Tuesday, October 01, 2013

நான் படிச்சா


நான் 7 ஆப்பு படிச்ச போது தங்கை அதே பள்ளியில் ஐந்தாப்பூ படிச்சுட்டு இருந்தா.அந்த வருடம் தான் அந்த பள்ளியில் புதுசா நாங்க சேர்ந்து இருந்தோம். அங்கு கட்டாயம் மாரல் வகுப்பில் Bible படிக்க வேண்டும்.அதில் டெஸ்ட் வைச்சு மார்க்கையும் ரேங்கிற்கு சேர்ப்பார்கள்.எனவே, ஒரே படிப்ஸ்ஸான என் தங்கை அதையும் வீட்டில் விழுந்து விழுந்து படிப்பாள்.நானோ மற்ற பாடத்தையே படிக்க மாட்டேன். இதில் நல்ல போதனைகளையா படிக்க போகிறேன். இது என்னடா தேவையில்லாமல் இதில் டெஸ்ட் அது இதுன்னு. கிறிஸ்டியன்ஸ் பொண்ணுங்க நம்மை விட ரேங்கில் முந்திடுவாங்களேன்னு ஒரே குழப்பம்ஸ்.இல்லைன்னா மட்டும் முதல் ரேங்க் எடுத்துட்டு தான் மறுவேலை. தங்கை படிச்சதிலிருந்து  அடிக்கடி என்னை சாத்தான் என்று திட்ட ஆரம்பித்து இருந்தாள்.இரண்டு மூன்று கதைகளும் ஸ்கூல் போகும் போது எனக்கு சொன்னாள்.

எனவே,ஒரு நல்ல மாலையில் மார்ல் நோட்டை எடுத்து  படிக்க ஆரம்பித்தேன்.திடீரென்று என்னை புத்தக மூட்டையுடன் பார்த்த என் நைனாவிற்கு செம சந்தோஷம்.ஆஹா மூத்த புள்ளையும் படிக்க ஆரம்பிடுச்சே வாத்தியார் பிள்ளை மக்கில்லை என்ற புதுமொழி வந்துடுச்சேன்னு.

நானும் நைனாவின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்ததும் சத்தமாக படிக்க ஆரம்பித்தேன். என் நைனா முகம் கொஞ்சமாக மாற துவங்கியது. இரு இரு என்ன படிக்கிறே நீ என்று சொல்லி கொண்டே நோட்டை வாங்கி பார்த்தார். சரி இது படிச்சது போதும் வேறு பாடம் படின்னு சொல்லிட்டே அந்த நோட்டை அவரே வைச்சுக்கிட்டார்.

சில நாட்கள் கழித்து இந்து குழந்தைகள் மாரல் க்ளாசில் நோட்டில் எதுவும் எழுத வேண்டாம்.க்ளாசிலிருந்து வெளியில் போய் உட்கார்ந்து கொள்ளலாம் என்றும் ப்ரேயரில் ஹெட்மிஸ்டர் அறிக்கை வாசித்தார். இனிமேல் அந்த பாடத்தின் மார்க் ரேங்கிற்கு கிடையாது என்றும் சொன்னார்.

என் நைனா அப்போதைய முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் செகரட்டரி. நைனா பள்ளிக்கு வந்தாலே நிறைய ஆசிரியைகள் நைனாவை சுத்தி நின்னுட்டு ஏதோ பேசிட்டே இருப்பார்கள். பள்ளியில் இப்படி Bible படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவது தவறு என்று கூறவும் பள்ளி கல்வி இயக்குனரிடம் சொன்னால் அது பிரச்சனை உண்டாக்கும் என்பதாலும் பள்ளி உடனடியாக எங்களை படிக்க வேண்டாம்னு சொல்லிடுச்சு. இது அம்மா பிறகு எங்களிடம் கூறினார்கள்.

பாருங்களேன் ஒரு நாள் தான் படிச்சேன். அதான் தினம் மற்ற எந்த பாடத்தையும் படிச்சதே இல்லை.
8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது...

”தளிர் சுரேஷ்” said...

சில பள்ளிகளில் சில கட்டாயமாக்கபட்டு திணிக்கப்படுவது உண்மைதான்! இதற்கு இந்துப் பள்ளிகளும் விலக்கல்ல!

ஹுஸைனம்மா said...

நானும் கிறிஸ்தவப் பள்ளிகளில்தான் படிச்சேன். அப்பல்லாம் இப்படி இல்லையே? என்ன, அடிக்கடி அசெம்ப்ளியில் யராவது போதகர்கள் வந்து மணிக்கணக்கில் பேசும்போது கேட்டே ஆகணும். அதுவும் கதைகள் நிறைய உண்டு என்பதால் ரொம்பப் போரடிக்காது.

ஹுஸைனம்மா said...

ஹைகிரவுண்ட காந்திமதி அம்பாள் பள்ளியில் படித்தப்போவும் தினமும் மஹாபாரதக் கதைகள் கேட்டுட்டுத்தான் வீட்டுக்குப் போகணும்னு கட்டாயப்படுத்தினாங்க. வேற வழி... அப்பல்லாம் இப்படி ரூல்ஸ் பேசத்தெரியாத அப்பாவி என்பதால் சொன்னதைக் கேட்கும் நல்லபிள்ளையாயிருந்துட்டேன். :-)))))

வெங்கட் நாகராஜ் said...

அட.....

கலியபெருமாள் புதுச்சேரி said...

என்ன கொடுமை சார் இது..

Unknown said...

அன்றைய பள்ளிகளில் இப்படி தவறு என்று சொன்னால் திருதிகொண்டனர், இன்றைய பள்ளிகளில் உங்களை முடிந்ததை பாருங்கள் என்று சொல்கின்றனர்.

ஹுஸைனம்மா said...

நேற்று உறவினர் மகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னாள், நாகர்கோவிலில் ஒரு இந்து பள்ளியில் படிக்கும் அவள் தலையில் ஸ்கார்ஃப் கட்டுவதை ஆசிரியர்கள் அனைவரும் எதிர்த்துள்ளனர். அதிலும் ஒருவர் மிகக் கடுமையாக மிரட்டியுள்ளார். பயந்துபோய் இருக்கிறாள். :-(