ஒல்லியாவே இருக்கிறேன் கொஞ்சமா குண்டாக என்ன செய்றது என்ற ரிஷியிடம் என் அம்மா தினம் காலையில் பழைய சாதம் அல்லது தயிர் சாதம் சாப்பிடு உடம்பு போடும் என்று சொல்லவும் ரிஷி 10 நாட்களாக காலையில் சாதம் சாப்பிடுகிறான்.என் தம்பி மகன் விஷால் ரிஷியிடம் அச்சச்சோ ஏன் நாய் புவ்வா(சாதம்) சாப்பிடுறீங்க? என்று கேட்கவும் ரிஷி முகத்தினை பார்க்கணுமே.விஷாலுக்கு தயிர் அலர்ஜி.
புதியதாய் ஹைதையில் இருந்து என் வீட்டின் பக்கத்தில் குடிவந்திருக்கும் ஃப்ரெண்ட் ஒருவரின் சகோதரிக்கு ஒரு வாரமாய் தமிழ் ட்யூஷன் நான் தான். அப்படியே என் சுந்தர தெலுங்கையும் டிங்கரிங் செய்து கொண்டு இருக்கிறேன்.
முன்பெல்லாம் தியேட்டர்,ட்ரையினில் மூட்டை பூச்சிகள் அதிகம் இருக்கும். இப்ப இல்லையே எங்கே போச்சு என்று நினைப்பேன். அமெரிக்கவில் மூட்டை பூச்சி அதிகமாம். எல்லா மூட்டை பூச்சிக்கும் யாருப்பா விசா கொடுத்தது?இறப்பதற்கு முன் ஒசாமா செய்த சதியா இருக்குமோ.
படித்த ஜோக்:
சில வருடங்கள் முன்பு ஒரு வடை 50 காசு.ஒரு ஃபோன் கால் ஐந்து ரூபாய்.
இப்போது ஒரு வடை ஐந்து ரூபாய்.ஒரு ஃபோன் கால் 50 காசு.
டெக்னாலஜி ரொம்ப வளர்ந்து என்ன? வடை போச்சே???

2009-ல் நான் மலேஷியா போன போது 13-ஆம் வாய்பாடு தெரியாமல் ஷாப்பிங் செய்ய மிக கஷ்டப்பட்டேன்.இனி தெரிந்து நோ யூஸ்.இப்போ போனா 14-ஆம் வாய்ப்பாடு தான் தெரியணுமாம்.ஏன்னா,ஒரு ரிங்கிட் இப்ப 14 ரூபாயாம்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்..
திருவள்ளுவர் சொல்லி சென்றது. இதன் படி நடக்கலாம் என்று பார்த்தால் இப்பெல்லாம் இன்னா செய்பவர்களுக்கு நாணமே வராது போல.பிறகு அவருக்கு நன்னயம் செய்து என்ன பயன்? விடல் என்றால் பயன் இருக்காது,ஆனாலும் நல்லது செய் என்கிறார் போல.
படித்த ஜோக்:
சில வருடங்கள் முன்பு ஒரு வடை 50 காசு.ஒரு ஃபோன் கால் ஐந்து ரூபாய்.
இப்போது ஒரு வடை ஐந்து ரூபாய்.ஒரு ஃபோன் கால் 50 காசு.
டெக்னாலஜி ரொம்ப வளர்ந்து என்ன? வடை போச்சே???
7 comments:
எனக்குப் பத்தாம் வாய்பாடுக்கு மேலே தெரியாது.
வடை போச்சே ஜோக் சூப்பர்.
தமிழுக்கும் சோதனை, தெலுங்குக்கும் சோதனை
டெக்னாலஜி வளர்ந்ததில் வடை போச்சா.... இது நல்லா இருக்கு....
நல்ல அலசல்... தொடரட்டும் வெரைட்டி.....
வெரைட்டி ஆனி கலக்கலா இருக்குங்க.
ஆறு வயதான எங்கள் மகள் ரோஷ்ணியும் இது வரை தயிர் சாப்பிட்டதில்லை. நிறைய பேர் இப்படி தான் இருப்பார்கள் போலிருக்கு!
வாய்பாடு படிக்கலாம் என்றால் கடையில் வாய்பாடு புத்ததகம் இல்லை என்றார்கள்.
வெரைட்டி ஆனி நல்லா இருக்கிறது.
ஹா..ஹா..வடை ஜோக் சூப்பர்.
//அமெரிக்கவில் மூட்டை பூச்சி அதிகமாம். // இங்க குவைத்லயும் மூட்டைப்பூச்சி அதிகம். இந்தியா ஒளிர்கிறதோ?
Very interesting blog. by Venkat.
visit www.hellovenki.blogspot.com and comment please
அப்ப அமெரிக்காவில் இருந்தால் 41 இல் இருந்து 50 வரை வாய்ப்பாடு தெரிந்திருக்க வேண்டும் போல. தினம் தினம் அமெரிக்க டாலரின் மதிப்பு மாறிக்கொண்டே இருக்கே.
Post a Comment