Wednesday, August 24, 2011

கட்டைல போறவங்க..

நேற்று மதியம் பேங்கில் வீட்டு லோன் விஷயமா தேவுடு காத்து இருந்த போது அந்த பேங்க் அருகில் இருக்கும் கல்லூரியில் பெண்கள் அங்கிட்டும் இங்கிட்டும் போறது வித்யாசமாய் இருந்துச்சு.என்னன்னு உத்து பார்த்ததில் அட அவர்கள் கட்டைல போறது தெரிஞ்சுச்சு. இப்ப தான் இப்படி அதிகமா கட்டைல போறாங்களா இல்லை ஆதி காலத்துல இருந்தே இப்படி தானா? பெண்கள் மட்டும் தான் இப்படியா நம்ம ”குடி மகன்கள் ” எப்புடி என்று கூகுளிடம் கேட்டதில்


இப்படி ஒரு படம் கிடைத்தது. ஆஹா உண்மையிலேயே கட்டையில ஆதிகாலத்திலேயே போனார்கள் என்ற உண்மையும் விளங்கிச்சு.Chopine எனப்படும் இந்த செருப்பினை அணிய இரண்டு பேரின் உதவி தேவை. நடக்கும் போதும் யாராவது பிடித்து கொள்ள வேண்டுமாம். ஆனாலும் இதை அணிந்து கொண்டு டான்ஸ் கூட ஆடிய பெண்களும் உண்டாம். 7லிலிருந்து 30 இன்ச் உயரம் வரை இருக்குமாம். 15 ஆம் நூற்றாண்டில் பெண்கள் பயன்படுத்தியது.
இது ப்ளாட்ஃபார்ம் ஷூ எனப்படுகிறது. 
பொதுவா பெண்கள் தங்கள் ஸ்டேடசிற்காக இது போல் உயரமான செருப்புகளை அணிந்து இருக்கிறார்கள்.அணிகிறார்கள். வசதி என்பதை விட அலட்டல் தான் இதில் அதிகம். 

Stiletto Heel - கத்தி போல் மிக கூர்மையான் முனைகள் கொண்டது. 


பெண் குழந்தைகளுக்கு கண்டிப்பா ஹை ஹீல்ஸ் செருப்புகளை வாங்கி தர வேண்டாம்.சிறிய வயதிலேயே அதன் பாதகங்களை சொல்லி விட்டால் நல்லது.இடுப்பில்,காலில்,பாதத்தில், முதுகில் வலி ஏற்படுத்தும். வலியினை பொறுத்துக் கொண்டு இளம் வயதில் இத்தகைய செருப்புகளை அணிவதால் கட்டாயம் கால் வலி,முதுகு வலியால் வாழ்க்கையின் பிற்பகுதியில் கஷ்டப்பட நேரிடும்.லிகமெண்ட் எனப்படும் மெல்லிய ஜவ்வு கிழிந்து போவது,கால் மூட்டுகள் திரும்பி பாதிப்படைவது, டிஸ்க் ப்ரோலாப்ஸ் போன்ற பாதிப்புகள் ஏற்பட கூடும். உடலில் இரத்த ஓட்டம் கூட பாதிக்கப்படுமாம். ஸ்லிப் ஆகி கீழே விழும் போது கை மணிக்கட்டு பாதிக்க படுமாம். செருப்பு கடைக்கு போனால் இத்தகைய செருப்புகளை பார்க்க மட்டும் செய்யுங்கள். வாங்க வேண்டாம்.
பெண்கள் அணியும் ஹைஹீல்ஸ்கள் வெளி ஆட்களுக்கு தெரிந்து விடுகிறது.எனவே,இப்படி கட்டைல போறவ என்று கிண்டல் செய்ய முடிகிறது. ஆண்களுக்கு இருக்கும் Elevator Shoes - Secret Shoes என்றே அழைக்கப்படுகிறது. காரணம் ஷூக்களின் உள்ளே உயரமாக்க பட்டிருக்கும். வெளியில் இருந்து பார்த்தால் பெண்கள் ஹை ஹீல்ஸ் போல தெரியாது. ஆகவே,கட்டைல போறவனும் இருக்கிறார்கள்.


22 comments:

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் தேவையான பகிர்வு....

ஸ்டைல் என்று நினைத்து பிரச்சனைகளை வரவேற்கிறார்கள்...

குள்ளமான சிலர் தன்னுடைய உயரத்தினை அதிகப்படுத்திக் காட்டவும் இதை பயன்படுத்துகின்றனர்.

தேவையில்லாத ஒன்று இந்த கட்டையில் நடப்பது!

தமிழ் உதயம் said...

செருப்பு என்பது காலுக்கு பாதுகாப்பு. அதுவே உடம்புக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. நல்ல பதிவு.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல ஆராய்ச்சி பண்ணியிருகிங்க.

pudugaithendral said...

:))

தலைப்பை ரசிச்சேன். பெண் எது செய்தாலும் வெளியே தெரிந்துவிடும் உலகில் செருப்பு மட்டும் விதிவிலம்மா?

ஆனாலும் இந்த ஹைஹீல்ஸுக்கு நான் ஆதரவு தரமாட்டேன். நரம்பியல் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

Unknown said...

ஒரு நிமிழம் ஆடிட்டேன் கலக்கல் சகோ!

குறையொன்றுமில்லை. said...

நன்னா தான் கட்டைல போராங்க
எங்கபோனாலும் இதை பாக்கமுடியுது.

rajamelaiyur said...

தலைப்பு பிரமாதம்

ஹுஸைனம்மா said...

வாழும்காலத்திலேயே கட்டையில போய், நிஜ ‘கட்டைல போறதை’ துரிதப் படுத்திக்கிறாங்கன்னு சொல்லணும்.

காந்தி பனங்கூர் said...

தலைப்பை பார்த்ததும் யாரையோ திட்டுறீங்கனு தான் நினைச்சேன். ஆனால் அறிவுரை சொல்லியிருக்கீங்க. நல்ல பதிவு.

முனைவர் இரா.குணசீலன் said...

வித்யாசமான தேடல்.

தலைப்பும் வழங்கிய விதமும் நன்றாகவுள்ளது..

சுசி said...

அவ்வ்வ்வவ்.. அப்டினா நானும் கட்டேல போறவதான் அமுதா.. இப்போ கூட ஆபீஸ்க்கு கட்டேலதான் வந்திருக்கேன் :))))

சூப்பர் பகிர்வுங்க :)

VELU.G said...

கட்டையில போறத கொஞ்சம் கஷ்டம் தாங்க. எப்படித்தான் போறாங்களோ இந்த கட்டையில போறவங்க

செங்கோவி said...

என்ன ஒரு தலைப்பு..ஆஹா!

செங்கோவி said...

நீங்க சொல்றது சரி தான்க்கா..பேசன்ங்கிற பேர்ல நம்மாளுக உடம்பைக் கெடுத்துக்கறாங்க..நல்ல பகிர்வு.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

ADHI VENKAT said...

தலைப்பு பிரமாதம். இந்த ஹீல்ஸ் ரொம்ப கெடுதல். தெரிந்திருந்தும் சில பேர் பந்தாவுக்காக அணிந்து கொள்கிறார்கள். நல்ல பகிர்வு.

அம்பலத்தார் said...

காலணியும் கைப்பையும் இல்லையென்றால் அநேக பெண்கள் உயிரையேவிட்டிடுவாங்க

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... "பின்" விளைவுகள் பற்றி கவலைப்படவில்லை என்றால் போக வேண்டியதுதான்.

அமுதா கிருஷ்ணா said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

சுந்தரா said...

அதிரடியான தலைப்புடன் சுவாரஸ்யமான பதிவு :)

நட்சத்திர வாழ்த்துக்கள்!

Anonymous said...

நல்ல ஆராய்ச்சி...சுவாரஸ்யமான பதிவு ...

cheena (சீனா) said...

கட்டைல போறவங்கன்னு சொன்னாலே கட்டைல போறவனும் அதுக்குள்ள அடக்கம்தானுங்க - சரி சரி - ஆராய்ச்சி ந்ல்லாவே இருக்கு - வாழ்க வளமுடன்