1965 – 75-ல் பிறந்தவர்களும்
சமூகமும்:
நார்மலா பிறக்காமல்
சிசேரியன் மூலம் பிறக்க ஆரம்பித்தவர்கள்.
அதிகம் கவர்ன்மெண்ட்
ஆஸ்பத்திரியில் பிறந்தவர்கள்.
3,4 பேருடன் கூடப்பிறந்தவர்கள்.
சித்தப்பா,சித்தி,பெரியப்பா,பெரியம்மா,அத்தை,மாமா,தாத்தா,பாட்டி
என்று
கூட்டு குடும்பத்தில் கொஞ்சகாலம் வாழ்ந்தவர்கள். அதில் கஷ்டத்தை அனுபவித்தவர்கள்.
அப்பாவிற்கு பயந்தவர்கள்.
குச்சி ஐஸ்,பால்
ஐஸ், தேன் மிட்டாய்,தொக்கு
உருண்டை, நெல்லிக்காய்,கொடுக்காபுளி சாப்பிட்டவர்கள்.
பல்லாங்குழி,பரமப்பதம்
என வீட்டிலேயும் கோலி,குச்சிக்கம்பு,கல்லா மண்ணா என்று தெருவிலே விளையாடி தீர்த்தவர்கள்.
சின்ன வயதில் டூர்ன்னா
திருச்செந்தூர்,பழனி, கன்யாகுமரி, மாமல்லபுரம்,ஸ்ரீரங்கம் என அவர் அவர் ஊருக்கு பக்கத்து
ஊருக்கு மட்டும் புளியோதரை கட்டி போனவர்கள்.
பெண்களுடன்/ஆண்களுடன்
பேச கூச்சப்பட்டவர்கள்.
எம்.ஜி.ஆர்,இந்திராகாந்தி
போன்றவர்களை சின்ன வயசில் நேரில் பார்த்தவர்கள்.
ஹை ஹிந்தி வேண்டாம்
என்று எதிர்த்தவர்கள்.ஹிந்தி தெரியாம போச்சே என்று இப்ப புலம்புபவர்கள்.
எங்கே போனாலும்
சைக்கிள்,நடை,டவுண் பஸ்,மாட்டு வண்டின்னு கிடைச்சதில் சலிக்காமல் போனவர்கள்.முதலில்
லூனா ஓட்டியவர்கள்.
ரொம்ப இங்கிலிஷ்
கலக்காமல் பேசுபவர்கள்.கலக்கும் இங்கிலிஷையும் சரியாக உச்சரிக்க முடியாமல் திண்டாடுபவர்கள்.
அதிகம் தமிழ் மீடியத்தில்
படித்த கடைசி தலைமுறை.
தமிழை கொஞ்சம்
நேசித்த,தமிழில் ஒரு பக்கமாவது ஒழுங்கா எழுத தெரிஞ்சவர்கள்.
எண்ட்ரன்ஸ் எக்சாம்
புண்ணியத்தில் டாக்டர்,எஞ்சினியர் என்று மிடில் க்ளாஸ் மக்களும் படிக்க ஆரம்பித்தவர்கள்.
சுஜாதா, பாலக்குமாரன்
போன்ற சூப்பர் எழுத்தாளர்களின் எழுத்தை உடனுக்குடன் ஸ்வாசித்தவர்கள்.
டீச்சர்களிடம்
அடி வாங்கிய கடைசி தலைமுறை.
அவளை பாரு இவனை
பாருன்னு அடுத்தவர்களுடன் படிப்பிற்கோ மற்றவற்றிற்கோ ஒப்பிடாமல் இருந்த டென்ஷன் ஏற்றாத
கடைசி தலைமுறை பெற்றோருக்கு பிறந்தவர்கள்.
ரேங்க் கார்டில்
அட்லீஸ்ட் ஒரு ரெட் கோடு இருக்க பிறந்தவர்கள்.
ஊரில் ஒன்றிரண்டு
ஓடும் அம்பாசிடர் காரை ஆன்னு பார்த்தவர்கள்.
தந்தியின் உபயோகத்தையும்,
காதலுக்கு லெட்டரும் எழுதிய கடைசி தலைமுறை.
காதலை சொல்ல ரொம்ப
ரொம்ப யோசித்து யோசிச்சு….இன்னமும் அப்ப சொல்லியிருக்கலாமோன்னு யோசிப்பவர்கள்.
1965 – 75-ல் பிறந்தவர்களும்
டிவியும்:
முதல் முதலாக மங்கலாக
தெரியும் இலங்கையின் ரூபவாஹிணியை ஆண்டனாவை அண்ணா மொட்டை மாடி ஏறி அட்ஜஸ்ட் செய்ய இப்ப
சரி, இப்ப இல்லைன்னு சொல்லி அப்படியும் விடாமல் டி.வி பார்த்தவர்கள்.
அதன் பிறகு ஷோபனா
ரவி என்னம்மா நியூஸ் வாசிக்கிறார்கள் என்று வாயை திறந்து டி.டி பார்த்தவர்கள்.
ஊரே ஒன்று கூடி
வெள்ளிக்கிழமை “ஒலியும் ஓளியும்” ப்ளாக் அண்ட் ஒயிட் டிவியிலும், அதில் ஒரு கலர் க்ளாஸ்
ஒட்டி வைத்தும் அப்புறம் நிஜ கலர் டி.வியிலும்
பார்த்தவர்கள். திங்கள்கிழமை சித்ரஹார்,அவ்வப்போது வரும் ராஜீவ் பத்திய நியூஸ் கிளிப்பை
ஆன்னு பார்த்தவர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் போடோ மொழி படமானாலும் அதையும் ரசித்த
கலாரசிகர்கள்.
காதில் கரகரன்னு
வச்சு கேட்ட ட்ரான்ஸிஸ்டரை கடாசிட்டு கிரிக்கெட்டை டிவியில் பார்த்து ரசித்தவுங்க.
பெரிய பெரிய ரேடியோவில்
டைப்ரைட்டிங்க் கீ மாதிரி இருக்கும் கீயை அமுக்கி அமுக்கி ஸ்டேஷன் மாத்தி கஷ்டப்பட்டவர்கள்.
சினிமாவும் 1965-75-ல்
பிறந்தவர்களும்.
கமல் மட்டும் தான்
நடிக்க,ஆட தெரிந்தவர்,அவர் மட்டும் தான் சிவப்பு, அழகு என்பதை நம்பியவர்கள்.
ரஜினியை வெறியாக
ரசித்தவர்கள்.
சிவாஜியை ஸ்ரீப்ரியா,அம்பிகா,ஸ்ரீதேவியுடன்
கோட்டும் தொப்பையுமாய் பார்த்து நொந்தவர்கள், பிறகு முதல் மரியாதையில் சிவாஜி மீது
ப்ரியம் கொண்டவர்கள்.
சினிமா பார்ப்பதை
மட்டுமே பொழுதுப்போக்காக கொண்டவர்கள். ஒரே படத்தை இரண்டு மூன்று முறை பார்த்து 100
நாட்கள் ஓட்டியவர்கள்.
”அதுக்காக” பாக்யராஜ்,
இசைக்காக டி.ராஜேந்தர், ஸ்டைலுக்கு ரஜினி, டான்சுக்கு கமல், அடாவடிக்கு பார்த்திபன்,வில்லனுக்கு
சத்யராஜ்,மைக்குக்கு மோகன்,பசுவுக்கு ராமராஜன்,அடிதடிக்கு விஜயகாந்த்,காலேஜ்னா முரளி,
சுறுசுறுப்புக்கு கார்த்திக் இந்தனைக்கும் நடுவில் சில்க்,ஜெயமாலினி கட்டாயம் வேண்டும்
என்று கேட்டு ரசித்தவர்கள்.
அம்பிகா,ராதா சம்பாதிக்க
உதவினவர்கள்.ரேவதியின் நடிப்பை ரசித்தவர்கள்.
நதியாவை பார்த்து
அவரை போலவே இருக்க ஆசைப்பட்டவர்கள்.
இளையராஜா,வைரமுத்து,எஸ்.பி.பி,ஜானகி,சித்ரா,ஜேஜுதாஸுடன்
சேர்ந்தே வளர்ந்தவர்கள்.
கவுண்டமணி,செந்தில்
ப்ரியர்கள். அய்யோடா என்று ஒய்.ஜி.மகேந்திரனை பார்த்து நொந்தவர்கள்.
பாலச்சந்தர்,பாரதிராஜா,பாக்யராஜ்
என்று டைரக்டர்களை மதித்தவர்கள்.
நடிகர்,நடிகைக்கு
லட்டர் போட்டு அவர்கள் அனுப்பும் ஃபோட்டோவை புத்தகத்தின் நடுவில் வைத்து ரசித்து மகிழ்ந்த
கடைசி தலைமுறை.
.
இன்னமும் நிறைய இருக்கு..உங்களுக்கு பாக்கி வைக்கிறேன்.
இதை படிச்சதும் இதை எழுத தோணுச்சு.
9 comments:
Excellent.. 99.9% matching with me.. I was born in that era.
விலாவரியா அலசியிருக்கிங்க.
அருமை. நானும் அதில் நிறைய பொருத்தங்களை காண்கிறேன்.
100% matching
சத்தியமா எல்லாம் உண்மைங்க! பாம்பின் கால் பாம்பறியுமோ?!
இத்தனை வருட ஆராய்ச்சியை எப்படி உங்களால் செய்ய முடிந்தது ?அருமை !
கமெண்டுக்கு நன்றி ppattian, Chokkan Subramaninan,தளிர் சுரேஷ்,Bagawanjee KA
அருமை மிகவும் அருமை.. கொடுக்காப்புளி நினைத்தாலே அருமை!!!
Sooper.
Post a Comment