Thursday, August 01, 2013

சென்னையில் பூரி ஜெகனாதர்

 நான்  நகுலிடம் நாளைக்கு காலை சீக்கிரமாய் எழுந்து ஈ.சி.ஆரில் இருக்கும் கோயில்களில் இரண்டு கோயில்கள் போய் வந்திடலாம் என்று சொல்லிட்டு படுத்தேன். காலையில் 6 மணியிலிருந்து 8 மணி வரை இங்கே செம மழை. ஆஹா வேண்டாம் மாட்டேன் என்று எல்லாம் சொல்லாமல் நகுல் கோயிலுக்கு உடனே சரி என்று சொன்னதால் தான் இந்த மழை என்று எங்க ப்ளானை மாலைக்கு ஒத்தி போட்டோம். எங்க வீட்டிலிருந்து 40 ஆவது நிமிஷத்தில ஜெகன்னாதர் கோயிலில் இருந்தோம். ஈ.சி.ஆர் டோல் கேட் தாண்டி மாயாஜாலிற்கு முன்னாடியே கானாத்தூர் என்ற ஊரில் லெஃப்டில் திரும்பி (மீன் மார்கெட்)நேராக போய் கடைசி ரைட்டில் திரும்பினால் அந்த ரோடின் கடைசியில் இந்த கோயில். மிக அமைதி.நோ கூட்டம். மாலை வெயில் இல்லாமல் அருமையான க்ளைமேட். 
புல்வெளி அருமையாக இருக்கிறது. சுற்று புறம் சின்ன இடமாக உள்ளது. பூரி கோயில் மிக பெரியது. அப்படியே பூரியில் உள்ளதை போல சிலை நடுவில் சுபத்ரா,பலராமன்,கிருஷ்ணர் என அம்சமாய் இருந்தனர்.



அப்புறம் அப்படியே வரும் போது அக்கரை இஸ்கான் கோயிலிற்கு போய் வந்தோம். இந்த கோயில் சோழிங்க நல்லூரிலிருந்து ஈ.சி.ஆர் ஜாயின் ஆனதும் லெஃப்டில் திரும்பி நேரா போய் கொண்டே இருந்தால் ஒரிரு கிலோமீட்டரில் லெஃப்டில் அக்கோயில் ஆர்ச் இருக்கும் இடத்தில் திரும்பி அவர்கள் வழி முழுக்க வைத்திருக்கும் தகவல் பலகையினை பார்த்து கொண்டே போக வேண்டியது தான். இங்கே கூட்டம் இருந்தது. முதல் கோயிலில் கிடைக்காத பூரி இங்கே கிடைத்தது. வெளியில் பூரி,சமோசா,கேசரி, சுண்டல் என்று விற்று கொண்டு இருந்தார்கள். சனி,ஞாயிறில் கூட்டம் அதிகம் வருமாம்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... நன்றி...

முக்கிய அறிவிப்பு : சென்னை பதிவர் சந்திப்பு 2013← இணைப்பை சொடுக்கி வாசிக்கவும்... அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

தொடர்புக்கு : dindiguldhanabalan@yahoo.com
+91 9944345233

Avargal Unmaigal said...

என்னங்க பூரி என்ற தலைப்பை பார்த்து ஒடோடி வந்தேன் கடைசியில கோயில் படம் காண்பிச்சு ஏமாத்திட்டிங்களே

இராய செல்லப்பா said...

நானும் பார்க்க வேண்டும் இந்தக் கோவிலை. தகவலுக்கு நன்றி. வேறு என்னென்ன கோவில்கள் ஈ.சி.ஆரில் உள்ளன என்றும் எழுதியிருக்கலாம். மற்றபடி, ‘பூரி’ ஜகன்னாதர் கோவிலில் பூரி கிடைப்பது என்ன ஆச்சரியம்?

அமுதா கிருஷ்ணா said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்....

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி சங்கவி..

Avargal Unmaigal..பூரி தானே..பூரி கட்டை இல்லையே..

செல்லப்பா யோகஸ்வாமி..நன்றி

வெங்கட் நாகராஜ் said...

தகவலுக்கு நன்றி.