Tuesday, February 16, 2010

ஐரிஷ் அம்மாவா தமிழ் அம்மாவா!!!


விஜய் சேனலில் குழந்தை வளர்ப்பில் சிறந்தவர்கள் அந்தக்கால கன்சர்வேடிவ் அம்மாக்களா அல்லது இந்த கால மாடர்ன் அம்மாக்களா என்ற தலைப்பில் நீயா, நானா கோபிநாத் சிறப்பாக நடத்தினார்.

கன்சர்வேடிவ் அம்மாக்கள் சொல்வதை எதனையும் இந்த கால அம்மாக்கள் தங்கள் குழந்தை வளர்ப்பில் கேட்டு கொள்வதில்லை. எதை எடுத்தாலும் இண்டர்நெட்டில் தாங்கள் படிப்பதாகவும், டாக்டர் சொல்லும் விதத்தில் தான் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதாகவும் சொன்னார்கள்.

அந்த கால அம்மாக்கள் சொன்னதில் முக்கியமானது.இப்ப குழந்தைகள் எதனை கேட்டாலும் இந்த கால பெற்றோர் வாங்கி கொடுத்து கெடுக்கிறார்கள், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்த சொல்லி தருவதில்லை, சொந்தபந்தங்களை சொல்லி வளர்ப்பதில்லை,தாய் பால் கொடுப்பதில்லை,இப்படி இல்லை இல்லை அதிகம் இருந்தன.

மறுத்து பேசிய இளம் அம்மாக்கள் நேரில் சொந்தபந்தங்களை காண்பிக்க நேரம் இல்லை எனவே, ஃபோட்டோ ஆல்பத்தில் அடிக்கடி சொந்தபந்தங்களை காண்பிக்கிறோம். மரியாதை செலுத்தாத குழந்தைகளை கண்டிக்கிறோம். நாங்கள் அனுபவிக்காததை தான் எங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கிறோம் என்று சொன்னார்கள்.

இளம் அம்மாக்கள் தங்கள் கணவனை தனிமையில் எப்படி எல்லம் செல்லமாக அழைப்போம் என்பதனை வெட்கப்படாமல் சொன்னார்கள். அதனை கேட்டு கொண்டிருந்த அந்த கால அம்மாக்களின் முகத்தில் தான் வெட்கம் தெரிந்தது.

ஐரிஷ் அம்மாக்கள் தான் அதிகமாக தங்கள் குழந்தைகளை கவனிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும், 12 முதல் 14 வயது வரை குழந்தைகளை கண்காணிப்பதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறதாம்.

இந்த அரங்கில் அந்த கால அம்மாக்கள் 19 வ்யது வரை குழந்தைகளை நன்கு கண்காணிக்க வேண்டும் என்று கூறினர். இந்த கால அம்மாக்களோ சுதந்திரமாக தங்கள் குழந்தைகளை வளர்க்க விரும்புவதாக கூறினர்.

இது வருத்தம் தரும் செய்தியாக இருந்தது. இந்தியாவில் தான் குழந்தை வளர்ப்பு மிக சரியானது என்ற என் நினைப்பில் மண்ணை போட்டது. உலகிலேயே ஐரிஷ் பெற்றோர் தான் சரியான பெற்றோர் என்பது ஆய்வின் முடிவாம். இந்திய பெற்றவர்கள் ஒரு மாயையில் இருப்பது போல் தெரிகிறது. சுதந்திரம் என்பது நம் குழந்தைகளை அதிக பிரசங்கி ஆக்குவதிலும், ஆடை குறைப்பிலும் இல்லை என்று உணர வேண்டியது இன்றைய மாடர்ன் அம்மாக்களே.

No comments: