Monday, March 14, 2011

என்ன பாவம் செய்தாள்?

கலா போன வருடம் பார்த்த போதும் இளைத்து தான் காணப்பட்டாள்.அவளின் பெண் குழந்தை அவளிடம் அமுதா என்னோட ஃப்ரெண்ட், உனக்கு ஃப்ரெண்ட் இல்லை என்ற போது ஆமாம், ஆமாம் நான் உன்னோட ஃப்ரெண்ட் தான் நந்தினி என்று அவசரமாய் தலையாட்டி வைத்தேன்.இல்லைனா எனக்கு அடி விழும் என்ற பயம் தான்.

13 வயது ஆகும் நந்தினி வயதிற்கு மீறிய வளர்ச்சியுடன் இருந்தாள்.என்னை நன்கு தெரிகிறது. நீ அமுதா தானே என்று கேட்கும் போது சந்தோஷமாய் இருந்தது.நந்தினி தூங்கியதும் கலா சொன்னது கேட்டு மிக கவலையாய் இருந்தது.சொந்தக்கார லேடி டாக்டர் நந்தினியின் யூட்ரஸை இன்னும் ஒரிரு வருடங்களில் ஆபரேஷன் செய்து எடுத்து விடலாம் என்று சொல்லி இருக்கிறார்.

இதை என்னிடம் சொல்லிட்டு அழுத கலாவினை என்னால் சமாதானம் செய்ய இயலவில்லை. கடவுள் மேல் கோபமாய் வந்தது. கலா பார்ட்டைம் வேலையாக ரேடியோ ஸ்டேஷனில் வேலை செய்கிறார்.நந்தினியினை ஹாலில் டி.வி போட்டுட்டு ஹாலோடு அட்டாச் ஆக இருக்கும் டாய்லெட்டை ஓபன் செய்துட்டு, ரூம், கிச்சனை பூட்டி விட்டு, ஹாலின் வெளி கதவினை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விடுவாள்.4 மணிநேரம் கழித்து வரும் போது நந்தினி டி.வி. பார்த்து விட்டு ஏனோ தானோ என்று படுத்து தூங்கி இருப்பாள். டி.வி ஓடிக் கொண்டே இருக்கும். இப்படி தான் கடந்த 5 வருடங்களாக நடக்கிறது. சின்ன குழந்தையாக இருக்கும் வரை வேறு பிரச்சனைகள் இல்லை.இனிமேல் வயதிற்கு வந்து விட்டால் வரகூடிய பிரச்சனைகளை சமாளிப்பது கஷ்டம் என்று அந்த டாக்டர் இப்படி கூறி இருக்கிறார். ஏற்கனவே இரண்டு கண்களிலும் ஆபரேஷன் செய்து அவளை ஆஸ்பத்திரியில் வைத்து சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டதையும் சொன்னாள். கலாவிற்கு ஏனோ இப்ப டாக்டர் கருத்துடன் ஒத்துப் போக முடியவில்லை.

நந்தினிக்கு வயதிற்கு வருவதை பற்றியும், எப்படி பேட் யூஸ் செய்யணும் என்றும் அந்த வயதுகளில் பெண் குழந்தைகள் வைத்திருக்கும் அம்மாக்கள் போலவே தன் குழந்தைக்கும் தினம் தினம் சொல்லி சொல்லி புரிய வைத்து விட்டாள்.நான் போய் வந்த அடுத்த மாதத்திலேயே அந்த குழந்தை பெரிய மனுஷியும் ஆகிவிட்டாள்.முதல் 3 மாதங்கள் பாடாய் படுத்தி விட்டு இப்பொழுது பழகி விட்டது. ஆனால், மிகவும் கஷ்டப்படுகிறது.ரொம்ப முரடாகி வருகிறது.

இந்த வாரம் கலாவினை ஃபோனில் கூப்பிட்ட போது மிகவும் முரடாக இருக்கும் அவளை அடக்க எனக்கு சக்தியே இல்லை அமுதா என்ற போது என்ன பாவம் செய்தாள் கலா என்று எனக்கு இயலாமையாக இருந்தது.

இப்ப முன்னேற்றம் என்ன என்று கேட்ட போது இப்ப தமிழ் எழுத்து கூட்டி படிக்க தெரிகிறது. ஏற்கனவே, பணம் பற்றி கூறி கொஞ்சம் புரிகிறது அந்த குழந்தைக்கு, 100 ரூபாய் வரை தெரிகிறது. அதற்கு மேல் அவளிடம் கொடுப்பதில்லை. சில சமயங்களில் கிழித்து விடுவாள். பக்கத்து கடைகளுக்கு பேப்பரில் சாமான் பெயர்களை எழுதி அவளை அனுப்பி வாங்கி வந்ததை இப்ப வயதிற்கு வந்ததும் நிறுத்திக் கொண்டேன் என்றாள். சில சமயம் பிடித்தவர்களை ஆணோ, பெண்ணோ அணைத்து கட்டிக் கொள்கிறாள். எனவே, நான் இல்லாமல் அவளை வீட்டின் வாசப்படி தாண்ட விடுவதில்லை என்றாள்.

என் மாமா பெண் திருமணம் மதுரையில் நடந்த போது அவளை வரச்சொன்னேன் நந்தினியுடன். நந்தினிக்கு கல்யாண சாப்பாடு, இலை போட்டு பந்தியில் உட்கார்ந்து சாப்பிட பிடிக்கும் என்ற ஒரு காரணத்திற்க்காகவே. சாப்பிடும் போது நந்தினி முகத்தில் அப்படி ஒரு வெட்கம். பட்டுப் பாவாடை கட்டி,அதனை ஒரு கையால் முழங்கால் வரை தூக்கிக் கொண்டு வந்தாள் அந்த செல்லக்குழந்தை. மேடம் பாவாடை பாழாகாமல் பத்திரமாய் இருக்காங்களாம்.

இவளுக்காகவே இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று கலா மறுத்து விட்டாள்.எத்தனையோ பேர் அட்வைஸ் செய்தும் மிக பிடிவாதமாய் மறுத்து விட்டாள்.

அவளின் கணவர் அவளுக்கு சொந்தம் கிடையாது.கணவர் வீட்டில் யாரும் இப்படி குறையுடன் இல்லை. இவளின் சொந்தத்திலும் இப்படி யாரும் இல்லை. திருமணம் முடிந்து 5 வருடங்கள் கழித்து நந்தினி பிறந்தாள்.அந்த பெண் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கும் வரை பிரச்சனை எதுவும் தெரியவில்லை.அதன் பிறகு தான் அந்த குழந்தையின் நடவடிக்கை வைத்து MR (mental retardation) என டாக்டர் கூறினார்.

கலாவை, நந்தினியினை எப்ப மதுரை போனாலும் சந்தித்து வருவேன். வெளியூரில் யார் வீட்டிற்கும் அவளை அழைத்து போவதில்லை. மதுரையில் யார் வீட்டிற்கு போனாலும் இரவு அவர்கள் தங்குவதில்லை.நான் எப்ப மதுரை போனாலும் மூவரும் மீனாட்சி கோயிலுக்கு,இரவு சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு விசிட் செய்வது வழக்கமாய் வைத்து இருக்கிறோம்.
நான் தவறாமல் அவளை பார்க்கப்போவது கலாவிற்கு மிக மகிழ்ச்சி. இதை தவிர வேறு எந்த மகிழ்ச்சியும் என்னால் கலாவிற்கு தர முடியவில்லை.

18 comments:

pudugaithendral said...

மனம் கணத்தது :(

Asiya Omar said...

தொடர்ந்து முடிந்தளவு கலாவிற்கு ஆறுதலாக இருங்கள்.நம்மால் அது தான் செய்ய முடியும்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

அந்த தாய்க்கு என் வந்தனங்கள்..

இறைவன் அவர்களுக்கு தேவையான நம்பிக்கையும் சக்தியும், உங்களைப்போல நல்ல நட்புகளையும் ஆயுசுக்கும் தரணும்...

நல்ல பதிவுகள் இது போல நிறைய வரணும்..

( எங்க சொந்தத்தில் இதே போல் ஒரு குழந்தை .. ஆனால் அடுத்து மகன் பிறந்தார்.. அவன் அக்கா மேல் அதிக பாசமும் கவனிப்பும்.. பெற்றோருக்கு இப்ப இன்னும் அதிக திருப்தி.. நம் காலத்துக்கு பின் மகன் கவனிப்பார் என.. )

எண்ணங்கள் 13189034291840215795 said...

குழந்தைக்கு எம் பிராத்தனையும்..

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் பகிர்வு மனதினை கனக்கச் செய்தது சகோ! நீங்கள் காட்டும் ஆதரவு நல்ல விஷயம். தொடருங்கள்.

Ram said...

அமுதா இந்த பதிவிற்கு பிறகு உங்கள் மேல் எனக்கு பெருத்த மரியாதை உருவாகி இருக்கிறது..

அந்த குழந்தை மீண்டு நன்கு தேரிட விழைவோம்.. கண்டிப்பாக நடக்கும்.. நீங்கள் அங்கு செல்லும்போது வெரும் கோயிலுக்கு மட்டும் கூட்டி செல்லாமல் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு அழைத்துசெல்வது சிறப்பாக இருக்ககூடும்..

சுசி said...

நீங்க அவங்களுக்கு ஒரு வரம் அக்கா..

அந்த அம்மாவுக்கு என் வணக்கங்கள்.

R.Gopi said...

படித்ததும் மனசு ரொம்பவே கனத்து போனது...

அந்த குழந்தைக்கு என் பிரார்த்தனை நிச்சயம் உண்டு.

தொடர்ந்து இது போல் பல நல்ல பதிவுகளை பதிய வேண்டுகிறேன்...

வாழ்த்துக்கள்அமுதா....

குறையொன்றுமில்லை. said...

அமுதா, என்பேரனும் ஒரு டௌன் சிண்ட்ரோம் பேபியாகவே பிறந்தான். எங்களுக்கு ம்தலில் வித்யாசமே தெரியலை.வளர, வளரத்தான் தெரிய வந்தது. அவனாவது பிள்ளைக்குழந்தைஇப்ப 15 வயசாவுது.பெண்குழந்தைனு பாக்கும்போது அந்த பெற்றோர்களுக்கு மிகவும் சொதனைதான்.மற்றவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு கூட்டிப்போயி எல்லாருடனும் பழகும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கனும்மா.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி புதுகைத் தென்றல்.

ஆமாம் ஆசியா ஓமர்..

நன்றி பயணமும் எண்ணங்களும்..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி வெங்கட் நாகராஜ்..

நன்றி தம்பி கூர்மதியன்.ஆமாம் பொது இடங்களுக்கு அழைத்து செல்வது நல்லது.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி சுசி..

நன்றி லக்‌ஷ்மி மேடம். உங்க பெண்ணின் அவஸ்தை கஷ்டமாய் இருக்கிறது.

நன்றி கோபி..

ADHI VENKAT said...

மனம் கனத்தது. நீங்கள் அவர்கள் மேல் காட்டும் ஆதரவு நல்ல விஷயம்.
அந்த அன்னைக்கு என் வந்தனம்.

Free Traffic said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

ஹுஸைனம்மா said...

என் உறவிலும் ஒருவருக்கு இரு குழந்தைகள் குறைபாட்டுடன் உண்டு. அவர்களின் நிலைமைக்கு நந்தினி எவ்வளவோ பராவயில்லை. அவர்கள் இருவரும் படுத்துத்தான் இருக்க முடியும். பேச முடியாது. நடக்க முடியாது. கொடுமை.

Pranavam Ravikumar said...

Thanks for such a lovely post. I learned a lot from here today.

jothi said...

என்ன‌ சொல்வ‌தென்றே தெரிய‌வில்லை,..யாருக்காக‌ வேத‌னைப்ப‌டுவ‌து அந்த‌ தாயிற்கா இல்லை குழ‌ந்தைக்கா?? இறைவ‌ன் ஒரு சில‌ருக்கு ம‌ட்டுமெ ரொம்ப‌ கொடுமையான‌வ‌னாக‌ இருந்துவிட்டு போகிறான்,.

அருமையான‌ ப‌டைப்பு

Unknown said...

மனம் கனத்துவிட்டது........
சகோ

கடவுள் ஏன் இப்படி கொடுமை இழைக்கிறான் அந்த பெண் பிள்ளைக்கு.
அந்தக்குழந்தையை பெற்ற தாயின் அவஸ்தையை நினைத்து கலக்கமாக இருக்கிறது சகோ