போன சனியன்று திருப்பதி-திருமலை போய் வந்தேன். ஏழுகொண்டலவாடாக்கு மக்கள் மேல் என்ன கோபமோ தெரியலை.
கோயிலிற்கு செல்பவர்கள் சக்கை பிழிந்து அனுப்ப படுகிறார்கள். நான் போன அன்று செம கூட்டம்.கோயில் உள்ளே மெயின் கோபுரம் நுழைந்ததும்,உள்ளே தரிசனம் முடித்தவர்கள் வெளியே வரவும் இரண்டாவது கேட்டில் கட்டி வைத்துள்ள கயிறினை இழுத்து கியூவில் வரும் நம்மை உள்ளே அப்படியே தள்ளுகிறார்கள்.ஆடு,மாடு மந்தைகள் போல ஒரு 700 முதல் 1000 பேர் கியூ எதுவும் இல்லாமல் அப்படியே தப தபெவென்று கோயில் உள்ளே ஓடுகிறார்கள்.இதில் கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்,வயதானவர்கள் எல்லோரும் இருக்கிறோம்.
உள் பிரகாரத்தில் ஒரே அடிதடி கோயில் உள்ளே கருடாழ்வார் இருக்கும் இடத்தில் நுழைவதற்கு.நன்கு பலசாலிகளாய் இருப்பவர்கள் அடித்து பிடித்து உள்ளே நுழைய அவர்களுடன் மாட்டி கொண்ட நாமும் அப்படியே இழுத்து செல்ல படுகிறோம்.அப்பாடி உள்ளே போயாச்சு அதோ ஏழுகொண்டலவாடா தெரிகிறார் என பார்த்து கொண்டே செல்லும் போது உள்ளே தடிதடியாய் உள்ள தேவஸ்தான ஆட்களும், கல்லூரியில் படித்து கொண்டே இங்கே சேவைக்காக வந்துள்ள புளூ யூனிஃபார்மில் இருக்கும் பசங்களும் (Guide) (என்ன சாப்பாடு சாப்பிடுகிறார்களோ) ஒரு வரைமுறையின்றி அகப்பட்ட பக்தர்கள் முதுகில் இரண்டு கை வைத்து கன்னாபின்னாவென்று தள்ளுகிறாகள்.
தள்ளப்பட்டவர்கள் அடுத்தவர்களில் மீது மோதி அவர்களையும் தள்ளுகிறார்கள்.துண்டை காணோம்,துணியை காணோம் என்று வெளியில் வீசி எறிய படுகிறோம்.சாமி கும்பிட போன இடத்தில் கெட்ட வார்த்தைதான் வாயில் வந்தது.
300 ரூபாய் சீக்கிர தரிசனத்திற்கு தர்ம தரிசனத்திற்கு வரும் கூட்டம் வருகிறது. செம கலெக்ஷன்.அடைக்கப்பட்டிருக்கும் கேஜில் இருந்து கோயில் சைடில் இருக்கும் மரப்பாலத்தில் பக்தர்கள் வரும் முன்னர் 50 ரூபாய்,300 ரூபாய், மற்றும் தர்ம தரிசனத்திற்கு வரும் அனைவரும் ஒரே பாதையில் இணைத்து விடுகிறார்கள்.
இவ்வளவு பணம் வைத்துள்ள தேவஸ்தானம் டெக்னாலஜி இவ்வளவு வளர்ந்தப்பிறகும் இப்படி காட்டு மிராண்டிதனமாய் நடந்து கொள்வது எதற்காக? மனிதனை இப்படி விலங்குகளை போல் எதற்கு நடத்த வேண்டும்.
அமைதியான முறையில் அங்கு தரிசனம் செய்ய வழியே இல்லையா? அதற்கு நம் அறிவியல் நமக்கு உதவாதா? தேவஸ்தானத்தில் ஐ.ஏ.எஸ் படித்தவர்கள் கூட வேலை செய்கிறார்கள்.அவர்கள் படிப்பு இதற்கு உதவாதா?
ஒரு வயதிற்குட்பட்ட குழந்தை வைத்திருக்கும் குடும்பம் கோயில் உள்ளே செல்வதற்கு ஒரு ஸ்பெஷல் வரிசை உள்ளது. உள்ளே நுழையும் போது அந்த கைக்குழந்தையின் கையில் புளூமையால் ஒரு வாரத்திற்கு அழியாத அடையாளம் வைக்கப்படுகிறது!!!
லட்டு கொடுக்கும் இடம் மிக பெரியதாய் கட்டப்பட்டு லட்டு சீக்கிரம் வழங்குகிறார்கள்.ஒரு இடத்தில் இங்கு காலாணிகள் வைக்கும் இடம் என்று இருந்தது.பார்த்து சிரித்துக் கொண்டே வந்தோம்.இடுக்கண் வருங்கால் நகுக...

19 comments:
மிக உண்மை சகோதரி
நானும் சென்ற இருபதாம் தேதி சென்று வந்தேன் இவர்கள் செய்கிற அழிச்சட்டியத்தில் அந்த ஆண்டவனே நம்மிடமிருந்து அந்நியமாகிறார்
மனது வைத்தால் எதையும் மாற்ற முடியும்..நாம் தான் பொதுவாகவே மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாதவர்கள் ஆயிற்றே..நல்லவேளை நான் சென்ற போது கூட்டமே இல்லை..ஏழுமலையான் மகிமை.
இவங்க பண்ற அட்டகாசத்தால சிலசமயங்கள்ல சாமி கும்பிட்ட திருப்தியே இருக்கறதில்லை :-(
ஐயயோ, கேக்கவே பயம்மா இருக்கே. நானும் அடுத்தவாரம் திருப்பதி போக
ப்ளான் பண்ணிகிட்டு இருக்கேனே.
இந்தப்பதிவு படித்ததும் யோசிக்க வேண்டி வருதே,
நம் நாட்டில் நமது உயிரை நாம்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்! அந்த உரிமையை அரசாங்கம் இன்னும் பறித்து கொள்ளவில்லை!
வாழ்க மதசார்பற்ற பாரத அரசு!
U cd write ur post in English and send to the TTD; but w/o using sarcasm.
Dont entertain much expectations from IAS officers. Only mananagement gurus can be of real help. IAS officers r poor managers.
TTD can ask any IIM or an expert mgment group to make a study of crowd mgment and suggest ways and means to improve it as u wish. In fact, the TTD website says it s periodically done, for e.g the staggering of entry hours for worship was a suggestion implemented a few yrs ago which proved successful.
Went to Tirupati in 80s; and again, once when the said system came into vogue. I found a marked improvement and was happy.
I never go pushing others in the row. I put myself the last of the last. By the time, I enter, the workers r relaxed as the crowd has thinned and they dont push me, except saying: Jaragandi.
BTW: Did u go in sarvadarisanam or spl ? When did u enter and when u came out ?
Treating the worshippers as inanimate objects s unavoidable in the present circumstances of the temple.
Pl appreciate that the workers there r more concerned abt ur safety than abt ur purpose i.e worship. Coz if u dont worship to ur satisfaction, that wont matter to them. But a bungling control of the crowd, for e.g treating u gently will lead to chaos and finally stampede, resulting in human tragedy of many deaths.
In the recent history of the temple, as far as I know, no such tragedy has happened.
Congrats to TTD.
பள்ளி/கல்லூரி விடுமுறை, பிரம்மூத்ச்வம் , கல்யாண சீசன் ,வார விடுமுறை, பண்டிகை இவற்றை தவிர்க்கவும்! செவ்வாய் ,புதன் ,வியாழன் தரிசனம் ஓரளவு நன்று! பழனி, சமயபுரம் கோவிலில் வல்ல muறையில் பக்தர்களை வழி நடத்துகின்றனர்! திருமலைக் கோவிலில் உள்புகுதலும் , வெளியேறுதலும் ஒரே வழியில்!அதுவே அனைத்து பிரச்சனைக்கும் காரணம்!
ஐயோ..... நீங்களும் நசுங்கி வெளியில் விழுந்தீங்களா:(
என் பங்குக்கு நானும் புலம்பினேன் மூணு இடுகை எழுதி!
இனிமேல் போகவே கூடாதுன்ற முடிவோடுதான் மலை இறங்கினேன். அப்படிப்போனாலும் தரிசனம் வேண்டாம். அக்கம்பக்கம் சுற்றிப்பார்த்துட்டு வரணும் என்பது இப்போதைய முடிவு.
திருப்பதி தரிசனம் இனிமையாக நடைபெற வேண்டுமெனில், காலை நான்கு மணிக்கு முன்பான தரிசனத்திற்கு சென்றுவிட வேண்டும். சீக்கிர தர்சன் மூலம் செல்லலாம். சர்வ தர்சன் ஆரம்பிக்கும் முன் செல்வதுதான் நல்லது.
நம் இருக்கும் வீடே கோவில். இப்படி தேடித் தேடி போகும் போது இது போன்ற இன்னும் பல நிகழ்வுகள் நம் கண் முன் கிடைத்துக் கொண்டேயிருக்கும். ஆனால் ராஜபக்ஷே வந்த போது உண்டான மரியாதை உங்களுக்குத் தெரியும் தானே? இப்ப புரியுமே? இப்போது ஆன்மீகம் என்பது வேறு பாதையில் போய் பல வருடங்கள் ஆகி விட்டது. எப்போதும் குழந்தைகளுடன் இது நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். உள்ளே உள்ள அமைதியும் நம்மை விட்டு போய்விடும்.
அநியாயமாக இருக்கிறதே!
உங்கள் அனுபவம் மிக வேதனை தருகிறது.
இவை என்றும் நமது நாடுகளில் திருந்தப் போவதில்லை. காரணம் இதனால் பாதிக்கப்படுவது மிகச் சாதாரண மக்களன்றிச் சினிமா நடிகையோ; அரசியல்வாதியோ, பணம்படைத்தோரோ அல்ல.
அவர்கள் என்னதான் கேவலமாக நடத்தினாலும் நாம் வருவோம்,எங்களால் பணம் காய்க்கும் எனும் தைரியம் அவர்களுக்கு அபரிதமாக இருப்பதால், அவர்கள் இன்னும் மோசமாக நடப்பதற்கே வாய்ப்புள்ளது.
நாம் தான் திருந்த வேண்டும். பிரபல கோயில்களில் நடத்தப்பட்ட விதம் கண்டு, இப்போ நான் தினமும்
வேண்டுவது.
"கோயிலைத் தேடி நான் போகாமல் குமரா? உனை நான் கும்பிட வேண்டும்."
Hai, Till the time, the so called Govt/ IAS Officers do the needful, we can plan to visit the temple on weekdays/during Aadi month. Visiting the sanctum thro' e Sudarshan would also be a better option.
ஹாய், ஆமாங்க நானும் கூட இதெஇயே தான் நினைப்பதுண்டு. ஆனாலும் அங்க இருக்குற சாமியால கூட இத எப்படி கண்ட்ரோல் பண்ணறதுன்னு புரியலை போலிருக்கு.
மக்களும் கூட கொஞ்சம் அனுசரிச்சுகிட்டு போனாத்தான் என்ன னு தெரியலை? எல்லாரும் அந்த நுழைவு வாயில் கிட்ட வந்ததும் ஏன் தான் அப்படி தள்ளிகிட்டு முட்டி மோதி அப்பாடா... நிஜமாவே புரியலை. எப்ப தான் நாம அந்த ஸ்ரீனிய நிம்மதியா தரிசனம் பண்ணப் போறோமோ? ம்ம்ம்
வருத்தமான விஷயம்தான் சகோ... இத்தனை விஞ்ஞானத்தில் வளர்ந்த நாம் இதற்கு ஏதாவது வழி செய்ய முடியாதா.... புரியவில்லை.
நிம்மதியாக தரிசனம் செய்ய என்ன வழி...
This inhuman treatment of devotees has been going on for decades. At least, years back, we could go right into the inner chamber and have darshan of the Lord even for a fraction of a minute, and that experience would make us forget all the ordeals. These days, the devotees are turned around far away from the Lord, and only, frustration remains. People used to say that we could have much better darshan right in Mylapore Perumal temple. "Swami varam koduthalum, Poojaris kudukka mattargal"! We should refer this rotten service by the TTD employees to a Consumers' Forum, if possible.
என்ன டெக்னாலஜி வளர்ந்ய்ஹும் நாளுக்கு நாள் பின்னோக்கியே ந்கர்கிறார்களே. ஆதங்கமாகத்தான் இருக்கிறது.
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
நான் கடந்த பத்து வருடங்களாக வருடம் மூன்று முறையாவது திருப்பதி சென்று வருகிறேன். இந்த முறை நான் போனது சனி கிழமை.எல்லா கிழமைகளிலும் ஸ்ரீநிவாசனை தரிசனம் செய்து இருக்கிறேன். அனைத்து வகையான தரிசனமும் செய்தாச்சு.எந்த தரிசனத்திற்கு சென்றாலும் இந்த தள்ளு முள்ளு தான்.காலை 2 மணி அங்கபிரதட்சணம் செய்ய போகும் போதே கூட்டம் தான். நான் கேட்பது இந்த கூட்டத்தினை டெக்னாலஜி துணை கொண்டு இவ்விதம் கஷ்டப்படுத்தாமல் ஒரு ஒழுங்காக செய்ய முடியாதா என்பதே. குழந்தைகள்,கண் தெரியாதவர்கள், சரியாக நடக்க இயலாதவர்கள், முதியோர்கள் என்று அனைவரும் உள்ளே செல்லும் போது ஒரேடியாய் உள்ளே விட்டு பெரும் அவஸ்தை உண்டாக்குகிறார்களே. இதற்கு தீர்வே கிடையாதா?
ஜுன் 30/2011 வியாழன் கூட்டமே இல்லேங்க எல்லாம் அவன் கருணை.
Post a Comment