ஜமீன் பல்லாவரத்தில்.

எந்த நேரத்தில் அக்கம் பக்கம் என்று என் ஃப்ளாக்கிற்கு பெயர் வைத்தேனோ என் புது வீட்டின் அக்கம் பக்கத்தில் யாருமே இல்லை. தனி வீடு..செம வெளிச்சம் + செம காற்று.அனுபவித்து கொள்ளணும், ஏன் ஆராயணும்? 10 நாட்கள் முன்பு தான் வீட்டிற்கு நெட் வந்தது. பர பரவென்று இரண்டு மாதங்களாக போகாதவர்கள் வீட்டிற்கு(ப்ளாக்கிற்கு) எல்லாம் கடந்த 10 நாட்களாய் போய் வந்தேன். என் வீட்டிற்கு அனைவரும் வருக.

















16 comments:

pudugaithendral said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்டப் பை ஸ்டப்பா போட்டோ நல்லா இருக்கு. புது வீட்டில் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

பாலா said...

வாழ்த்துக்கள். புதிய வீடு கட்டுவது என்பதே எல்லோருக்கும் கனவு. உங்களுக்கு எல்லா நன்மையும் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன். வெல்கம் பேக்.

CS. Mohan Kumar said...

புது வீடு வளர்ந்த விதம் அழகா படிப்படியா காண்பித்துள்ளீர்கள் வீடு அழகா இருக்கு. புல் தரை எல்லாம் அருமையா இருக்கு

வாழ்த்துகள் !

ADHI VENKAT said...

வீடு ரொம்ப அழகா இருக்குங்க. வாழ்த்துகள்.

கிச்சன் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு.

vanathy said...

Nice house. Congrats.

Avargal Unmaigal said...

புது வீடு புகுந்த உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது மனம்மார்ந்த வாழ்த்துகள். இந்த புது வீடு உங்களுக்கு மிக அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும்...படங்கள் அருமை வீடும் மிக மிக அருமை இனிமேல் இந்தியா வந்தால் தங்க மிக அருமையான 5 ஸ்டார் ஹோட்டல் போல பள பள வேன வீடு இருக்கிறது பவர் கட் என்றாலும் ஜில் என்ற காற்று வரக் கூடிய வீடுதான்.

அழகான படங்களாக் போட்டு இருக்கீறிர்கள் கண் பட்டு விடப் போகிறது திருஷ்டி பிக்ஸரை முதலில் போட்டு பின் மற்ற படங்களை போடுங்கள்

வாழ்க வளமுடன்.....கடவுளின் ஆசி உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும்

குறையொன்றுமில்லை. said...

அமுதா நாந்தான் உன் புது வீட்டிற்கு முதல் வருகை. ஸ்வீட் எஙக? வீடு சூப்பரா இருக்கு. வாழ்த்துகள்.

rajamelaiyur said...

வீடு அருமை .. பார்ட்டி உண்டா ?

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்....

வீடு நல்லா இருக்கு!

Unknown said...

புது (பெரிய) வீடு கட்டியதற்கு வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

அழகா இருக்குப்பா. வாழ்த்துகள். கட்ட ஆரம்பித்த சமயத்தில் யாரோ ஒருவர் பிரச்னை செய்வதாக எழுதிருந்தீங்க, அதெல்லாம் சரியாயிடுச்சா?

ஆதி மனிதன் said...

Congrats Mam. Enjoy...

கோவை நேரம் said...

வீடு ரொம்ப நல்லா இருக்குங்க...அப்படியே எங்களுக்கும் கொஞ்சம் வேலை கொடுத்து இருக்கலாம்...நம்ம தொழிலே இன்டீரியர் பண்றதுதான் ...வாழ்த்துக்கள்

அமுதா கிருஷ்ணா said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

ஹூசைனம்மா பிரச்சனை செய்தவரை அவரின் எதிர் கட்சிகாரரை வைத்து மிரட்டியாச்சு.

சாந்தி மாரியப்பன் said...

வீடு ரொம்ப அழகா இருக்குங்க..

கோமதி அரசு said...

புது வீட்டில் எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
வாழ்க் வளமுடன்.
வாழ்த்துக்கள் வீடு அழகாய் இருக்கிறது.