Friday, June 03, 2011

திரும்பவும் ஒண்ணாப்பு

ஏற்கனவே 3 முறை ஒண்ணாப்பு படிச்சாச்சு.ஒன்று எனக்காக நானே படிச்சது.திரும்ப படிச்சது என் இரண்டு பசங்களுக்காக.இப்ப நான்காவது முறையாக ஒண்ணாப்பு படிக்க போவது என் தம்பி மகன் விஷாலுடன்.போன வாரம் திடீரென்று என் தம்பிக்கு பெங்களூர் ட்ரான்ஸ்ஃபர்.இங்கே விஷாலுக்கு ஏப்ரலிலேயே ஸ்கூல் அட்மிஷன் எல்லாம் முடித்து ஜூன் 3-ல் ஸ்கூல் ஓப்பனிங்கிற்காக காத்து இருக்கையில் பெங்களூர் ட்ரான்ஸ்ஃபர்.அதனால், விஷால் இனிமேல் இங்கே என் வீட்டில்.ஆகவே இந்த வருடம் படிப்பு எனக்கு ஜாஸ்தி இருக்கும். அதிக பதிவுகளை எழுத முடியாது என்றே நினைக்கிறேன்.(அப்பாடி நிம்மதி என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது)

போன ஜூனில் தான் நான் மிக சந்தோஷமாய் இருந்தேன்.அப்பாடி என் சின்ன மகனும் ஸ்கூல் முடித்து காலேஜ் போகிறான் என்று.யாரோ கண்ணு போட்டுடாங்க.இன்னையிலிருந்து ஸ்கூல் திரும்ப ஆரம்பம்.விஷால் சேர்ந்து இருக்கும் ஸ்கூலில் நோ யூனிஃபார்ம்,நோ ஷூ, நோ டை எனவே நிம்மதி என்று நினைத்தேன்.ஆனால்,காலையில் செம பல்பு, கலர் ட்ரெஸ் பெரிய டெரர் போல அந்த ட்ரெஸ் வேண்டாம் இந்த ட்ரெஸ் வேண்டாம் என்று காலையில் சார் செம ட்ரில்.கடைசியில் அவருக்கு பிடித்த ஒரு ட்ரஸ்ஸில் ஸ்கூல் போனார்.

ஒண்ணாப்பில் இப்பவும் அ ஃபார் அம்மா தானா? நான் அத்தைன்னு சொல்லி தரப்போகிறேன்.நான் வளர்த்த என் இரண்டு பசங்களை பார்த்த பிறகும் என்னை நம்பி தன் மகனை என்னிடம் விட்டு போகும் என் தம்பியின் தைரியம் யாருக்கு வரும்.


8 comments:

ஷர்புதீன் said...

//என் இரண்டு பசங்களை பார்த்த பிறகும் என்னை நம்பி தன் மகனை என்னிடம் விட்டு போகும் என் தம்பியின் தைரியம் யாருக்கு வரும்.//

வாய்விட்டு சிரித்தேன்

இராஜராஜேஸ்வரி said...

விஷால் இனிமேல் இங்கே என் வீட்டில்.ஆகவே இந்த வருடம் படிப்பு எனக்கு ஜாஸ்தி இருக்கும். //
நிறைய பெரிய படிப்பு படிக்க வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

//என்னை நம்பி தன் மகனை என்னிடம் விட்டு போகும் என் தம்பியின் தைரியம் யாருக்கு வரும்.//

:))))) Nice.

A.R.ராஜகோபாலன் said...

ஒண்ணாப்பில் இப்பவும் அ ஃபார் அம்மா தானா? நான் அத்தைன்னு சொல்லி தரப்போகிறேன்

உங்களைப் பொருத்தவரை அத்தையும் அம்மாவும் ஒண்ணுதானே மேடம். உங்களிடம் விட்டுப்போன உங்கள் தம்பி இருக்கட்டும் , அந்த செல்லம் இருக்கிறதே உங்களிடம் அதை சொல்லுங்கள்
சுவையான பதிவு

vanathy said...

பெரிய படிப்பு தான் படிக்க போறாங்க.

குறையொன்றுமில்லை. said...

ஒண்ணாப்பில் இப்பவும் அ ஃபார் அம்மா தானா? நான் அத்தைன்னு சொல்லி தரப்போகிறேன்.நான் வளர்த்த என் இரண்டு பசங்களை பார்த்த பிறகும் என்னை நம்பி தன் மகனை என்னிடம் விட்டு போகும் என் தம்பியின் தைரியம் யாருக்கு வரும்.


ஹா, ஹா.

ADHI VENKAT said...

திரும்பவும் ஒண்ணாப்பு விஷாலுடன் சேர்ந்து சிறப்பாக படிக்க வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

உங்க பிள்ளைகளை வளர்த்ததற்கும், இவருக்கும் நிச்சயம் வித்தியாசம் நிறையவே இருக்கும். இந்தத் தலைமுறை அப்படி!! (ஒருவேளை அதுனாலத்தான் தம்பி நைஸா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போயிட்டாரோ என்னவோ, விசாரியுங்க!! ) ;-)))))

யூனிஃபார்மே பல வகைகளில் சிறந்தது. இந்த ‘கலர் ட்ரஸ்’ பாலிஸி நமக்குத்தான் (பெற்றோருக்கு) தொல்லை!!

ஹேப்பி ஸ்கூலிங்!!