Thursday, August 12, 2010

கோத்தகிரி+ஊட்டி

கோத்தகிரியில் என் மகன் ரிஷி சுட்ட மலர்கள்..

இந்த மாதம் குற்றாலம் போகலாம் என்று 13 பேருக்கு டிக்கெட் எடுத்து வைத்து இருந்தோம். சித்திப் பொண்ணு இது வரை ஊட்டி பார்த்தது இல்லை என்று சொல்லவும், வெள்ளி இரவு 7 ஆம் தேதி கோயமுத்தூருக்கு ஸ்பெஷல் ட்ரையின் என்ற செய்தியினை பார்த்ததும் கோயம்புத்தூருக்கு டிக்கெட் போட்டு குற்றாலம் ட்ரிப்பினை கேன்சல் செய்தோம். கூட்டம் இல்லாத ஊட்டி பார்க்க மிக அழகாக இருந்தது. ஒரு நாள் மட்டும் கொஞ்சம் மழை. மற்ற மூன்று நாட்களும் அழகு. கோத்தகிரி+ஊட்டியில் நம்ம கூட்டத்துடன் லூட்டி தான். என் கணவரின் நண்பர் டாக்டர்.விஷ்ணு மோகன் அவரின் ஃப்ரெண்ட்ஸ்களுக்காக கோத்தகிரியில் கட்டி வைத்து இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் 4 நாட்களும் டேரா போட்டோம்.

பைக்காரா படகு பயணம் மிக குளிராய் இருந்தது.
 

பைக்காராவிலும் இப்படி தண்ணீர் ஓடிக் கொண்டு இருந்தது.

 


மிக அருமையான ஊட்டி பொட்டானிக்கல கார்டன்...

கோத்தகிரியில் உள்ள கொடநாட்டில் அம்மாவின் தேயிலை தோட்டம்.. வேன் டிரைவர் சொன்னார் என்று வேலி போட்ட அந்த தோட்டத்தில் கதவு திறந்து இருக்கவே உள்ளே நுழைந்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டு இருக்கும் போது இரு வாட்ச்மேன்கள் வந்து இதன் உள்ளே அனுமதி இல்லாமல் நுழைய கூடாது என்று சொல்லவும் போங்கடா இங்கே தேயிலை தோட்டத்திற்கா பஞ்சம் என்று வெளியேறினோம்.


அப்படியே கொடநாடு வியூ பாய்ண்ட் போனோம்.

பவானி ஆறும், டேமும், வீரப்பன் நடமாடிய காடும் அங்கிருந்து தெரிகிறது.

அங்கிருந்து திரும்பும் போது பைசன்கள் காட்சி கொடுத்தனர்.

2 comments:

மங்குனி அமைச்சர் said...

அப்படியே கொடநாடு வியூ பாய்ண்ட் போனோம்.///

இப்போ அதுவும் டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிப் போச்சா ? நல்ல பதிவு மேடம் , நானும் எப்பவும் கூட்டம் இல்லாத போது தான் எந்த இடத்திற்கும் சுற்றுலாசெல்வேன்

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி அமைச்சரே...