தி.நகரில் இருந்து கிழக்கு தாம்பரத்திற்கு 5A ஏஸி பஸ் புதியதாய் விடப்பட்டுள்ளது. அதில் போன வாரம் ஒரு நாள் பகல் வேளையில் வேளச்சேரியில் இருந்து தாம்பரம் வரை நான் மட்டுமே பயணம் செய்தேன்.
பகல் பொழுதில் அந்த பஸ் அவசியமா??
கொஞ்ச நாட்கள் முன்னாடி என்னுடன் பணியாற்றிய ஒரு ஆசிரியையை 5 வருடங்கள் கழித்துப் பார்த்தேன். பேசிக் கொண்டு இருந்த 2 மணிநேரமும் தன் ஒரே பெண்ணை பற்றி தான் பேசினார். பெண் இஞ்சினியரியங் முடித்து, சாப்ட்வேரில் பணியில் இருக்கிறார். திருமணம் முடித்து ஒரு குழந்தை இருக்கிறது. வேறு எதை பற்றியும் பேசவே இல்லை அந்த பெண்.பாப்பா, பாப்பா என்று ஒரே பாப்பா (25 வய்து) புராணம் தான். வீட்டிற்கு வந்து என் இரண்டு மகன்களிடம் கூறினேன் உங்களை பற்றி என்னால் ஒரு 10 நிமிடம் கூட தொடர்ந்து பேச முடியாதுடா என்று. ஒரே பெண் என்பதால் அவர் அப்படியா அல்லது எனக்கு பாசம் பத்தலையா என்று ஒரே கில்டியாய் போச்சு.
கோத்தகிரியில் இருக்கும் அம்மாவின் கொடநாடு வீட்டிற்கு அம்மா வரும் போதெல்லாம் அங்கு இருக்கும் அரசாங்க ஆஸ்பத்திரியின் டாக்டர் குழுமம் ஆம்புலன்சில் அவரின் வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டுமாம். ஆனால், அவர்களை எதோ காவல்காரன் மாதிரிதான் அந்த வீட்டில் இருப்பவர்கள் மதிப்பார்களாம். கூடவே ஒரு டாக்டர்கள் குழு சென்னையிலிருந்து அம்மாவுடன் வருமாம். ஆனாலும், இவர்கள் தேமே என்று காத்து இருப்பார்களாம்.
காஞ்சிபுரம் ஏ.எஸ்.பாபுஸா என்ற பட்டுப்புடனை கடை மிக ஃபேமசானது. போன மாதம் அந்த கடைக்கு போன போது கர்நாடகாவில் இருந்து வந்திருந்த ஒரு குடும்பம் 6 பெண்கள் துணைக்கு இரண்டு ஆண்கள் பில் போட்ட புடவைகளின் எண்ணிக்கை 80 இருக்கும். குடும்பத்தில் கல்யாணமாம். காலையில் இருந்து எடுத்துக் கொண்டு இருந்தனர். நாங்கள் இரவு 8 மணிக்கு அந்த கடையில் இருந்தோம்.எடுத்து வைத்த மொத்த புடவையையும் கீழே வைத்து சுத்தி அமர்ந்து பில் போட்டதால் எண்ணிக்கை தெரிந்தது. கர்நாடகா, ஆந்திரா மக்கள் வேன், கார் என்று வந்து இங்கு அள்ளுகிறார்கள். நாம் தான் தி.நகர் மட்டும் போகிறோம்.மொத்தமாய் எடுத்தால் விலை குறைகிறது இங்கு.
என் மகன் ரிஷியும் ஆக்டோபசும் ஒன்று. மெரி ப்ரவுனிற்கு உலக கோப்பை கால்பந்தாட்டம் நடந்துக் கொண்டு இருக்கும் போது போய் இருக்கிறான். அப்போது ஸ்பெயின் தான் ஜெயிக்கும் என்று கூப்பன் எழுதிப் போட்டு வந்து உள்ளான். அதற்கு பரிசாக 500 ரூபாய் மதிப்புள்ள ஃபுட் கூப்பனும், MGM நுழைவு டிக்கெட்டும் கூரியரில் அனுப்பி உள்ளார்கள்.
5 comments:
// ஒரே பெண் என்பதால் அவர் அப்படியா அல்லது எனக்கு பாசம் பத்தலையா என்று ஒரே கில்டியாய் போச்சு.//
உளவியல் ரீதியாக வேறு மாதிரியும் பார்க்கலாம்!
அந்த ஆசிரியைக்கு தன்னம்பிக்கை குறைவு இனி நம்மை மகள் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் பதிந்து விட்டது, அட்டென்ஷன் சீக்கிங் பர்சனால்டி என்பார்கள், தன் மகள் கவனத்தை கவர இப்படி தான் எதாவது பெருமையாக பேசி கொண்டே இருப்பார்கள், உங்களுக்கு அது தேவையிருக்காது! உங்க பசங்க நிச்சயம் உங்களை பார்த்துகுவாங்க!
நன்றி வால்பையா.
அ.கிருஷ்ணா!
இப்படி அதீதப் புலம்பல் ஒரு வித மனோ வியாதி. இதைக் கிண்டலடித்ததால் பலரின் கோபத்துக்கு நான் ஆளாகி இருக்கிறேன்.
சரி அது இருக்கட்டும். நீங்க சென்னையா? அட!
நன்றி முதல் முறையாக எனது வலைபதிவில் தங்கள் கருத்தை தெரிவித்ததற்கு
Post a Comment