கெளசல்யா அம்மாவிற்கு மூன்று மகன்கள் ஒரு மகள்.மூத்தவன் ராமகிருஷ்ணன்,பரத்,ராகவன்.ராகவன் 6 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்.மாலை டியூஷன் செல்ல பையை எடுத்து தோளில் மாட்டியவன் முதுகில் ஏதோ கடிக்கிறது வலி என்று சொல்லி கொண்டே பொத்தெனெ கீழே விழவும் பையை எடுத்து உதறினால் அதில் ஒரு கருந்தேள் இருந்ததாம்.முதுகில் தேள் கொட்டியதால் அடுத்த 10 நிமிடத்தில் இறந்து விட்டான்.
அடுத்த 5 வருடங்களில் பரத்திற்கு(2ஆவது மகன்) முகம்,கை காலெல்லாம் வீக்கம் வரவும் டாக்டர் போய் பார்த்தால் பரத்திற்கு கிட்னி ஃபெயிலியர் என்று சொல்லி விட்டார்கள். பரத்தின் அப்பாவே ஒரு கிட்னி கொடுத்து அதன் பிறகு 4 வருடங்கள் உயிருடன் இருந்தான். திடீரென்று ஒரு நாள் அவனும் இறந்து விட்டான்.
மூத்தவன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்காக தன் படிப்பை பாலிடெக்னிக்கோடு நிறுத்தி விட்டு சிங்கப்பூரில் அப்போது கிடைத்த சம்பளத்தில் தன் பெற்றோரையும் தங்கையையும் காப்பாற்றி தன் தங்கைக்கு மிக நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தன்னை காதலித்த அத்தை பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன் சொந்த ஊரிலேயே குடித்தனம் ஆரம்பித்தான்.
இப்போ விதி திரும்பவும் தன் கோர முகத்தை காண்பித்தது. திடீரென்று வயிற்றில் தாள முடியாத வலி வரவும் லோக்கலில் டாக்டரிடம் காண்பிக்க அவர் சென்னை ஸ்பெஷலிஸ்ட்டிடம் அனுப்பி வைத்தார். சென்னை வந்து ஒரே வாரம் குடல் கேன்சர் முற்றியதாய் சொல்லி ட்ரீட்மெண்ட்டில் இருந்த போதே தன் 33 ஆவது வயதில் தன் மனைவி,2 வயது பெண் குழந்தையையும் விட்டுட்டு இறந்து விட்டான்.
ராமகிருஷ்ணன் என் கடைசி மாமாவின் க்ளோஸ் ஃப்ரெண்ட். எங்கள் வீட்டிற்கு வந்து எங்கள் வீட்டு குழந்தைகளை அப்படி கொஞ்சி போவான். அவனுக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். நாங்கள் குடும்பத்துடன் போகும் அனைத்து டூர்களுக்கும் எங்களுடன் வருவான். எங்கள் குடும்பத்தில் ஒருத்தனாகவே இருந்தான்.
மூன்று மகன்கள் பெத்து அந்த மூவரும் இப்படி இறந்துவிட யார் தேற்றுவது அந்த பெற்றோரை. அவனின் பெற்றோர் கிராமத்தில் செட்டில் ஆனதாய் கேள்வி பட்டேன். இந்த குடும்பத்தை மீட் செய்து 10 வருடங்கள் ஆயிற்று.ஊருக்கு போகும் போது விசாரித்து கொள்வேன். நேரில் அவர்களையும், அவன் மனைவியையும்(அவள் பெற்றோர் வீட்டில்) போய் பார்க்கும் மன நிலை இல்லை. அவர்கள் மறந்து கொண்டிருக்கும் நினைவுகளை நான் போய் கிளறி விட கூடாது என்பதால் போய் பார்க்க மிக ஆசைப்பட்டாலும் போறதேயில்லை.
இந்த விதியை மதியால் வெல்ல முடியுமா என்ன?????????

13 comments:
இந்த விதிக்கு என்னவென்று சொல்வதே தெரியவில்லை...
இப்படி சில விதிகள் இருக்கத்தான் செய்கின்றன! ஆண்டவன் விளையாட்டை எளிதில் புரிந்துகொள்ள முடியாது! நன்றி!
கதையாகத்தான் இருக்கும், இருக்கணும்னே வேண்டிகிட்டுப் படிச்சிகிட்டிருந்தேன்; எதிர்பார்த்ததுபோலவே நிஜம்!! :-(( என்ன சொல்லி தேற்ற அவங்களை. மருமகளை உடன் வைத்திருந்தால் பேரக்குழந்தையாவது ஆறுதல் தருமே.
எல்லாத்தையும்விட, முதுகில் தேள் கடித்தால் மரணம் என்பது கொடுமையாருக்கு. அப்படியா? விஷ முறிவு ஊசி போட்டா சரியாகிடாதாமா? :-(((
அவங்க ரொம்பப்பாவம்..
எல்லாம் விதிப்பயன்ன்னு சொல்லி வருத்தப்படத்தான் முடியும்.
ஆமாம் சங்கவி ராமகிருஷ்ணன் என்ற பெயரை கேட்கும் போதெல்லாம் எனக்கு நினைவிற்கு வருவது இவனே.
ஆமாம் சுரேஷ் ஆண்டவன் இருக்கிறானா என்று சில சமயங்களில் தோன்றும்..
முதுகில் தேள் கடித்தால் உடனே மூளைக்கு விஷம் போயிருக்கும் என்று நினைக்கிறேன் ஹூஸைனம்மா.கடி பட்ட இடத்தை இறுக்கி கட்டியிருக்க முடியாது என்றும் நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்,ராஜி
அந்த பெண் மறுமணம் செய்திருக்க வேண்டும் என்பது என் ஆசை ஹூஸைனம்மா..
அடடா படிக்கவே கஷ்டமா இருக்கு.... அவர்களின் நிலை எப்படியிருக்கும்....
கொடுமை.
ரொம்பவே பாவம்...:((
Post a Comment