Thursday, August 28, 2014

இனிமே யாருக்காச்சும் உதவி செய்வியா?

அடராமா இப்படியும் யாராச்சும் இருப்பாங்களான்னு ரெண்டு நாளா யோசிச்சு யோசிச்சு ஆமா இருக்காங்களேன்னு யோசிக்கறதை விட்டுட்டேன்.

ஃப்ரெண்ட் ஒருவரின் மனைவி அவ்வப்போது  ஃபோனில் பேசுவார். நேரில் ஒரு முறை கூட பார்த்ததில்லை. ஃப்ரெண்ட் தண்ணீ பார்ட்டி புரொஃப்சர். அதனால் கணவன் மனைவி சண்டை. மகன் படிப்பு கெடகூடாதுன்னு போன வருடம் தனியே வீடு எடுத்து இருக்கிறாள். மகன் இந்த வருடம்  +2 எழுதினான்.

 சென்னை சிட்டியில் இருக்கும் ஒரு காலேஜில் சீட் கிடைச்சு இருக்கு. நாளைக்கு சென்னை வர்றோம் உங்க அட்ரஸ் சொல்லுங்க நாங்க இரண்டு பேரும் வர்ரோம்னு சொன்னாங்க. சரின்னு அட்ரஸ் கொடுத்து வழியும் சொல்லி பஸ்-ஸ்டாண்டில் காத்திருந்து கூப்பிட்டு வந்தேன். அன்று தான் முதல் முதலாக தாயையும்,மகனையும் பார்க்கிறேன்.

மறுநாள் அந்த காலேஜுக்கு கொண்டு விட துணைக்கு வாங்கன்னு சொல்லவும் சரின்னு கூட போய் ஹாஸ்டலில் விட தேவையான சாமான்களை காலேஜ் பக்கத்தில் பர்சேஸ் செய்தோம். ஹாஸ்டலில் அந்த சாமான்களை வைக்கப்போகும் போது தான் மிக மோசமான நிலையில் ரூம்கள் இருந்ததை பார்த்தோம். ரொம்ப மோசமா இருந்துச்சு. புலம்பிட்டே ரூமில் வச்சுட்டு வெளியே வந்தோம்.

அந்த பையனுக்கு மதியம் ஒரு மணிநேரம் காலேஜ் இருக்குன்னு சொல்லவும் இரண்டு பேரையும் காலேஜில் விட்டுட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன். அவள் மாலை கோயம்பேடு போய் ஊருக்கு போவதாய் சொல்லவும் சரின்னு சொல்லிட்டேன்.


நான் வீட்டிற்கு வந்த ஒரு மணிநேரத்தில் அவளிடமிருந்து ஃபோன் அக்கா பாத்ரூம் படு மோசமா இருக்கு,ரூம் எல்லாம் குண்டும் குழியுமா இருக்கு என் பையனை எப்படி விட்டுட்டு போறதுன்னே தெரியலை வெளியே தங்க எங்காச்சும் ரூம் இருந்தா உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கன்னு அழுகுற மாதிரி சொல்லவும். நான் விசாரித்து சொல்கிறேன்னு சொல்லிட்டு என் கணவரிடம், மகனிடம் அவனுக்கு வேறு ரூம் கிடைக்கும் வரை ஒரு வாரமோ,பத்து நாட்களோ நம் வீட்டுல இருக்கட்டும்மான்னு கேட்டதும் ரெண்டு பேரும் ஓக்கே இதை ஏன் கேட்டுட்டு இருக்க, இருக்கட்டும் கொஞ்ச நாள் தானேன்னு சொல்லிட்டாங்க. நானும் அவளுக்கு ஃபோன் செய்து ஒரு ஆட்டோ வைத்து சாமான்களை எடுத்துட்டு இங்கே வந்துடு. ஒரு வாரம் இங்கே இருக்கட்டும். இங்கே இருந்து ட்ரையினில் காலேஜ் போய் வரட்டும்னு சொல்லவும் ஐயோ அக்கா நீங்க நிஜமாவே ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவுங்க உடனே வர்ரேன்னு சொல்லி  வந்துட்டாங்க. டெரசில் இருக்கும் புத்தம் புது தனி ரூம் அட்டாச் பாத்ரூம் கீயை கொடுத்தேன்.

காலை 6.45 க்கு வீட்டிலிருந்து தினம் காலேஜுக்கு போகணும் எனவே காலை, மாலை மட்டும் இங்கே சாப்பிடட்டும், மதியம் காலேஜ் கேண்டின்ல சாப்பிட சொல்லிக்கோன்னு சொல்லிட்டேன். அவளும் மிக சந்தோஷமாக ஒத்துக்கொண்டு சரிக்கா நான் அடுத்த 2 ஆம் தேதி சனிக்கிழமை வருகிறேன். அதற்குள்ளாக ரூமிற்கு சொல்லி வையுங்கள் இல்லாட்டா சின்னதா வீடு கிடைச்சாலும் ஓக்கேன்னு சொல்லிட்டு மறுநாள் காலையில் ஊருக்கு போய்விட்டாள்.

இரண்டு நாளில் அந்த பெண்ணிடமிருந்து ஃபோன்.என் மகன் ரொம்ப சந்தோஷமா இருக்கான்க்கா,நல்லா சாப்பாடு தர்றீங்கன்னு சொல்றான். அவன் ”தன்” ரூமை ஃபோட்டோ எடுத்து தன் மாமா,சித்திக்கு எல்லாம் அனுப்பி இருக்கான். சொர்க்கம் மாதிரி இருக்குன்னு சொல்றான். ரொம்ப நன்றிக்கான்னு சொன்னா.(என் தலை கொஞ்சம் வெயிட்டா தோணுச்சு) என் பையனை விட்டுட்டு நான் இருந்ததே இல்லை இது தான் முதல் தடவை. தூக்கமே வரலைன்னு புலம்பினா. என் தலையினை கொஞ்சம் தட்டிட்டே அதுனால என்ன எல்லாம் கொஞ்ச நாளுக்குதானேன்னு சொல்லிவச்சேன்.


என் பெரிய மகன் படிக்க யூஸ் செய்யும் ரூம் ஒரு பக்கம் முழுவதும்  ஃப்ரென்ஞ் விண்டோ வைத்து புளூ டைல்ஸ்,ப்ளூ ஃபேன்,ப்ளூ ஸ்க்ரீன்,ப்ளூ கப்போர்ட், கீழே பெட் போட்டு ப்ளூ பில்லோஸ்,ப்ளூ பெட்கவர்ன்னு ஒரு ரகமாய் இருக்கும். நோ டிவி,நோ ம்யூசிக் சிஸ்டம். இரவில் மாடிக்கு போய் என் மகன் அவனுடைய புக்ஸ் எல்லாம் அள்ளிட்டு வந்து கீழே ரூமில் வச்சுக்கிட்டான்.

நான் லூசான்னு யோசிச்ச மொமண்ட்:

2ஆம் தேதி வர்ரேன்னு வரலை,அப்புறம் 9-ல் வர்ரேன்னு வரலை.14 நைட் வர்ரேன்னு சொல்லிட்டு 14த் காலை ஃபோன் வந்துச்சு அக்கா அக்கா என் பையன் லீவுக்கு இங்கே வர்ரணும்னு ஆசைப்படுறான் அதனாலே அவன் இங்கே வரட்டும் 17 காலை அவனுடன் சேர்ந்து நான் அங்கே வர்ரேன்னு சொன்னா..நான் சரிப்பான்னு சொல்லிட்டேன்..


16த் நைட் ஃபோன் வந்துச்சு. எனக்கு இங்கே ஒரு முக்கியமான வேலையிருக்கு!!! என் மகனை இப்ப அனுப்பிட்டு 23 சனியன்று நான் அங்கே வர்ரேன்னேன்னு சொன்னா அதுக்கும் சரின்னு சொல்லிட்டேன்.(கோவப்படாதே அமுதான்னு சொல்லிகிட்டேன்) தனியே கணவருடன் வாழாமல் மகனும் இங்கே இருக்க, வீட்டிலிருக்கும் இவளுக்கு என்ன முக்கிய வேலைன்னு தெரியலை

17 காலை 3 மணிக்கு எனக்கு ஃபோன் அந்த பையனிடமிருந்து வீட்டிற்கு வெளியில் நிற்கிறேன். கதவை திறங்கன்னு.தூக்க கலக்கத்தில் எழுந்து சாவியை கொடுத்தேன்.எப்படிடா அந்த நேரத்துக்கு வந்தன்னு கேட்டா லிஃப்ட் கிடைச்சுதுன்னு சொன்னான். சரின்னு விட்டாச்சு.

கன்ஃபார்மா நான் லூசுன்னு தோணின மொமண்ட்:

நடுவில என் ஃப்ரெண்ட் அம்மா ( 75 வயது) என்கிட்ட பேசினாங்க.  இங்க பாரும்மா எம்மகனை கவனிக்காம இப்ப அவனை நான் தான் கவனிச்சுட்டு இருக்கேன். நீ எங்களுக்காக என் பேரனை வீட்டில் வச்சது சந்தோசம்னு உனக்கு ஏன்ம்மா கஷ்டம்னு சொல்லிட்டு அவளை பத்தி தன் மகனை பத்தி புலம்பினாங்க. இது தெரிஞ்சு கிட்டு அவ எனக்கு ஃபோன் செய்து அக்கா எங்க மாமியார் உங்க மனசை கலைப்பாங்க.எனக்கு மூணாவது மகன் மாதிரி இவன்,இவனை வச்சு இருப்பது எனக்கு ஒரு கஷ்டமும் இல்லைன்னு சொல்லிடுங்கக்கா..அப்பதான் அந்த பொம்பளை!!! வாயை மூடும்னு எனக்கு செம அட்வைஸ்.(என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தோணலை..சுறுக்குன்னு கோபம் வந்துச்சு) 25 வருஷமா அந்தம்மாகிட்ட பேசிட்டு இருக்கேன். நீ தான் எனக்கு புதுசுன்னு மட்டும் சொல்லி வச்சேன்.

பொறுத்தது போதும்னு யோச்சிச்ச மொமண்ட்:

22 வெள்ளி நைட் அந்த பையனிடம் உங்கம்மா நாளைக்கு வர்ராங்களான்னு கேட்டா தெரிலன்னு சொல்றான்.உடனே ஜெர்க்காகி போனேன். நைட்டே நெட்டில் Sulekha.com..ல் என் நம்பரை போட்டு ரிஜிஸ்டர் செய்தாக்கா..இந்த ஏரியாவில் ரூம் இருக்குன்னு வரிசையா என் ஃபோனுக்கு SMS-ம்,ஃபோனும் வந்துட்டே இருந்துச்சு. அவன் காலேஜ் கிட்ட உள்ள ரூமில் இடமும் கிடைச்சது.  தொகையும் பெரிசா இல்லை. உடனே அவளுக்கு ஃபோன் செய்து இப்படி இங்கே நிறைய ரூம் இருக்கு உன் பையன் நாளைக்கு காலேஜ் போகும் போது ரெண்டு ரூம் பார்த்துட்டு வர்ரட்டும் நீ வந்து சண்டே ரூமில் விட்டுடுன்னு  சொன்னா...அக்காக்கா அவன் சின்ன பையன்(நைட் 3.30க்கு தனியா வருவானாம்) அவனை தனியே அனுப்பாதீங்க...அவனுக்கு ஒன்னுமே தெரியாது..ஹேய் இந்த ஹாஸ்ட்டல் காலேஜ் பக்கம்ப்பான்னு சொன்னா காதுலேயே வாங்கலை. சரிஅப்படின்னா நீ வா வந்து ரூம் தேடுன்னு சொல்லிட்டேன். (கோபமா சொல்லலை ஆனா கோபம் வந்துச்சு)

சனியன்று காலையில் அந்த பையனிடம் அட்ரஸ் கொடுத்து மாலை ரூம் பார்த்துட்டு வாடான்னு சொல்லிட்டேன்.ஆனா அவன் அந்த பக்கமே போகலை.இவளும் வரலை.


சனியன்று மாலை என் அருமை ஃப்ரெண்ட் மிஸ்டர். @#$ எனக்கு ஃபோன் செய்றார். என் மகன் எப்படி இருக்கான். அவன் சின்ன பையன்ப்பா அவனை ட்ரையின்ல அனுப்பாத,காலேஜ் பஸ் விசாரிச்சு அதுல அனுப்பு,ட்ரையின்ல தொங்கிட்டு போவான்!!!.எப்பூடி..காலேஜ் சேர்த்து 25 நாட்கள் கழிச்சு எப்படி  அனுப்பனும்னு ஃபோன்.

நான் ஒரு புரொஃபசர்ட்ட சொல்லி இருக்கேன். அவன் காலெஜுக்கு பக்கத்தில் டீசண்டா இடம் பார்த்து தர்றேன்னு சொல்லி இருக்கார். இன்னும் கொஞ்சநாள் உன் வீட்டுல இருக்கட்டும்னு சொன்னான்.

என்ன எம்மவன் வந்துட்டானா? இல்லை எனக்கு தெரியாது நான்  மார்க்கெட்டில் இருக்கேன்னு பொறுமையா பதில் சொல்றேன். அய்யோ அவன் வீட்டுக்கு வரும்போது யாரு அவனுக்கு சாவி தருவான்னு கேட்டான்.எங்கம்மா இருக்காங்க அவுங்க தருவாங்கன்னு சொன்னேன். (பொறுமை பொறுமை அமுதான்னு சொல்லிட்டேன்). சரி அந்த ப்ரொஃபசர் நம்பர் கொடு நான் பேசிட்டு நாளைக்கு உன் மகனை அனுப்புறேன்னு சொன்னேன். அய்யோ அவன் சின்ன பையன்ப்பா (டேய் அடங்க மாட்டீங்களா) அவன் எப்படி தனியே போவான். நான் வர்ரேன்.வந்து செட்டில் செய்துடுறேன்னு சொன்னான்.சார், காலேஜ் அட்மிஷனுக்கே வர்லை.

நான் அவனின் மனைவிக்கு ஃபோனை போட்டேன். நாளைக்கு எப்ப வர்ரப்பான்னு கேட்டேன். நான் நினைச்சது இவன் ஃபோன் செய்தது அவளுக்கு தெரியாதுன்னு. அக்கா நாளைக்கு நான் வர்லக்கா ஃப்ரொஃப்சர் ஃபோன் செய்வாங்க அப்ப தான் நான் வருவேன்னு கூலா சொன்னா...உன் கணவர் பேச்சை நான் நம்பமாட்டேன்.இத்தனை நாட்கள் இல்லாத அக்கறை நானே ரூம் பார்த்ததும் தான் அவனுக்கு வந்ததா. இல்லை நீ வா நேர்ல நான் சொல்ற ரூமை பாரு, அந்த ஃப்ரொஃபசரையும் பாரு.

அடுத்த மாதம் நான் நிறைய ஊருக்கு டிக்கெட் போட்டிருக்கேன்.என் அம்மா என் தம்பி வீட்டிற்கு போய்டுவாங்க.அப்புறமா என் சித்தி பெண்ணிற்கு நிச்சயம் வீட்டில் செய்ய போறோம். வீட்ல 20 பேருக்கு மேல் தங்குவாங்கன்னு சொன்னேன். இந்த விளக்கம் தேவையில்லாதது. ஆனாலும் சொன்னேன்.

ரத்தக்கண்ணீர் மொமண்ட்:

அக்கா நீங்க எங்க வேணா போங்கக்கா என் பையனுக்கு சாப்பாடு கூட வேண்டாம். ஆனா அவன் பாட்டுக்கு மாடியில் இருந்துக்கட்டும்னு சொன்னா???? ஓ நான் ஊருக்கு போக மேடமே பெர்மிஷன் கொடுத்துட்டாங்கன்னு என் மகனிடம் என்னடா இந்த பொண்ணு இப்படி சொல்லுதுன்னு புலம்பினேன்.

ஒரு மாசமா பொறுமையா அனைத்தையும் பார்த்துட்டு இருந்த என் மகன் அம்மா லூசாம்மா நீ இப்பவே திரும்ப ,ஃபோன் செய்யுங்க நாளைக்கே வர சொல்லுங்க..இல்லாட்டி நான் நாளைக்கு அந்த பையனை நீங்க பார்த்த ரூமில் கொண்டு விட்டுட்டு வந்துடுறேன்னு சொன்னான்.


கோபமே பட்டுட கூடாதுன்னு மனசுல நினைச்சுட்டே நீ நாளைக்கு வா, இங்கே வந்து ரூம் தேடாம எப்படி ரூம் கிடைக்கும்னு கேட்டேன். சரி நாளைக்கு வர்ரேன்னு சொன்னா.

மறுநாள் என் தங்கை வீட்டிற்கு நான் போற வேலை இருந்துச்சு நானும் என் கணவரும் அங்கே காலையிலேயே போயிட்டோம்.24th இவ 10 மணிக்கு வந்திருக்கா வந்தவ நேரா மாடிக்கு போய் மகனை பார்த்துட்டு லக்கேஜ் எல்லாம் பேக் செய்துட்டு கீழே வந்து நான் வந்து அரை மணிநேரம் ஆச்சு எனக்கு கால் டாக்ஸி நம்பர் கொடுங்கன்னு கேட்டு இருக்கா. அம்மா கொடுக்கவும் திரும்ப மாடிக்கு போனவ டாக்ஸி வந்ததும் அம்மாகிட்ட சொல்லாம கீழே போய் கார் ஏறி போயாச்சு.

கொழுப்பான மொமெண்ட்:

அம்மா சொல்றாங்க தினம் ஒரு ஜூஸ்,சத்துமாவு கஞ்சி, பால், நெய் ரோஸ்ட், முட்டை தோசை,நான் - வெஜ்ஜூ, நைட் சாதம்,குழம்பு,காய்ன்னு செய்து கொடுத்தேல்ல சின்னப்பையனுக்கு கொழுப்பு ஜாஸ்தியா போயிருக்கும் அதான் அவளுக்கு கோபமாய் இருக்கும்னு சொல்றாங்க. அனுபவப்பட்டவுங்க சொன்னா சரியாதானே இருக்கும்.


 என் வீட்டிலிருந்த 30 நாட்களும் அந்த பையன் என்னை எந்த முறை சொல்லியும் கூப்பிடவேயில்லை.நான் போறேன்,சாவி வேணும்,வர்ரேன்னு இப்படி மொட்டையா பேசுவான். கேட்ட கேள்விக்கு ஒரு வார்த்தை பதில் சொல்வான்.அவசர அவசரமா சாப்பிடுவான்,மேலேப்போறேன்னு ஓடிடுவான். கொஞ்ச நேரம் டீவியில்,பேப்பர்,புத்தகத்தில் உட்கார மாட்டான். என் மகன்களை வம்படியாக பேசினாலும் பேச விரும்பவே மாட்டான். ஆமா,இல்லைன்னு விட்டேத்தியா பதில் பேசுவான்.என்னம்மா இந்த பையன் இப்படி இருக்கான்னு அதிசயபடுங்க. மாடியில் துணி காயப்போகும் போது அவன் மனசு வச்சால் தான் கதவை திறப்பான். ஒவ்வொரு முறை சாப்பிடவும் நான் மிஸ்ட் கால் கொடுத்தாதான் வருவான். ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும் போதும் நாயை வெளியில் விட்டுடுவான்.

ரூமை கூட்டுடான்னு சொன்னா ஒரு நாளும் செய்ததில்லை. நான் மூன்று நாட்களுக்கொருமுறை நம் வீடு தானே நாசமா போகும்னு டாய்லெட் முதற்கொண்டு சுத்தம் செய்துட்டு வருவேன். இருந்த நாட்கள் மொத்தமும் ஒரு நாளும் குப்பையை எடுத்து வந்து கீழே போடவில்லை. வாஷிங் மெஷினில் ட்ரஸ் துவைத்து கொடுத்தேன்.போன ஜென்மத்துக் கடன் பாக்கின்னு நினைத்துக் கொண்டேன்.

கொசுவர்த்தி:

சென்னை வந்த 24 வருடத்தில் இது மாதிரி எங்க வீட்டுக்கு ஃபாரின் போறேன்,எம்ப்ளாய்மெண்ட் ரிஜிஸ்ட்ரேஷன்,வேலைக்கு இண்டர்வியூ,அண்ணா யுனிவர்சிட்டி கவுன்சலிங்க்,மெடிக்கல் கவுன்சலிங்,ஒரு நாள் விஷேஷம் குளிச்சுட்டு காலை சாப்பட்டு போறவுங்க, சாப்பிடாம போறவுங்க, நைட்  ஸ்டேயிங்,அமெரிக்க விசா இண்டர்வியூக்கு இரண்டு நாளைக்கு வந்தவுங்கன்னு, எண்ட்ரன்ஸ் எக்சாம் எழுத வந்தவுங்க அப்படி இப்படின்னு யாராச்சும் இவரின் அண்ணா பசங்க, தம்பி பசங்க,அக்கா பசங்க..அவுங்க ஃப்ரெண்ட்ஸ்.ஃப்ரெண்ட்சுக்கு ஃப்ரெண்ட்ஸுன்னு வருவாங்க சில பேரெல்லாம் 3 மாதம் 6 மாதம் கூட தங்கி இருக்குதுங்க...இப்படி ஒரு அனுபவம் எனக்கு இல்லை. அடி ஆத்தி இது புதுசால இருக்கு.


இப்ப வரைக்கும் நான் வீட்டுக்கு வந்தேன். நீங்க இல்லை பையனை கூட்டிப்போனேன். ஒரு மாதம் வச்சுருந்தீங்க அதுக்கு நன்றி(எனக்கு ஓவர் நினைப்பு தான் எப்பவும்) அப்படி இப்படின்னு ஒரு ஃபோன் கிடையாது. அந்த ஃப்ரெண்ட் என்னோடு PG இரண்டே இரண்டு வருடங்கள் கூட படிச்சவர்.



24 comments:

துளசி கோபால் said...

அட ராமா!!!!!! இப்படியா?

ஹுஸைனம்மா said...

வடிவேலுவை ஒரு படத்துல “ரொம்ம்ம்ம்ப்ப்ப நல்லவேன்னு சொன்னாங்க” தான் ஞாபகத்துக்கு வருது.

உங்க அட்ரஸ், ஃபோன் நம்பர்லாம் வாங்கி வச்சுக்கணுமே... ;-)))))))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இனிமே யாருக்காச்சும் உதவி செய்வியா? //
நீங்க செய்வீங்க! இன்னும் பல பதிவு இருக்கிறது.
இப்படி எனக்கும் அனுபவமுண்டு. ஆனாலும் நான் திருந்தவில்லையே!அதனால் நீங்கள் செய்வீர்கள்.
என் கதையை(சென்னையிலிருந்து பாரிஸ் வந்தவர்) நேரமிருந்தால் எழுதுகிறேன்.

அமுதா கிருஷ்ணா said...

துளசி கோபால் மேடம் இது வரை அட ராமான்னு ராமா கூப்பிட்ட புண்ணியம் தான் நிறைய சேர்ந்து இருக்கு!!!

அமுதா கிருஷ்ணா said...

ஹூஸைனம்மா.....வேணாம் அவ் அழுதுடுவேன்.

அமுதா கிருஷ்ணா said...

யோகன் பாரிஸ் இது சாபமா இல்லை உங்க அனுபவமா???

Avargal Unmaigal said...

நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க....சரி சரி மறக்காம உங்க விலாசத்தை எனக்கு அனுப்பி வையுங்க.... ஆமாம் ஒன்னு கேட்க மறந்துட்டேன் நல்லா உப்பு உறைப்பா சமைப்பிங்கதானே?? இல்லைன்னா சமைக்க கத்துங்க..... நான் இப்பவே டிக்கெட் போட போகிறேன்

சேக்காளி said...

வணக்கமக்கா!எனக்கு சென்னைல ஒரு வாரம் வேலை இருக்கு(சினிமா சூட்டிங் பாக்கணும்) அங்கே(செனனை) வேற யாரையும் தெரியாது. அந்த ஒரு வாரத்துக்கு மட்டும் தங்குறதுக்கு ஒரு வீடு வேணும். கொஞ்சம் பாத்து குடுங்க ன்னு சொன்னா ஒங்க மனசு கஷ்டப்படும். அதனால ஒங்க வீட்டுலேயே தங்கிக்கறேன். வர்ற தேதிய சொல்லுறேன்.ஒரு கால் டாக்சிய பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்பி வையுங்க.
இப்பிடி ஒரு தம்பியான்னு நெனச்சு கண் கலங்கக்கூடாது.

அமுதா கிருஷ்ணா said...

Avargal Unmaigal...உப்பு உறைப்பா சமைப்பேன்.என் பிரச்சனையெல்லாம் வீட்டில் வைத்திருப்பதில்லை. சாப்பாடு போடுவதிலும் இல்லை. ஆனா சொன்னா சொன்ன நேரத்திற்கு கிளம்பிடணும். அது இந்த விஷயத்தில் இல்லை. எனவே,தான் நொந்து போயிட்டேன்.

அமுதா கிருஷ்ணா said...

சேக்காளி ஒரு ”வாரத்திற்கு” மட்டும் தானே..நோ ப்ராப்ளம்..எழுதி வாங்கிடுவேன். இப்ப உஷாராகிட்டேன்.

வருண் said...

எனக்குத் தெரிய ரெண்டு வகையான மக்கள் இருக்காங்க..

நண்பர்கள் தரம் தெரியாமல் பாவம்னு உதவி செய்து மாட்டிக்கிட்டு கடைசியில் கெட்ட பெயரையும் வாங்கிக்கிட்டு இருக்கும் உங்களை மாதிரி அப்பாவிகள்.

இதயமோ, இரக்கமோ இல்லாமல் உரிமையுடன் மற்றவர்கள் நிம்மதியைப் பறித்து எந்தவித நன்றி உணர்வும் இல்லாமல் தான் நிம்மதியாக வாழும் சிலதுகள்.

இது காலங்காலமாக நடந்துகொண்டு இருக்கு. :)

பிச்சைக்காரன்கூட நம்ம அவன் எதிர்பார்க்கும் பிச்சை போடலைனா நம்மள மட்டமாத்தான் பார்ப்பான்? நம் தரம் அவனுக்கெப்படித் தெரியும்?

இனிமேலாவது நீங்க திருந்தினால் சரி. திருந்துவீங்களா, அமுதா? :))))

செங்கோவி said...

உங்களுக்கு ரொம்பத் தான் பொறுமை!

இராஜராஜேஸ்வரி said...

உங்க பிரண்ட் நல்லவரா கெட்டவரா?/

Avargal Unmaigal said...

நான் சொன்ன வாக்கை காப்பாற்றுகிறவன் அதனால நான் சொன்ன தேதி மட்டும் உங்க வீட்டுல இருப்பேன் அதுக்கு மேல ஒரு நாள் கூட இருக்கமாட்டேன் அப்பிடி இருந்து நீங்களே என்னை தூக்கி போட்டுடலாம் ஆமாம் எத்தனை நாளு என்று கேட்கிறீங்களா கொஞ்ச நாள் மட்டும்தான் அதாவது நான் உங்க வீட்டுக்கு வந்ததிலிருந்து நான் சாகப் போற நாள் மட்டும்தானுங்க ) ஹலோ என்னங்க எங்க ஒடுறீங்க கொஞ்சம் நில்லுங்க

அமுதா கிருஷ்ணா said...

வருண் இனிமே மாறிதான் ஆகணும்.பட்டது போதும்னு தோணிடுச்சு.

அமுதா கிருஷ்ணா said...

செங்கோவி சில நேரண்ட்களில் சகிப்பு தன்மை அதிகமா வேண்டி இருக்கே..

அமுதா கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
அமுதா கிருஷ்ணா said...

என் ஃப்ரெண்ட்டுண்ணு சொன்னவர் காரியவாதி, தன் அம்மாவையும் தன் சுற்றத்தாரையும் ஏமாற்றி கொண்டிருப்பவர்.. இராஜராஜேஸ்வரி..

அமுதா கிருஷ்ணா said...

Avargal Unmaigal..ஒரு முடிவோடு தான் இருப்பீங்க போல..Me pavam sir..

துபாய் ராஜா said...

நீங்கள்ல்லாம் இருக்கப்போய் தான் இன்னும் லோகத்துல மழைய் பேஞ்சிண்டுருக்கு... பொதுவாக நம்மளை மாதிரி நிறைய திருநெல்வேலிக்காரங்களுக்கு எப்பவுமே பொறுமையும், சகிப்புத்தன்மையும் , சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கிறதும் அதிகம்தான்...

arputharaju.blogspot.com said...

கட்டுரை பற்றி:

ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு...
30 நாட்கள் படாதபாடுதான் பட்டு இருக்கிறீர்கள்...
உங்களை விட நல்ல மனசு உங்க கணவர், மகன்கள் மற்றும் அம்மாவுக்கு...
உங்களை ஒன்றுமே சொல்லவில்லையே...
அது ஏன் கடைசி para -வுக்கு தலைப்பு “கொசுவர்த்தி”?

எழுத்து பற்றி:

அழகாக எழுதுகிறீர்கள்... நடை இயல்பாக உள்ளது...
இடையிடையே நச் கமெண்டுகள்...
உங்களது எல்லா post -ஐயும் படிக்க வேண்டும்.
நிறைய எழுதுங்கள்.

அமுதா கிருஷ்ணா said...

துபாய் ராஜா கருத்துக்கு நன்றி.திநெவேலிக்காரங்க???அதிசயம் தான். எங்க வீட்டுக்காரர் திண்டுக்கல்.எனக்கு திருநெல்வேலி.என்னை பொறுத்த வரை நெல்லை மக்கள் மிகுந்த சிக்கனவாசிகள்.இப்படியெல்லாம் இளிச்சவாய்ஸ் இல்லை.

அமுதா கிருஷ்ணா said...

Arputharaj Krishnamurthi

பழசை நினைத்து எழுதியதால் கொசுவர்த்தின்னு தலைப்பு!!! ஒரு மாதம் ரொம்ப பாடு எல்லாம் இல்லை..ஏமாந்த மாதிரி ஒரு ஃபீலிங்..

anitha shiva said...






இந்த காலத்திலும் உங்களைப் போன்று உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் இருக்கத்தான செய்கிறார்கள்.
நீங்கள் தான் பாவம் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி விட்டீர்கள். இனிமேல் உஷாராக இருங்கள் சகோதரி.