Friday, March 11, 2011

பெயர்

இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்தவர் சுசி. அவருக்கு என்னுடைய நன்றிகள்.

என் அப்பா தான் எனக்கு பெயர் வைத்தார். ஒரு ரைமிங்காக இருக்கும் என்று என் தங்கைக்கு வைத்த பெயர் குமுதா.நிறைய உறவுகள் என்னை குமுதா என்றும் அவளை அமுதா என்றும் மாற்றி மாற்றி சொல்வார்கள். இல்லை என்று மறுக்காமல் உம் போட்டு வருகிறோம். அமுதா என்பது தமிழ் பெயர். நிறைய பழைய தமிழ் படங்களில் இந்த பெயர் வருகிறது. ஆந்திராக்காரங்க என் பெயரை அமிர்தாவா என்பார்கள். அன்பே அமுதா நீ பாலமுதா, சுவை தேனமுதா என்று ஒரு பாடல் சிலோன் ரேடியாவில் அடிக்கடி ஒலிப்பரப்பாகும். டி.எம் செளந்தர்ராஜன் பாடியது. எனக்கு ஏனோ அந்த பாடலை கேட்டதில் இருந்து என் பெயர் பிடிக்கவில்லை அப்போது.என் அப்பா அமுதா தேவி என்று என் பெயரை மாற்றிக் கொள்ள சொன்னார். அவரின் பாட்டியின் பெயர் ஸ்ரீதேவி. அப்பவே எப்படி மாடர்ன் பெயர் என்று பெருமை அடித்துக் கொள்வார்.என் அத்தையின் பெயர் தேவி என்பதால் ரிப்பீட்டுக்கு நான் அந்த பெயரை இணைத்துக் கொள்ள ஒத்துக்கொள்ளவே இல்லை.

என்னுடைய சின்ன வயதில் ரொம்ம்ப சேட்டை செய்வேன்.  அடங்கா பிடாரி, குறத்தி, டிங்கு ராணி,வாயாடி,பத்ரகாளி,ராட்சசி எனவும் கூப்பிடப்பட்டேன். ஆனாலும், அப்படி கூப்பிட்டவர்களை போங்கடா என்று சொல்லிட்டு நான் செய்ற சேட்டைகளை தான் செய்வேன்.அப்புறம் காலப்போக்கில் எல்லோருக்கும் அம்முவானேன்.  என்னுடைய மகன்கள் கூட பேச ஆரம்பிக்கும் போது அம்மு என்றே அழைத்தனர். அப்புறம் தான் அம்மா, மம்மி என்று மாறினர். என் உடன்பிறப்புகள் யாரும் அக்கா என்று என்னை ஒரு நாளும் அழைத்ததே இல்லை.

திருநெல்வேலியில் என்னுடன் படித்த பெண்கள் வடிவு, கோமதி, ஆவுடையம்மாள், காந்திமதி, மீனாட்சி, சரஸ்வதி, லெக்‌ஷ்மி என்று அம்மன்களாக தான் இருப்பர். எனவே என்னுடைய பெயர் அங்கே மாடர்னாக இருந்தது. பையன்கள் என்றால் சுப்ரமணி, மணிகண்டன், நாதன்,திருநாவுக்கரசு,குமார் என்று சைவப்பெயர்கள் தான் அதிகம் இருக்கும். என் தம்பிகளின் பெயர் மதுசூதனன், பிரபு என்று மாடர்னாக இருக்கும்.

மேலும் திருநெல்வேலியில் பாட்டி, தாத்தா பெயர் தான் வழி வழியாக வைப்பார்கள். திண்டுக்கல்லில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தான் இன்னொரு R.அமுதாவுடன் மோதிக் கொண்டேன். இருவரும் ஒரே செக்‌ஷன். இருவருக்கும் ஆர் தான் இன்ஷியல், எனவே,அந்த வருடம் மட்டும் அவள் அமுதா ரத்தினமாகவும், நான் அமுதா ராமசாமியாகவும் அப்பாவின் பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்டோம்.

அதன் பின் என் பெயரோடு மோதிக் கொண்டது இந்த பதிவுலகத்தில் தான். அமுதா என்று இன்னொரு பதிவர் இருந்ததால் நான் முதலில் அப்பாவி அமுதா என்று தான் பெயர் வைத்தேன். யோசித்ததில் எப்பவும் அப்பாவியாக நான் இருப்பது இல்லை சில சமயம் அடிப்பாவி! என்னும் படியாகவும் இருப்பதால் அந்த அப்பாவியினை கடாசி விட்டு கணவரின் பெயரில் (கிருஷ்ணமூர்த்தி-அவர் எட்டாவதாய் பிறந்ததால் அவருக்கு இந்த பெயர்) கிருஷ்ணாவினை சேர்த்து அமுதா கிருஷ்ணாவானேன். அமுதா.K.மூர்த்தி (அமுதாக்கே மூர்த்தி!) என்றும் சில இடங்களில் சொல்லி இருக்கிறேன்.

அம்மு என்பது அமுதா என்பதின் சுருக்கம் என்றே நினைத்து வந்தேன். ஒரு முறை என் தம்பிக்கு பெண் பார்க்க போன போது என் அம்மா என்னை அம்மு என்று எதற்கோ எதார்த்தாமாய் அழைக்க அந்த பெண்ணின் அம்மா பதறி போனார். என்னுடைய பெண்ணையும் அம்மு என்று தான் அழைப்போம்.( அவரின் பெயர் அமுதா இல்லை) நீங்கள் எல்லோரும் இவரை(என்னை சுட்டிக்காட்டி)அம்மு என்று தான் கூப்பிடுவீர்களா என்று தேவை இல்லாமல் ஓவராய் பதறினார். அதாவது அவர் மகளை மட்டும் தான் இனி அம்மு என்று நாங்கள் அழைக்க வேண்டும் என்று நேரடியாக சொல்லாமல் ஒரு உத்தரவு போட்டார்.
அதுவும் இல்லாமல் துபாயில் அப்போது நல்ல வேலையில் இருந்த என் தம்பியினை திருமணத்திற்கு பிறகு கட்டாயம் இந்தியா வர வேண்டும் என்றும் கூறினார். இத்தனைக்கும் அந்த பெண்ணின் சம்பளம் கம்மி தான். எங்களுக்கு அந்த பெண் ரொம்ம்ம்ப குண்டாக வேறு இருந்ததால் முதலிலேயே பிடிக்கவில்லை. இதில் இப்படி ஒரு தேவையில்லாத பிரச்சனை வேறு. அம்மா தாயே நீங்களே அம்மு,அம்முன்னு சொல்லிக்கோங்க என்று ஓடி வந்து விட்டோம். இந்த அம்மு பிரச்சனைக்காக ஓடி வரவில்லை மக்களே.அவர்கள் சொன்ன கண்டிஷன்கள்+குண்டு பிடிக்காமல் வந்தோம்.

 ஸ்கூல், காலேஜில் எப்பவும் அட்டெண்ட்டெண்சில் முதல் பெயர் என்னுடையது தான்.(படிப்பில்? என்ன கேட்டீங்க காதில் சரியாய் விழலைப்பா?)

AMUTHA என்று தான் எழுதுவேன் யாராவது AMUDHA என்று எழுதினால் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் மாதிரி தோணும்.

யாரை மாட்டிவிடலாம்??

பிரபு எம்

அன்புடன் அருணா

கீதா ஆச்சல்

மங்குனி அமைச்சர்


23 comments:

TamilTechToday said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பெயர்க்காரணம். அமுதாகே மூர்த்தி! - சுவையாக இருந்தது.

Ram said...

எத்தே தத்தி..

இப்ப நான் எப்படி உங்கள கூப்பிடறது.??? ஒரே குழப்பமா இருக்கே.!!

Chitra said...

காலப்போக்கில் எல்லோருக்கும் அம்முவானேன். என்னுடைய மகன்கள் கூட பேச ஆரம்பிக்கும் போது அம்மு என்றே அழைத்தனர்.


...Sweet name!

Asiya Omar said...

amudha - spelling mistake இல்லாமல் எழுதிட்டேன் அம்மு.டி.எம்.எஸ் பாடிய பாட்டு சூப்பர்.என்னைப் பார்த்து ஒரு சிலர்,ஆசையா? கோபமா?,ஆசையா கோபமா என்று பாடுவதுண்டு.ஆசியா உன் மேலே ஆசை தான் என்றும் என்னை என் தோழிகள் கிண்டல் செய்வதுண்டு.
நல்ல பகிர்வு.

Prabu M said...

ஸாரி அக்கா... நான் போன‌ ரெண்டு மூணு வார‌மாவே ப‌திவுல‌க‌ம் ப‌க்க‌ம் அதிக‌ம் வ‌ர‌ல‌.. அதான் க‌வ‌னிக்க‌ல‌....
ரொம்ப சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க அம்மு அக்கா!! :)) (ப‌திவுல‌க‌த் தம்பி/தங்கைக‌ள் எல்லாரும் இனிமே உங்க‌ளை இப்ப‌டி அழைக்க‌லாமா?!!) அட.. உங்க‌ த‌ம்பி பேரும் பிர‌புவா!! :) நல்லாயிருக்கே!
பெய‌ரை ஒட்டிய‌ ச‌ம்ப‌வ‌ங்கள், ஞாப‌க‌ங்க‌ள் எல்லாத்தையும் ரொம்ப‌ சுவையா சொல்லியிருக்கீங்க‌ அக்கா...
ஆனா க‌டைசியில் மாட்டி விட்டுட்டீங்க‌...!! :)) க‌ண்டிப்பா எழுதுறேன்கா.... :)

GEETHA ACHAL said...

//என் உடன்பிறப்புகள் யாரும் அக்கா என்று என்னை ஒரு நாளும் அழைத்ததே இல்லை. //என்னையும் தான்...ஆனா என்னுடைய பிரண்ட்ஸினை எல்லாம் அக்கா, அண்ணா என்று பிசாசுங்க வாய் நிறைய அழைக்குங்க..என்னத சொல்ல..

இப்படியா என்னை மாட்டிவிடுவது...போங்க...

அமுதா கிருஷ்ணா said...

நன்றி வெங்கட் நாகராஜ்..

தம்பி கூர்மதியன் ரொம்ப குழம்பிட்டீங்க போலிருக்கே. அக்கான்னே கூப்பிடுங்க..

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் chitra, அம்மு என்பது short and sweet..

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் ஆசியா நம் பெயரில் பாடல் என்றால் கிண்டல் ஜாஸ்தியாகிடும்..

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் பிரபு எழுத வேண்டும். எதிர்பார்க்கிறேன்.

அமுதா கிருஷ்ணா said...

ஹாய் கீதா கட்டாயம் உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.

ADHI VENKAT said...

நல்ல பெயர்க்காரணம். அம்மு நல்லாயிருக்கு!

Unknown said...

தமிழ்க்குடும்பங்களில் பெரும்பாலான பெண்குழந்தைகள் அம்மு தாங்க.

இராஜராஜேஸ்வரி said...

அமுதமான பெயர்.

சாந்தி மாரியப்பன் said...

சுவாரஸ்யமான பெயர்க்காரணம்..

ஹுஸைனம்மா said...

பெயர்ப் பதிவுகளில், பெயருக்கான காரணங்களைவிட, பெயரால் வரும் குழப்பங்கள்தான் சுவாரஸ்யமா இருக்குது. உங்களதும் அதேதான்.

அமுதாக்கே மூர்த்தி - நைஸ்!! :-))))

//இந்த அம்மு பிரச்சனைக்காக ஓடி வரவில்லை மக்களே//
நம்பிட்டோம்!! :-))))

சுசி said...

//எனவே என்னுடைய பெயர் அங்கே மாடர்னாக இருந்தது//

:)))))

அமுதா கிருஷ்ணா said...

நன்றி கோவை2தில்லி

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் அம்மு, அம்முலு, பாப்பா என்று தான் இருக்கிறது கலாநேசன்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி அமைதிச்சாரல்.

நிஜம்ம்மா ஹூசைனம்மா..

தாங்ஸ் சுசி..

R.Gopi said...

அமுதா...

பெயர் மருவி அம்முவானது... மிக சுவாரசியம்...

//சின்ன வயதில் ரொம்ம்ப சேட்டை செய்வேன். அடங்கா பிடாரி, குறத்தி, டிங்கு ராணி,வாயாடி,பத்ரகாளி,ராட்சசி எனவும் கூப்பிடப்பட்டேன்.//

சரியான ரெட்டை வால் ரெங்குடி தான் நீங்க....

அமுதா கிருஷ்ணா said...

ஆகா புதுப் பெயரா கோபி..