Saturday, August 27, 2011

பிடித்தவர்கள் - 1

ராஜீவ் காந்தி

இந்தியாவின் ஆறாவது பிரதமராக இருந்து இந்தியாவை ஸ்டைலான பாதையில் அழைத்து செல்ல முற்பட்டவர்.இவரின் இழப்பு எப்பவும் மறக்க முடியாத ஒன்று. நம் வீட்டில் ஒருவரை இழந்தது போன்று ஒரு துக்கத்தினை தர கூடியது. இவரின் வாரிசுகள் ராகுல்,பிரியங்காவினை பார்க்கும் போது எல்லாம் பரிதாபமாக இருக்கும். மிக அருமையான ஒரு தந்தையை கொடுமையாக பறிகொடுத்தவர்கள்.

தீதி மம்தா பானர்ஜி

1955-ல் கல்கத்தாவில் பிறந்த இவரின் எளிமை என்னை கவர்ந்தது. வரலாற்றில் முதுகலையும்,சட்டமும் பயின்றவர். மிக எளிமையான உடையும், நகை இன்றியும்,காட்டன் புடவையும், ஒரு துணி பையினை தோளில் தொங்க விட்டப்படி இருப்பதுமே இவரின் ஸ்டைல்.
                காங்கிரசில் 1970-ல் சேர்ந்து படிபடியாக முன்னேறியவர். 1997-ல் காங்கிரசில் இருந்து வெளியேறி திரிணாமுல் காங்கிரசை தோற்றுவித்தார். 1999-ல் NDA வில் சேர்ந்து மத்தியில் ஆட்சியினை பிடித்து ரயில்வே மந்திரி ஆனார். 2009-லும் ரயில்வே மந்திரியாக இருந்தார். துரந்தோ என்னும் அதிவேக ரயில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது இவர் காலத்தில் தான்.2011 மே மாத தேர்தலில் ஜெயித்து தற்போது மேற்கு வங்கத்தின் முதல் அமைச்சராக இருக்கிறார். முதல் அமைச்சரானதும் அவர் செய்த முதல் காரியம் சிங்கூர் விவசாயிகளுக்கு தொழிற்சாலைக்காக பெறப்பட்ட 400 ஏக்கர் நிலத்தை திருப்பி கொடுத்தது தான். தீதி மேலும் நல்லது செய்ய வணங்குகிறேன்.

நதியா

பூவே பூச்சூடவா,சின்ன தம்பி பெரிய தம்பி,பூக்களை பறிக்காதீர்கள்,உயிரே உனக்காக போன்ற படங்களில் நடித்து தன் டீசண்டான உடையால் அனைவரையும் கவர்ந்தவர் என்னை மிக கவர்ந்தார்.



மாதவி


ராஜபார்வை,டிக்,டிக்,டிக்,சட்டம்,தில்லு முல்லு,தம்பிக்கு எந்த ஊரு,உன் கண்ணில் நீர் வழிந்தால்,விடுதலை போன்ற படங்களில் வந்த மாதவி பிறகு ஹிந்தியில் அதிகம் நடிக்க போனதால் தமிழ் படங்களில் காணாமல் போனார்.ஏன் ஹிந்திக்கு போனார் என்று தோன்றும்?இங்கே இருந்து இருந்தால் இன்னும் அதிக படங்களில் நடித்து இருந்திருக்கலாம்.அசத்தலான கண்களுக்கு சொந்தகாரர்.அருமையாக நடனமும் ஆடுவார்.

  மேடம் ரால்ஃப் சர்மா என்பவரை திருமணம் செய்து மூன்று பெண் குழந்தைகளுடன் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் வசிக்கிறார் என்ற செய்தி படித்து சந்தோஷமாக இருந்தது.

சரிதா

                                     என்ன இரு கண்கள்
மரோசரித்ரா,சுஜாதா,நூல்வேலி,அக்னி சாட்சி,நெற்றி கண்,அச்சமில்லை அச்சமில்லை,கல்யாண அகதிகள்,புதுகவிதை போன்ற படங்களில் நம் பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் வருவார். மிக அருமையான குரல்வளம்.

சிம்ரன்


மாடர்ன் கேர்ள், குடும்ப பாங்கான கேரக்டர் இரண்டும் பொருந்த கூடியவர். அருமையாக நடனம் ஆட கூடியவர். நேருக்கு நேர்,அவள் வருவாளா,கண்ணெதிரே தோன்றினாள்,வாலி,பார்த்தேன் ரசித்தேன்,12B,
கன்னத்தில் முத்தமிட்டால்,பஞ்ச தந்திரம் போன்ற படங்களில் நன்கு நடித்தும் இருப்பார்.

S.P.பாலசுப்ரமணியம்
மன்றம் வந்த தென்றலுக்கு -- மெளன ராகப் பாடல் யாருக்கு தான் பிடிக்காமல் போகும். மிக அருமையான மனிதர் என்பது அவரின் இண்டர்வியூக்களில் தோணும். என்ன ஒரு குரல். என்ன ஒரு சாதனை.  ஏக் துஜே கேலியே, Hum Aapke Hain Kaun ஹிந்தி படப் பாடல்கள்.60+ வயதிலேயும் 25 வயது கதாநாயகனுக்கு அட்டகாசமாய் பொருந்தும் குரல்.
காதலின் தீபம் ஒன்று(தம்பிக்கு எந்த ஊரு)
காதல் ரோஜாவே(ரோஜா),பனிவிழும் மலர் வனம்(நினைவெல்லாம் நித்யா),தங்க தாமரை மலரே(மின்சார கனவு), என்ன சத்தம் இந்த நேரம் (புன்னகை மன்னன்).....சொல்லி கொண்டே போகலாம்.தனியே பதிவிடணும்.

பிரகாஷ் ராஜ்

டூயட் படத்தில் பாலசந்தர் டைரக்‌ஷன் என்பதால் ஓவர் ஆக்ட் செய்திருப்பார். இருவரிலும் ஓவர் ஆக்ட் தான். கில்லியிலும் ஓவர் ஆக்ட் தான்.மொழியில் சூப்பர் ஆக்‌ஷன்.அபியும் நானும்,வசூல்ராஜா சொல்லி கொண்டே போகலாம்.சில சீன்களில் அட்டகாசமாய் நடித்து பெயர் வாங்கி விடுவார்.

JOHN TRAVOLTA

PULP FICTION,FACE OFF இந்த இரண்டு படங்களும் தான் முதலில் பார்த்தது. அட்டகாசமான ஸ்டைலில் அலட்சியமாய் வருவார். அதன் பிறகு Broken Arrow,Domestic Disturbance பார்த்து இன்னும் ஒவ்வொரு படமாக பார்க்கும் ஐடியாவில் இருக்கிறேன். இரண்டு வருடங்கள் முன்பு இவரின் 16 வயது மகன் இறந்துவிட்டார். அவருக்கு KAWASAKI SYNDROME என்ற நோய் தாக்கி அதனால் வரும் வலிப்பு நோயால் பாத்-டப்பில் தலை மோதி இறந்திருக்கிறார்.Travolta-க்கு போன வருடம் பெஞ்சமின் என்று ஒரு மகன் பிறந்திருக்கிறார். அவரின் மகளின் வயது 10.


லிஸ்டில் பெயர்கள் இன்னும் இருக்கு.இன்றைக்கு இது போதுமே.

13 comments:

Unknown said...

பகிர்வுக்கு நன்றி!

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கும் இவர்கள் எல்லாரையும் பிடிக்கும்....!!!

குறையொன்றுமில்லை. said...

உங்களுக்கு பிடித்தவர்கள் எங்களுக்கும் பிடித்தமானவர்கள் தான்.

காவ்யா said...

எனக்குப்பிடித்தவரின் படத்தை முதலில் போட்டதற்கு நன்றிகள். அவர் படத்தைப்பார்த்தவுடன் எனக்கு இருக்கும் இரத்த அழுத்தம் குறைகிறது. என் டாக்டரிடம் சொன்னேன். அவர் சொன்னார்: அப்படியா? அடிக்கடி பாருங்கள். என்னிடமில்லா மருந்து அவரிடம் கண்டிப்பாக இருக்கிறது/ என்று சொன்னார். எனவே தினந்தினம் அவர் படத்தைப்பார்க்கிறேன். எடுத்துவிடாதீர்கள். யாரவர்? ராஜீவ் காந்தி படத்துக்கும் மேலே இருக்கிற படமே அவர்படம்!

ஸ்வர்ணரேக்கா said...

//இருவரிலும் ஓவர் ஆக்ட் தான்//

என்னதான் நல்லா நடிக்கவந்தாலும், அப்பப்ப ஓவர் ஆக்ட் குடுக்கறதுல சிவாஜியும், பிரகாஷ்ராஜூம் ஒண்ணு...

சிமி நடிப்பு டாப்பு... அதுவும் வாலி படத்துல டாக்டர் கிட்ட போற சீன் செம...

Riyas said...

நல்ல பகிர்வு

வெங்கட் நாகராஜ் said...

பிடித்தவர்கள் பட்டியல் நன்றாக இருக்கிறது. உங்கள் பட்டியலில் பெரும்பாலானவர்கள் எனக்கும் பிடித்தவர்கள் தான்.

Anonymous said...

எனக்கும் இவர்கள் எல்லாரையும் பிடிக்கும்...

Ravichandran Somu said...

தாமதமான தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள் !!!

ஜோதிஜி said...

இதை எழுதிக் கொண்டு இருக்கும் போது பாடல் கேட்டுக் கொண்டுருப்பது சரிதா சிவகுமார் பாடலை.

எனக்கு பிடித்த (மிக மிக)நடிகை சரிதா.

Admin said...

அன்பான தமிழ் வலைப் பதிவர்களுக்கு வணக்கம்.

"தேன்கூடு" தமிழ் வலைப் பதிவு திரட்டி சில நண்பர்களின் உதவியுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.

தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்

cheena (சீனா) said...

எனக்கு ராஜீவ் காந்தி பிடிக்கும் - இங்கு வங்கிகளில் கணினித் துறையினை அறிமுகம் செய்தவர் அவர் தான். சாம் பிட்ரோடாவும் அவரும் சேர்ந்து செய்த தொழில் நுட்பப் புரட்சி பாராட்டத்தக்கது. வாழ்க வளமுடன்

சுதா SJ said...

உங்களுக்கு பிடித்தவர்கள் அத்தனை போரையும் எனக்கும் பிடித்து இறுக்கு முதலாவது ஆளை தவிர, உண்மையில் நல்ல பகிர்வு சுவராசியமாக படித்தேன்.