Monday, March 28, 2011

வெரைட்டி-பங்குனி-2011

நேற்று எலக்ட்ரிக் ட்ரையினில் மாம்பலம் போகும் போது ரொம்ப நாள் கழித்து சந்தித்த நண்பர் பேசிக் கொண்டு இருக்கும் போது என்னிடம் நீங்க என்ன கார் வைத்திருக்கீங்க என்று கேட்க நான் சொன்ன பதில் கடைசியில்.

எப்பவும் ஏப்ரல், மே மாதங்களில் சென்னையில் நாங்கள் இருக்கும் நாட்கள் குறைவு.குடும்பத்துடன் எங்காச்சும் 10 நாட்கள் எஸ்ஸாயிடுவோம்.ஆனால், இந்த முறை இங்கு தான் வேறு வழியே இல்லை. வீடு கட்ட ஆரம்பித்து இருக்கிறோம்.  சோ டப்பு நஹி ஃபார் ஊர் சுத்தல்.

போனவாரம் வடபழனி கமலா தியேட்டர் வழியாக நடந்து சென்ற போது தியேட்டர் வாசலில் வாங்க வாங்க லத்திகா ஃப்ரீ ஷோ படம் பார்க்க வாங்க என்று ஒரே அழைப்பு. கொஞ்சம் அசந்தால் தூக்கிட்டு போய் தியேட்டர் உள்ளே விட்டுவிடுவார்களோ என்று அரண்டு பறந்து அந்த இடத்தினை வேகமாய் க்ராஸ் செய்தேன்.இந்த வாரம் அந்த பக்கம் போகணும். இம்முறை பணமும் கொடுத்து படமும் ஃப்ரீயாய் இருக்குமோ என்னவோ. ரூட்டை மாற்றி போகணும்.என்ன கொடுமை ஸ்ரீநிவாசா?

வடிவேலுவிற்கு அழகிரி பெரிய ரசிகர் போலும்.திருவாரூர் முதல் பிரச்சாரத்தில் வடிவேலு பேச பேச அழகிரி சிரித்துக் கொண்டே இருந்தார். இப்பொழுது எல்லாம் ஒவ்வொரு கட்சிக்கும் வில்லன்,கதாநாயகன் மட்டுமின்றி நிஜ காமெடியனும் அவசியம் போலும்.

மே மாதம் 27-என் பசங்களின் பெரியப்ப மகன் டாக்டர்.சுசுருதன் திருமணம்.பெண்ணும் எம்.டி கைனாகலிஜிஸ்ட்.சென்னையில் திருமணம்.என் இரு பசங்களும் அண்ணா(மாப்பிள்ளை) எப்ப எப்ப ட்ரஸ் மாத்துவாரோ அப்போதெல்லாம் மாற்ற போகிறார்களாம்.முதல் நாள் வெயிஸ்ட் கோட், திருமணம் அன்று பட்டு வேஷ்டி,சட்டை என்று செலவு வைக்கிறார்கள். கேட்டால், நாங்கள் பெண்ணாய் பிறந்து இருந்தால் எத்தனை பவுன் செய்திருக்கணும் என்று பதில் கேள்வி கேட்கிறார்கள்.

5 வயதில் என் சின்ன பையன் ரிஷி பெரியவனாகி என்ன செய்ய போகிறாய் என்று கேட்டால் 6 ஆப்பு படிச்சுட்டு மினிஸ்டர் ஆவேன் என்பான். மினிஸ்டர் சரி அதற்கு 6 ஆப்பு போதும் என்று யார் சொல்லி கொடுத்தார்கள் என்பது இன்று வரை மர்மமாய் இருக்கு! வீட்டில் வாங்கும் ஜூனியர்விகடன், துக்ளக் புக் எடுத்து வைத்து நூ(மூ)ப்பனார், சசிக்கலா, ஜெயலலிதா, ஸ்டாலின் என்று கரெக்டா படம் பார்த்து பெயர் சொல்லுவான்.பயந்து போய் அந்த புத்தகங்கள் வாங்குவதை நிறுத்தி விட்டேன்.பேசாமல் அந்த புத்தகங்கள் வாங்கி இருந்தால் ஜி.கே வளர்ந்து அவனும் அரசியல்வாதியாகி இருப்பானோ.சே,தப்பு செய்துட்டேனே.

வீட்டுக்கார்! எப்பூடி? நண்பர் பதிலே சொல்லாமல் வேற சீட்டிற்கு மாறி போய் உட்கார்ந்து கொண்டார்.

22 comments:

மைதீன் said...

nice

சுசி said...

வீட்டுக்கார் செம அக்கா.

பெறாமகன் கல்யாணத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

Asiya Omar said...

பகிர்வு அருமை.

Nagasubramanian said...

பட் நீங்க லத்திகா படத்த மிஸ் பண்ணதுக்கு நான் ரொம்ப வருத்தப் படறேன்.
"பவர் ஸ்டார்" வாழ்க !!!

Chitra said...

இப்பொழுது எல்லாம் ஒவ்வொரு கட்சிக்கும் வில்லன்,கதாநாயகன் மட்டுமின்றி நிஜ காமெடியனும் அவசியம் போலும்.


..... rightly said! மெகா சீரியல் குடும்ப சித்திரமாக ஓடுதே!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//நாங்கள் பெண்ணாய் பிறந்து இருந்தால் எத்தனை பவுன் செய்திருக்கணும் என்று பதில் கேள்வி கேட்கிறார்கள்//
ஆஹா... ரெம்ப தெளிவாதான் இருக்காங்க பசங்க இப்போ..:)))

//வீட்டுக்கார்! எப்பூடி? நண்பர் பதிலே சொல்லாமல் வேற சீட்டிற்கு மாறி போய் உட்கார்ந்து கொண்டார்//
செம பதில்...ஹா ஹா...:)))

அமுதா கிருஷ்ணா said...

:))) நன்றி புதுகைத்தென்றல்.

நன்றி மைதீன்.

நன்றி சுசி..

அமுதா கிருஷ்ணா said...

தாங்ஸ் ஆசியா ஓமர்..

அமுதா கிருஷ்ணா said...

நாகசுப்ரமணியன் நீங்க வேணா தியேட்டர் பக்கமா போய்ட்டு வாங்களேன்..

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் சித்ரா.மெகாஆஆஆஆஅ சீரியல் தான்.

அமுதா கிருஷ்ணா said...

பசங்களிடம் பல்பு வாங்குவதே வழக்கமாயிடுச்சு அப்பாவி தங்கமணி.

குறையொன்றுமில்லை. said...

பதிவு சுவாரஸ்யம்.

ஷர்புதீன் said...

:)

நசரேயன் said...

//ஜி.கே வளர்ந்து அவனும் அரசியல்வாதியாகி இருப்பானோ.சே,தப்பு செய்துட்டேனே.//

இன்னும் அவகாசம் இருக்கு

வல்லிசிம்ஹன் said...

நான் மதிக்கிற ரெண்டு பேர் எங்க வீட்டுக்காரரும் வீட்டுக்காரும் தான். பாதுகாப்புதான்:)

அதென்னப்பா லத்திகா ஃப்ரீ ஷோ?

Vidhya Chandrasekaran said...

லத்திகா - சென்னை வடபழனி ஏரியாவுக்கு சுனாமி எச்சரிக்கை கொடுக்கச் சொல்லிடலாம்.

வீட்டுக்கார் :)))))))))))))))

ஆதி மனிதன் said...

//நீங்க என்ன கார் வைத்திருக்கீங்க என்று கேட்க நான் சொன்ன பதில் கடைசியில்.//

முதலில் புரியவில்லை. மீண்டும் மீண்டும் படித்தபிறகுதான் புரிந்தது. "வீட்டுக்கார்!" நல்லவேளை, காருக்கு கார்(ர்) என்று முடிகிறது. இல்லையென்றால் நீங்கள் வீட்டுக்காரன் என்று தான் சொல்லி இருப்பீர்கள். அப்புறம் உங்கள் நண்பர் வேறு சீட்டிற்கு இல்லை, வேறு கம்பார்ட்மென்ட்டுக்கே சென்றிருப்பார்.

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் நசரேயன் இன்னும் சான்ஸ் இருக்கு.

அமுதா கிருஷ்ணா said...

வித்யா சூப்பர் ஐடியா.

அமுதா கிருஷ்ணா said...

வல்லிசிம்ஹன் லத்திகா பற்றி தெரியாதா? ரொம்ப அப்பாவி நீங்க..அந்த பக்கம் போய்டாதீங்க ப்ளீஸ்

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் ஆதிமனிதன்..

ஹுஸைனம்மா said...

ஹை, நானும் அதே பிராண்ட் கார்தான் வச்சிருக்கேன்!! ;-))))