Tuesday, August 23, 2011

பாஸ்டன் ஐஸ் கிங்கும் சென்னை ஐஸ் ஹவுஸும்

சென்னையில் தற்போது விவேகானந்தர் இல்லம் எனப்படும் ஐஸ்ஹவுஸ் பற்றி இந்த பதிவில்.

ஃப்ரெடரிக் டுயுடர் 1805-ல் அவரின் நண்பர்கள் மற்றும் மற்ற பிஸினஸ்மேன்களின் சிரிப்பிற்கு ஆளானார். ஏனெனில் அவர் எடுத்த முடிவு அத்தகையது.அமெரிக்காவின் நியூ இங்கிலாந்தின் ஏரியிலிருந்து ஐஸ் கட்டிகளை கப்பலில் ஐரோப்பா,கரீபியன் மற்றும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய போவதாக கூறினால் யாருக்கு தான் சிரிப்பு வராது. ஆனால், இந்த பாஸ்டன் ஐஸ் கிங், டூயுடர் ஐஸ் கம்பெனி மூலம் அதை நடத்தி காட்டினார்.
பாஸ்டனில் இருந்த ஒரு பணக்கார வக்கீல் அப்பாவிற்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் டுயுடர்.

16,000 மைலகளுக்கு அப்பால் உள்ள இந்தியாவிற்கு ஐஸ் அனுப்ப சாமுவேல் ஆஸ்டின் என்பவருடன் கூட்டு சேர்ந்தார்.1833-மே மாதத்தில் டஸ்கனி என்ற கப்பல் மசாசுசெட்ஸில் இருந்து கல்கத்தாவிற்கு 180 டன் ஐஸுடன் அனுப்பப்பட்டது. செப்டம்பரில் அந்த கப்பல் கல்கத்தா வந்தடைந்த போது 100 டன் ஐஸ் அதில் இருந்தது.

1842-ல் சென்னையிலும் ஐஸ் ஹவுஸ் கட்டப்பட்டு அங்கும் ஐஸ் அனுப்பட்டது. ஆண்டு முழுவதும் இங்கு வரும் ஐஸ்கட்டிகள் பாதுகாக்க பட்டன. சென்னை,கல்கத்தா,மும்பாய் ஆகிய மூன்று இடங்களிலும் ஐஸ் ஹவுஸ்கள் கட்டப்பட்டன. இதில் சென்னையில் மட்டுமே ஐஸ் ஹவுஸ் என்ற பெயருடன் அந்த இல்லம் இருக்கிறது. மற்ற இரண்டு இடங்களிலும் அந்த பெயர் ஐஸுடன் சேர்ந்து ஆவியாகி போனது.

ஐஸ் தாயாரிக்க இயந்திரம் கண்டுபிடிக்க பட்டதும் டுயுடரின் ஐஸ் பிசினஸ் முடிவிற்கு வந்தது. அதன் பின் இந்த பில்டிங் பிலிகிரி ஐயங்கார் என்ற வக்கீலால் வாங்கப்பட்டது. இவர் சுவாமி விவேகானந்தரின் தீவிர ஆதரவாளர் ஆவார்.


பிலிகிரி ஐயங்கார் இறப்பிற்கு பிறகு விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு ஜமீந்தாரால் வாங்கப்பட்டது. அதன் பிறகு அரசே இந்த கட்டிடத்தை வாங்கி பிராமண விதவை பெண்கள் ஹாஸ்டலாக்கியது. அதன் பிறகு பி.எட் படிப்பவர்களுக்கான ஹாஸ்டலானது.1897-ல் விவேகானந்தர் சென்னை வந்த போது 9 நாட்கள் இங்கு தங்கியிருக்கிறார். 1963-ல் விவேகானந்தர் நூற்றாண்டு விழாவில் விவேகானந்தர் இல்லமானது. 1997-ல் விவேகானந்தர் இங்கு வந்து தங்கி 100 ஆண்டுகள் ஆனது நினைவாக ராமகிருஷ்ண மடத்திற்கு தமிழக அரசு ஒத்திக்கு கொடுத்து உள்ளது. தற்போது இந்த இல்லம் ராமகிருஷ்ணா மடத்தின் சென்னை கிளையாக இயங்கி வருகிறது. புதன் கிழமை தவிர மற்ற நாட்களில் விவேகானந்தர் இல்லம் பொது மக்களின் பார்வைக்காக காலை 9 - 12.30,
மாலை 3 - 6.30 வரை திறந்திருக்கும். விவேகானந்தரின் அரிய புகைப்படங்கள் பார்வைக்கு உள்ளது.

26 comments:

Chitra said...

புதிய தகவல்கள். சுவாரசியமாக இருக்கின்றன . பகிர்வுக்கு நன்றிங்க.

தமிழ் உதயம் said...

ஐஸ் ஹவுஸ் பற்றி நிறைய தகவல்கள். நிறைவாய் இருந்தது.

Lakshmi said...

ஐஸ் ஹவுஸ் பற்றி இதுவரை
தெரிந்திராத விஷயங்களைப்பகிர்ந்து
கொண்டதற்கு நன்றீ.

ஆமினா said...

சிட்டி செண்டர்க்கு போகும் போது பஸ் வழியா பாத்தேன்.... உள்ளே போகும் வாய்ப்பு கிட்டல....

சுவாரசியமான தகவல்கள்!!1

தமிழ்வாசி - Prakash said...

ஐஸ் ஹவுஸ் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்... பகிர்வுக்கு நன்றி

ஜீ... said...

புதிய தகவல்கள்! நன்றி!

சங்கவி said...

நல்ல தகவல்.,

M.R said...

சுவாரஸ்யமான தகவல்கள் .பகிர்வுக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

புதிய தகவல்கள்... பகிர்வுக்கு மிக்க நன்றி.

சுசி said...

பகிர்வுக்கு நன்றி அமுதா :)

கோவை2தில்லி said...

நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றிங்க.

VELU.G said...

நல்ல தகவல்கள்

ILA(@)இளா said...

சுவாரசியமான தகவல்கள்

விக்கியுலகம் said...

நல்ல பகிர்வு....பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி!

sriram said...

என் பிறந்த வீட்டுக்கும் (சென்னை) புகுந்த வீட்டுக்கும் (பாஸ்டன்) உள்ள பழங்காலத் தொடர்பை சொல்லும் ஒரு இடுகை, ரொம்பவே ரசித்தேன் அமுதா.

ஒரு சின்ன திருத்தம் : "நியூ இங்கிலாந்தின் ஏரிகளில் இருந்து" என்று பன்மையில் வரவேண்டும்.

நியூ இங்கிலாந்து என்பது ஒரு ஊரின் பெயரல்ல. மசாசுசெட்ஸ் (Massachusetts), நியூ ஹாம்ப்ஷைர், வெர்மான்ட், ரோட் ஐலண்ட், மெய்ன் (Maine) மற்றும் கனெக்டிகட் ஆகிய ஆறு மாநிலங்கள் அடங்கிய இடத்தை நியூ இங்கிலாந்து என்று சொல்வர்.

இங்குள்ள ஏரிகளில் இருது நீரை எடுத்து ஃப்ரெடரிக் உபயோகித்துள்ளார்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அமுதா கிருஷ்ணா said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

அமுதா கிருஷ்ணா said...

ஏரிகள் என்று சுட்டி காட்டியமைக்கு நன்றி பாஸ்டன் ஸ்ரீராம்.

Rathnavel said...

அரிய தகவல்கள். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

tamiltidings said...

தெரியாத தகவல்கள் கிடைத்தன
நன்றி

Anonymous said...

அறியாத தகவல்கள்... நன்றி நண்பரே

GEETHA ACHAL said...

பகிர்வுக்கு நன்றி...நல்ல தகவல்..

செங்கோவி said...

தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்!

சாரி, இப்போ தான் பார்த்தேன்..

செயபால் said...

சென்னையில் இப்படி ஒரு அழகான கட்டிடமா? அதுவும் பழமையான.
தகவலுக்கும் படத்திற்கும் நன்றி

Jaleela Kamal said...

அட நம்ம ஏரியா/

விளக்கம் அருமை

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

விவேகானந்தர் இல்லத்துள் " உறைந்திருக்கும்" தகவல்கள் , எனக்குப் புதியவை!
ஆச்சரியப்பட்டேன்.
இப்போதும் கனடிய நிறுவனமொன்று அலெஸ்காக் கடலில் உள்ள பனிமலைகளைக் கட்டி இழுத்து வந்து
மத்திய கிழக்குக்கு தண்ணீர் விற்பது பற்றி செய்த ஆய்வு பற்றிய விபரணச் சித்திரம் பார்த்தேன்.
எண்ணெய் பணம் உண்டு. நடக்கும்.

cheena (சீனா) said...

பலப்பல தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - வாழ்க வளமுடன்