Tuesday, March 29, 2011

இந்த “க” படும் பாடு

நம் தமிழில் சில சொற்களை பேசும் போது நம்மை அறியாமல் உபயோகப்படுத்தும் எழுத்துகளில் இந்த “க”விற்கு முக்கிய பங்கு உண்டு.

சம்பளம்,கிம்பளம்- சம்பளம் சரி, கிம்பளம்-லஞ்சம் என்றாகிறது. ஆனால் எதற்கு கி? சிம்பளம் ஆகி இருக்கலாமில்ல?

இங்க டப்பா,கிப்பா ஒன்றையும் காணோம் என்போம் எதாவது தேடும் போது.

பாத்து போ பஸ்ஸில,கிஸ்ஸில அடிப்பட்டுட போற? என்போம்.பஸ்ஸில சரி, கிஸ்ஸில அடி எப்படி படும்?

குழந்தை நோட்டு,கீட்டை கிழிச்சிட போகுது.நோட்டு சரி.அது என்ன கீட்டு.

பாத்துப்போ பள்ளம்,கிள்ளம்,மேடு,கீடு இருக்கப்போகுது.வாட் கிள்ளம்,கீடு.

பாத்து டேபிளை நகர்த்து.டீவியை,கீவியை உடைச்சுட போற. பாருங்க மக்களே டிவி என்ற ஆங்கில வார்த்தைக்கே கீ போடுறோம் நாம. இன்னைக்கு ஃபோன்,கீன் வந்துச்சா இல்லையா?


எக்ஸாமுக்கு போறியா பேனா,கீனா,ரப்பர்,கிப்பர் இருக்கா செக் செய்தியா?

இப்படியே யோசித்து இதை மாதிரியே பின்னூட்டம்,கின்னூட்டம் போட்டுட்டு போங்க..



19 comments:

நசரேயன் said...

யோசிச்சி கீசிச்சி போடுறேன்

ராமலக்ஷ்மி said...

ரொம்ப நல்லா கில்லா சொல்லியிருக்கீங்க:)!

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா கிறுக்கி இருக்கீங்க....
கமெண்ட்ஸ் கிமண்ட்ஸ் போட்டுட்டேன் ஹே ஹே ஹே ஹே ஹே...

பாலராஜன்கீதா said...

நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் என் பெயரை நீங்கள் எழுதியிருப்பதைப் போல திரித்துக் கூற இயலாது என்று நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்.
:-)

Chitra said...

அப்படியே ஒரு பதிவை கிதைவை தேத்தியாச்சு.... ஹி,ஹி,ஹி,ஹி...

Nagasubramanian said...

நல்ல வேலை சிங்காரவேலன் கமல் போல "க கா கி கீ .." னு பாட்டு எல்லாம் போடாம விட்டீங்களே.. :)

சுசி said...

என்ன அமுதாக்கா.. ரூமை கீமை போட்டு யோசிச்சிங்களா??

:))

R. Gopi said...

:-)

குறையொன்றுமில்லை. said...

நானும் பின்னூட்டம் கின்னூட்டமெல்லாம் போட்டுட்டேனே.

வல்லிசிம்ஹன் said...

கமெண்டு கிமெண்டு போட்டாச்சு. அப்புறம் இதே மாதிரி பதிவு கிதிவு எழுதி
எங்களை சிரிச்சி கிரிச்சு வச்சிருங்க:)))

சாந்தி மாரியப்பன் said...

காலைல இட்லி கிட்லி சாப்ட்ட கையோட யோசிச்சி கீசிச்சி எழுதினதா :-)))

செங்கோவி said...

அடடா..நான் சொல்ல நினைச்சதை ஏற்கனவே எல்லரும் சொல்லிட்டாங்களே..யோசிச்சுக் கீசிச்சும் ஒன்னும் தேறலியே..ஒரு எழுத்து ‘க’-அதை வச்சே ஒரு பதிவா..நோட் பண்றா செங்கோவி!

Pranavam Ravikumar said...

அருமை!

Unknown said...

க -வை வச்சு நம்ம வாழ்க்கையில நடைமுறையில பேசுறத அருமையா எழுதி இருக்கீங்க.

மனோ சாமிநாதன் said...

யதார்த்தமான, உங்களின் ஆராய்ச்சி புன்னகையை வரவழைக்கிறது! இன்னும் இதுபோல பல ஆராய்ச்சிகளைச் செய்யுங்கள்!! அதற்காக ரொமபும் ஆராய்ச்சி, கீராய்ச்சி என்று செய்து தலை சுற்றி விட‌ப்போகிறது!

அமுதா கிருஷ்ணா said...

வருகை தந்து பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

உஷா அன்பரசு said...

இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவு பகிர்ந்துள்ளேன்
வருக!
http://blogintamil.blogspot.in/

உஷா அன்பரசு said...

இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவு பகிர்ந்துள்ளேன்
வருக!
http://blogintamil.blogspot.in/

Unknown said...

ஆமாம் இல்ல. ‘க’ படுத்தும் பாடு. வித்தியாசமான கோணத்தில் யோசிச்சிருக்கீங்க.

வாழ்த்துக்கள்