X,Y,குரோமோசோம்கள் பற்றி கொஞ்சமா தெரியும். பள்ளியில் என்னவென்றே தெரியாம புரியாம கடம் அடித்து படித்தது. அதை கொஞ்சமா தூசி தட்டி இருக்கிறேன்.
குரோமோசோம்களில் தான் மரபணுக்கள்(Genes) இருக்கின்றன. பரம்பரையாக நமக்கு வருகின்ற குணம்,நிறம்,உயரம்,நோய்கள் இவைகள் இந்த மரபணுக்கள் மூலமே நமக்கு வருகின்றன. 23 ஜோடி குரோமோசோம்கள் மனித உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கின்றன.குரோமோசோம் 1,குரோமோசோம் 2,குரோமோசோம் 3, இப்படியாக குரோமோசோம் 22 வரை ஜோடி ஜோடியாக இருக்கின்றன. தாயிடமிருந்து ஒன்றும், தகப்பனிடமிருந்து ஒன்றும் ஒவ்வொரு ஜோடியில் இருக்கிறது. 23ஆவது குரோமோசோம் செக்ஸ் குரோமோசோம் ஆகும். ஒரு ஜோடி செக்ஸ் குரோமோசோம்கள் ஒவ்வொரு செல்லிலும் இருக்கின்றன. இந்த ஜோடியில்
XX-குரோமோசோம்கள் இருந்தால் பெண்.
XY-குரோமோசோம்கள் இருந்தால் ஆண்.
குரோமோசோம் 1-ல் இருக்கும் ஜீன்களின் எண்ணிக்கை - 4220.இதில் ஒரே ஒரு ஜீனில் ஏதேனும் கோளாறு என்றாலும் அதற்குரிய நோய் தாக்கும். குரோமோசோம் 21-ல் 300 -400 ஜீன்கள் இருக்கின்றன. இரண்டு 21 குரோமோசோம்களுக்கு பதிலாய் மூன்று இருந்தால் வரும் நோய் தான் Down Sydrome.
தொடக்கத்தில் இந்த X,Y குரோமோசோம்களிலும் ஒரே அளவில் தான் மரபணுக்கள் இருந்தனவாம்.இன்று X-குரோமோசோமில் இருப்பதோ 2000 மரபணுக்கள்.ஆனால்,Y-குரோமோசோமில் இருப்பதோ 78 மரபணுக்களே. SRY GENE தான் Y-குரோசோமில் உள்ள முக்கியமான ஒரு ஜீன் ஆகும்.XX என இரண்டும் ஒன்றாக இருக்கும் போது ஒரு மரபணுவில் எதேனும் பிரச்சனை எனில் கூடவே இருக்கும் இன்னொரு மரபணு அதனை சரி செய்து விடுகிறது. ஆனால், Y-குரோமோச்சோம் தனித்து வருவதால் ஒவ்வொரு முறையும் அதன் மரபணுவில் ஒன்றை அது இழந்து விடுகிறதாம். X-குரோசோம்கள் அளவில் Y-ஐ விட பெரியதாகவும்,நல்ல சுறுசுறுப்பான DNA,RNA,PROTEIN பெற்று இருக்கின்றன.
அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளுக்குள் Y-குரோமோசோம்கள் தங்களிடம் உள்ள 78 மரபணுக்களையும் இழக்க நேரிடும்.எல்லா மரபணுக்களும் காணாமா போச்சுன்னா எப்படி ஆண் குழந்தைகள் பிறக்கும்?ஆணே இல்லையெனில் எப்படி குழந்தைகள் பிறக்கும்? அதெல்லாம் கண்டு பிடித்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு சந்தோஷம் என்னவெனில், Y-குரோசோம்கள் ரகசியமாக தன் மரபணுவில் முக்கியமானவைகளுக்கு ஒரு பிரதி எடுத்து வருகிறதாம். MADAM-I 'M ADAM இந்த சொல்லை எப்படி முன்னாடி, பின்னாடி வாசித்தால் ஒரே மாதிரி வருகிறதோ அப்படி பிரதி எடுத்து வருகிறதாம்.
எனவே,அவ்வளவு சீக்கிரம் Y-யில் இருக்கும் 78 மரபணுக்களும் காணாப்போகாது.
ஆனாலும்,வரும் நாட்களில் என்னென்ன மரபணுக்கள் ஆண்களை விட்டு காணாமல் போகணும் என்று என்னை கேட்டால்,
1.இந்த டி.வி ரிமோட்டை தன் கையில் வைத்து கொண்டு என்ன பார்ப்பது என்று குறிக்கோள் இல்லாமல் அடிக்கடி சேனல் மாற்ற செய்யும் அந்த குறிப்பிட்ட மரபணு.
2.புடவை கடைக்கு வரமாட்டேன் என்று தைரியமா மனைவியிடம் சொல்ல முடியாமல் கடனே என்று கடை வாசலில் தேவுடு காக்க வைக்கும் அந்த மரபணு.
3. காய்,பழக் கடைக்கு தனியே போனால் அழுகியதும்,பழையதையும் பார்த்து வாங்கி வரும் அந்த மரபணு.
4. குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாட்கள் போன்ற முக்கியமான நாட்களை மறந்து போகும் அந்த மரபணு.
5. பாட்டிலை பார்த்தாலே நாக்கை சப்புக் கொட்டும் அந்த மரபணு.
6. மனைவி வந்ததும் தன் கூட பிறந்தவர்களையும்,பெற்றவர்களையும் மறக்க வைக்கும் அந்த மரபணு.
7. தலையில் வழுக்கை விழ வைக்கும் அந்த குறிப்பிட்ட மரபணு.
இப்படியே என்ன என்ன மரபணுக்கள் காணாமா போகணும்னு பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்களேன்

58 comments:
,வரும் நாட்களில் என்னென்ன மரபணுக்கள் ஆண்களை விட்டு காணாமல் போகணும்
..... நீங்கள் குறிப்பிட்டு இருப்பவைகளில், சில பெண்களுக்கும் பொருந்தி விடுகிறதே என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன். ஹி,ஹி,ஹி,ஹி....
அப்பாடி... என்ன ஒரு ஆசை... சில ஆசைகள் நியாயமாக இருந்தாலும்.... :)))
ஆசை நிறைவேறட்டும்...
நல்ல பகிர்வு, ஒரு விஷயம் எதுவுமே நமக்கு தெரியாம நடக்குது ஹா ஹா ஹா
ஆஹா, க்ரோம சோம்களில் இத்தனை
விஷயம் இருக்கா? அதை யோசித்தும்
ஒரு பதிவு போட முடியுமா?
இதத்தான் ப்ளான் பன்னுரதுங்கறதா யம்மாடி....!
ஆஹா சூப்பரா யோசிச்சி இருக்கீங்களே....!!!
முடி கொட்டுற மரபணு....
இந்த வார நட்சத்திரம் - ஓர் அறிமுகம்
Congratz!!!
பெண்களின் எந்த ஜீனேல்லாம் காணாமல் போகனும்னு அடுத்த பதிவுல சொல்லுங்க ஹே ஹே ஹே ஹே.....முக்கியமா பாலை அடுப்புல வச்சிட்டு மறக்குறது....
ஹஹ்ஹஹா
ஆஹா, க்ரோம சோம்களில் இத்தனை
விஷயம் இருக்கா?
”சில பெண்களுக்கும் பொருந்தி விடுகிறதே என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்”
சித்ரா அதையெல்லாம் பப்ளிக்கா சொல்ல கூடாது.
வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்..ஐ.ரா.ரமேஷ் பாபு..Lakshmi..
நன்றி விக்கியுலகம்..
நன்றி தமிழன் வீதி..
///பெண்களின் எந்த ஜீனேல்லாம் காணாமல் போகனும்னு அடுத்த பதிவுல சொல்லுங்க ஹே ஹே ஹே ஹே.....முக்கியமா பாலை அடுப்புல வச்சிட்டு மறக்குறது..//
பாலை அடுப்பில் வைச்சுட்டு மறக்கிறது.ஹா ஹா ஹா..அது சும்மா பால் எவ்ளோ தூரம் பொங்குதுன்னு ஒரு ரிசர்ச் நாஞ்சில் மனோ...
//ஆஹா, க்ரோம சோம்களில் இத்தனை
விஷயம் இருக்கா?//
இன்னும் இருக்கு சமுத்ரா..நான் இங்கு சொன்னது ஒரு துளி..
scince teacher!!!!!!!!!!!!!!
நல்லாயிருக்குங்க உங்க பதிவு
ஏங்க XX ல இந்த பிரச்சனையே வராதுங்களா
- இப்படிக்கு அப்பாவி ஆண்கள் சங்கம்
நட்சத்திர வாழ்த்து(க்)கள் அமுதா!
முதலில் வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன்
தமிழ் மண நட்சத்திர வாழ்த்துக்கள் சகோ
அப்புறம் என்ன சொன்னிங்கே...
//5. பாட்டிலை பார்த்தாலே நாக்கை சப்புக் கொட்டும் அந்த மரபணு.//
அப்புறம் என்ன பாட்டில் என்று சொன்னால் இந்த சிறியவன் தெரிந்துக் கொள்வேன்.
//மனைவி வந்ததும் தன் கூட பிறந்தவர்களையும்,பெற்றவர்களையும் மறக்க வைக்கும் அந்த மரபணு//
எங்கூட்ல அப்படியே தலகீழால்ல இருக்கு!! :-((((
//ஆனாலும்,வரும் நாட்களில் என்னென்ன மரபணுக்கள் ஆண்களை விட்டு காணாமல் போகணும் என்று என்னை கேட்டால்,
//
செம...செம.....செம....
தேவையற்றவைதான் காணாமல் போகும்.இந்த இடத்தில் உடலியலில்”சந்துருவின் தங்க விதி”(Chandru's golden rule)யைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. ”அடிக்கடி பயன்படுத்தாதது எதுவும் விரைவில் பயன் படாமல் போய் விடும்.”என்பதுதான்.
1, 4, 6 இவற்றை
நீக்க வசதி இருந்தா சொல்லுங்க.
வாழ்த்துகள் தமிழ்மண நட்சத்திரம் ஆனதிற்கு..
நட்சத்திர வாழ்த்துக்கள் தோழி.
புகை பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட போதைப்பழக்கங்களுக்கு அடிமையாக்கும் அந்த மரபணு காணாமல் போனால் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்.
தங்கள் பதிவை இன்றுதான் அறிந்தேன் அதுவும் தமிழ் மண நட்சத்திரமாக..
..அருமை அருமை..
உமது தேடலின் ராஜாங்கம் தொடரட்டும் தோழியே...
scince teacher!!!!!!!!!!!!!!
இல்லை ஹிஸ்ட்ரி டீச்சர் நான்..நன்றி சி.பி.செந்தில் குமார்.
சங்கம் அமைத்து கேட்டாலும் xx-ல் பிரச்சனை வராது velu.ஜி.
என் இனிய நட்சத்திர வாழ்த்துகள் அமுதா.
கல்லூரியில் ஒரு பாடம் இது. நினைவுக்கு பலதும் வந்து போகின்றது.
முத்துராமனுக்கும் என் வாழ்த்துகள்.
வருகைக்கு நன்றி ஹூஸைனம்மா,ஆமினா,ஹைதர் அலி..
சந்துரு கோல்டன் ரூல் நச்..
நாம் நீக்க வேண்டாம் எதிர்காலத்தில் 1,4,6 அதுவா போயிடும்
நிகழ்காலத்தில் சார்.
//புகை பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட போதைப்பழக்கங்களுக்கு அடிமையாக்கும் அந்த மரபணு காணாமல் போனால் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்//
முனைவர் குணசீலன் ஆசை நிறைவேறட்டும்.
வருகைக்கு நன்றி சபரி..
//கல்லூரியில் ஒரு பாடம் இது. நினைவுக்கு பலதும் வந்து போகின்றது//
நன்றி ஜோதிஜி..
சம்பளம் வாங்கிய முதல் வாரம் அம்பானி வாழ்க்கையும் அப்புறம் கடைசி வாரத்துல மினரல் வாட்டரும் தயிர் சாதமும் மட்டுமே கதியாக ஓடும் bachelor வாழ்க்கை .....இந்த ஜீன் மாறி விட்டால் நன்றாக இருக்கும்
இன்று தான் தங்கள் தளம் முதன் முதலாக வருகிறேன் .அருமை . க்ரோமோசோம்களின் விளக்கம் அருமை . இன்று முதல் தங்கள் தளம் தொடர்கிறேன் .
தமிழ்மணத்தின் மூலம் இன்றுதான் அறிமுகம் எனக்கு.
நட்ச்சத்திர வாழ்த்துக்கள்
ஆண்களின் துவைக்காத ஜீன்கள் எல்லாம் காணாமல் போனால் போதாதா?
நட்சத்திர வாழ்த்துகள் அமுதா..
படிச்சதெல்லாம் மறுபடியும் ஞாபகம் வருது.
நட்சத்திர வாழ்த்துக்கள் !!
Kalakkunga intha vaaram !!
//இந்த டி.வி ரிமோட்டை தன் கையில் வைத்து கொண்டு என்ன பார்ப்பது என்று குறிக்கோள் இல்லாமல் அடிக்கடி சேனல் மாற்ற செய்யும் அந்த குறிப்பிட்ட மரபணு//
ஆரம்பமே அசத்தல்!
என்னாமா பிளான் பண்ணுறீங்க? :-)
இன்றுதான் முதன்முதல் வருகிறேன்! அருமை!
கண்டிப்பா மாறிடும் கிறிஸ்டோஃபர்..
தொடர்வதற்கு நன்றி M.R
நன்றி கோகுல்..
//ஆண்களின் துவைக்காத ஜீன்கள் எல்லாம் காணாமல் போனால் போதாதா// போக்கிடலாம் இளா..
வருகைக்கு நன்றி மோகன் குமார்,அமைதி சாரல்..ஜீ..
உங்கள் தளத்திற்கு எனது முதல் வருகை. அருமையான வியப்பூட்டும் அறிவியல் பதிவு.தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள்.
நட்சத்திர அந்தஸ்துக்கு வாழ்த்துக்கள்!
அறிவியலுக்கு மாறில்லாத படிக்க சுவையான பதிவு எழுதுவதற்கு வாழ்த்துக்கள்.
புடவை கடைக்கு வரமாட்டேன் என்று தைரியமா மனைவியிடம் சொல்ல முடியாமல் கடனே என்று கடை வாசலில் தேவுடு காக்க வைக்கும் அந்த மரபணு.
--ஹி. ஹி... ஆணின் வேதனையை நன்றாக புரிந்துக்கொண்டுள்ளீர்கள். ஒரு அறிவியற் செய்தியை அகடவிகடமாக்கிவிட்டீர்கள்.
தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்!
சூப்பரா இருக்கு பதிவு!
:)
எந்த ஜீனெல்லாம் காணாம போகணும்னு பெண்கள் நினைக்கிறாங்கன்னு புட்டுப்புட்டு வச்சிட்டீங்க!!
நட்சத்திர வாழ்த்துகள்..நல்ல பகிர்வு...
சுடிதாரை கண்டால் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் தானாகவே கழுத்தை திரும்ப வைக்கும் இந்த கேடு கெட்ட ஜீன் ஒழிந்தால் ஆண்களுக்கு (கல்யாணம் ஆகாத) இருக்கிற 90 % பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று நினைக்கிறன் ......
நல்ல பகிர்வு,பகிர்வுக்கு நன்றி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
எங்களுக்கு ரொம்ப புடிச்சவங்கள சந்தேக படுற மரபணு
சின்ன விசயத்துக்கும் கோவ படுற மரபணு
மொபைல் இல்லாம இருக்க முடியாம நச்சரிகுற மரபணு
ரொம்ப முக்கியமா home page ல எதுவும் இல்லன்னு தெரிஞ்சும் அடிக்கடி refresh பண்ணி ஸ்க்ரோல் பண்ற மரபணு :)
ஏங்க இவ்வளவு தகவல்கள் சொல்லி விட்டு - ஆண்களின் சில ஜீனெல்லாம் காணாமப் போகணூம்னு வேற ஆசப்படறீங்க ..... பரவால்ல - வாழ்க வளமுடன் - நடசத்திர வார முடிவில் நட்சத்திரமாக ஜொலித்த்தற்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Manaiviyin thiramaiyai opukola manamillatha ego vai kodukkum gene (genie) kanamal pogatum.
Post a Comment