Thursday, August 25, 2011

Unknown Reasons (கடவுளுக்கு மட்டும் தெரியுமோ?)

சமீபத்தில் ஆந்திராவின் இருந்து இங்கு எங்கள் வீட்டு பக்கத்தில் குடி வந்திருக்கும் ஒரு பெண்ணிற்கு உடல்நிலை சரியில்லை.திருமணம் முடித்து 10 வருடங்களில் 3 முறை அபார்ஷன் ஆகி,3 முறை லேப்ராஸ்கோப்பி முறையில் கருப்பை கட்டியினை எடுத்தும் உள்ளார்கள்.

இந்த ஊருக்கு அவர் புதுசு.தமிழ் சுத்தமாய் தெரியாது. ஒரு நாள் கடுமையான வயிற்று வலியில் அவஸ்தை பட்டவரை பக்கத்தில் இருக்கும் டாக்டரிடம் கூட்டி சென்றேன். அவர் உடனே ஸ்கேன் செய்து பார்த்து விட்டு கருப்பையில் பிரச்சனை இருப்பதால் வேறு பெரிய மருத்துவமனையில் பார்த்து விடுங்கள் என்று வலி குறைய மட்டும் மருந்தும் கொடுத்தார்.

எங்கள் ஏரியாவிலேயே இன்னொரு ஸ்பெஷல் மருத்துவரை இரண்டு நாளில் சந்தித்தோம்.அவரும் ஒரு ஸ்கேன் செய்து பார்த்து விட்டு நீங்கள் சேத்பட்டில் இருக்கும் ஒரு டாக்டரை உடனே சந்தித்து விடுவது நல்லது என்று கூறி விட்டார். ஆனால், 20 நாட்களாக சேத்பட் டாக்டரின் அப்பாயிண்மெண்ட் கிடைக்கவேயில்லை. எனவே, எங்க ஏரியா ஸ்பெஷல் டாக்டரையே திரும்ப வலி பொறுக்காமல் பார்க்க சென்றோம். இப்படி சேத்பட் டாக்டரிடம் அப்பாயிண்மெண்ட் கிடைக்கவில்லை அடுத்த மாதம் தான் கிடைக்கும் என்றும் இப்பொழுது வலி நிற்க மருந்து தரும்படி கேட்டோம்.

எங்க உள்ளூர் ஸ்பெஷலிஸ்ட் என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை, ஏம்மா இந்த பெண்ணை கூட்டிட்டு நீ அலஞ்சுட்டு இருக்க,பேசாமா அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பிட்டு உன் வேலையை பார் என்று கடுமையாக என்னிடம் கூறினார். சூப்பர் டாக்டர்.சொந்த ஊரில் மருத்துவம் செய்ய வசதியில்லாததால் தானே, சென்னை பெரிய ஊர் இங்கே நல்ல மருத்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே வந்து இருக்கிறார் என்றும் இவருடன் அலைவதில் எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை, சேத்துபட் டாக்டர் இல்லையெனில் வேறு டாக்டர் ரெஃபர் செய்யுங்கள் என்றும் கேட்டேன்.

இல்லை நீங்கள் வேறு டாக்டரை பாருங்கள் என்று விட்டேத்தியாக சொன்னார். பிறகு என் கஸின் (டாக்டர்) அட்வைஸ் படி ராமசந்திராவிற்கு அந்த பெண் அவர் கணவருடன் போய் வருகிறார்.ஆனாலும்,அவர் பிரச்சனை என்னவென்று இது வரை கண்டு அறியப்படவில்லை. அங்கு இவர் பார்க்க போன டாக்டர் இரண்டு நாட்கள் கழித்து அங்கேயே இன்னொரு டாக்டரை பார்க்க சொல்லி விட்டார். இந்த இரண்டு மாதத்தில் அந்த பெண் பார்க்கும் 4 ஆவது டாக்டர் இவர்.

2 மாத்தில் அவர் எடுத்தது 4 முறை ஸ்கேனும், ஒரு முறை MRI  ஸ்கேனும் ஆனாலும் இன்னும் சுத்தலில் தான் இருக்கிறார்.
கருப்பையால் தானே இவ்வளவு பிரச்ச்னை என்று அவரின் கணவர் அதை எடுத்து விடலாம் என்கிறார். ஆனால் 33 வயதில், குழந்தையும் இல்லாததால் கருப்பையினை எடுக்க எந்த டாக்டரும் தயாராயில்லை.  ஆனால் அதனால் அந்த பெண் படும் பாடு. என்ன பிரச்சனை என்று தெரிந்து தக்க சிகிச்சை எடுக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு இருக்கிறோம்.

கருப்பையில் கட்டி திரும்ப திரும்ப வர காரணம் என்னவென்று தெரியாது?
ஓவரியில் கட்டி வர காரணம் என்னவென்று தெரியாது?
கருப்பையின் அளவு பெரிதாக காரணம் என்னவென்று தெரியாது?
சில பெண்களுக்கு மூன்றாவது மாதத்தில குழந்தை அபார்ஷன் ஆக சரியான காரணம் என்னவென்று தெரியாது?

பரம்பரையில் யாருக்கேணும் இருந்தால் இந்த பிரச்சனைகள் பெண்களை தாக்குமாம்.எதுவும் நம் கையில் இல்லை என்று மட்டும் புரிகிறது.
இத்தூண்டு 3 க்கு 2 இன்ச் சைசில் ஒரு வெற்று பை போல பெண்களுக்குள்ளே இருந்து கொண்டு அது பெண்களை படுத்தும் பாடு.

19 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

இன்றைய மருத்துவர்கள் பலர்
நோயாளிகளின் உடல்நலத்தைவிட

அவர்களிடமிருக்கும் பணநலத்தைத்தான் முதலில் பார்க்கிறார்கள்.!!!!!

ஆமா அவங்க கட்டுன காச
அவங்க எப்பதான்
எப்படித்தான் பெறுவது??????????

முனைவர் இரா.குணசீலன் said...

எதுவும் நம் கையில் இல்லை என்று மட்டும் புரிகிறது..


உண்மைதான்..

குறையொன்றுமில்லை. said...

டாக்டர் தொழில் எவ்வளவு புனிதமானது. உயிகாக்கும் தொழிலில்
எவ்வளவு அக்கறை காட்டனும்.இந்த
டாக்டர்கள் ஏன் இப்படி பொறுப்பில்லாம
நடந்துக்கராங்கன்னு கோவம் தான்
வருது. கஷ்ட்டபடுரது சாதாரண அப்பா
வி பொது மக்கள் தானே.

Chitra said...

ஒரு நல்ல மருத்துவர் கொடுக்கும் ஆலோசனை மற்றும் treatment இல் நிச்சயம் பலன் கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு. Vellore CMC பற்றி நல்ல விதமாக கேள்விப்பட்டு இருக்கிறேன். She is in our prayers.

Anonymous said...

Her husband's opinion s correct. From her history, past and present, it may b that she shd not not conceive as the risk of having a baby with birth defects s high.

Woman's health s not a mystery today. Medical science abt woman s highly advanced. Her health prob wil soon b unraveled.

U hav not mentioned whether u took her to a gynecologist or male or female GP only. Being herself a woman, a gyneo wont use such harsh words to u.

Ur friend shd take her husband's opinion seriously to not want their own baby. A baby can b adopted. Look at Angellina Jollier and Brat - they hav adopted 4 children.

Unknown said...

சகோ இப்போதைய நிலவரப்படி 30 லகரத்துக்கும் மேலே கொடுத்தால் தான் இந்தபடிப்பு கிடைக்கும்....அப்போ அவங்க நம்ம கிட்ட என்ன எதிர்ப்பப்பாங்கன்னு நெனைக்கறீங்க!

CS. Mohan Kumar said...

Very sad to read this article.

ஹுஸைனம்மா said...

சில சமயங்களில் இப்படித்தான் காரணங்களைக் கண்டிபிடிப்பதில் காலதாமதம் ஏற்படுகீறது. ஒரே மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் இருந்தால் சீக்கிரம் நடக்கும். ஆனால், இங்கே இப்படி அலைகழிக்கிறார்களே!!

ADHI VENKAT said...

பெண்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு அளவேயில்லை.
அந்த பெண்ணின் பிரச்சனைகள் குணமாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வேதனையாக பதிவு. அந்த வைத்தியர் ஏன்? பொறுப்பற்ற, அலட்சியமான பதிலைத் தந்தார். இன்றைய நாட்களில் இந்த புனிதமான தொழில், சிலரால் மிக அவப் பெயர் பெறுகிறது.
ஒரு வேற்று மாநிலத்தவருக்கு உதவக் கூடாதெனக் கூறுமளவுக்கா? இவரை இவர் பெற்றோர் வளர்த்துள்ளார்கள், இவர் என்ன? கற்றும் என்ன? பிரயோசனம்.
இவரிடம் நம்பி எப்படி? வைத்தியம் செய்யச் செல்கிறீர்கள்.

பொன்ஸ்~~Poorna said...

//ஆனால் 33 வயதில், குழந்தையும் இல்லாததால் கருப்பையினை எடுக்க எந்த டாக்டரும் தயாராயில்லை. //

aachariyama irukke.. ithellam doctor en mudivu pannanum? its personal prefernce right? if your friend and her husband are willing for this, why dont they do it ?

Here(in the US) we can sue the doctors who make us run around like this and not accept what we ask them to help with.

I am sure they can sue in India also, but just that the case will have longer lead time and the suffering will not cease!

அமுதா கிருஷ்ணா said...

பொன்ஸ் ... டாக்டர்கள் குழந்தை இல்லாததால் ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்க நினைக்கிறார்கள்.சிறிய வயது இல்லையா.இப்பவே யூட்ரஸ் எடுப்பதை விட அதன் பிரச்சனைகளை சரி செய்ய முயற்சிக்கிறார்கள்.

அமுதா கிருஷ்ணா said...

//Ur friend shd take her husband's opinion seriously to not want their own baby. A baby can b adopted. Look at Angellina Jollier and Brat - they hav adopted 4 children//.

mr.anonymous!!!Angellina Jollier and Brat ஒப்பிடுவது எனக்கு சிறிதும் ஒத்துக் கொள்ள முடியாது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழும் ஒரு ஜோடி ஆவர். பணம் பற்றி சிறிதும் கவலை இல்லை. அவர்களின் வாழ்க்கை முறையே வேறு. அவர்களா குழந்தைகளை வளர்க்க போகிறார்கள். ஃபோட்டாக்களுக்கு போஸ் கொடுக்க மட்டுமே குழந்தைகளை தூக்குவார்கள்.
இங்கு ஒரு குழந்தையினை தத்து எடுக்க வேண்டுமானால் அதற்கு இருவர் சம்பந்த பட்ட குடுமபத்தையும் சம்மதிக்க வேண்டும்.

நிகழ்காலத்தில்... said...

எனக்குத் தெரிந்து ஹோமியோபதி வைத்தியம் சிறப்பாக வேலை செய்யும். அருகில் உள்ள ஹோமியோபதி மருத்துவரை அணுகுவது நல்லது...

சாந்தி மாரியப்பன் said...

அந்தப் பெண் உடலாலும், மனசாலும் படும் கஷ்டம்.... பாவம்தான்.

cheena (சீனா) said...

இன்றைய மருத்துவ உலகம் பணக்காரர்களுக்கு மட்டுமே என்பது போலத்தான் நடந்து வருகிறது. என்ன செய்வது ....... அவரது பிரச்னை விரைவினில் தீர பிரார்த்தனகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்

நாகை சிவா said...

கருப்பையில் பிரச்சனை என்றால் அதை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கும் பட்சத்தில் எடுக்க எந்த மருத்துவரும் தயங்குவது இல்லை என்றே நினைக்கிறேன். Taylors Road அருகில் இருக்கும் Rekha Kurian அல்லது சேத்பட் மேத்தா மருத்துவமனைக்கு சென்று பார்க்கலாம். எனக்கு தெரிந்து நிறைய நபர்கள் (18-30) வயது உள்ளவர்களுக்கு கருப்பை நீக்கப்பட்டு உள்ளது.

Anonymous said...

I think she has polycystic ovary and that can be cured. The past pregnancies could be ectopic. Take her to a good GYN

Anonymous said...

I suffered more than 15 years. There is no solution, it is still an experimental stage. I was told that, let we be a step held of the tumors to remove them or dormant them inside the uterus. There is no guarantee, even after menopause, the tumors will become dormant. No solution for the suffers, other than removing the uterus permanently. Can't explain the relief, after wards.