Tuesday, July 02, 2013

Faber --- வேஸ்ட் of money

வீடு கட்டும் போது அவசர அவசரமா Built-In-Hob வாங்கி அதை கிச்சன் மேடை போடும் போதே மேடையில் புதைக்க வேண்டுமே என்று ஒரு நாள் கொட்டும் மழையில் தி.நகர் போய் வாங்கி வந்து மேடையில் க்ரானைட்டினை கட் செய்து வைத்தோம். இப்ப அந்த ஸ்டவ்வையே புதைத்து விடலாமா என்று யோசித்து கொண்டு இருக்கேன்.

பார்க்க பார்க்க அழகாய் இருந்துச்சு.இப்ப பார்க்க பார்க்க அழுகையா இருக்கு.

வாரம் ஒரு முறை உளுந்து வடை,பசங்களுக்கு வாரம் இரண்டு முறை பூரி செய்து கொண்டிருந்த நான் இப்ப இது இரண்டையும் செய்யவே மறந்துட்டேன். ஏன்னா எண்ணெய் கொதிக்கவே கொதிக்காது. நான் தான் குதித்து கொண்டு இருப்பேன். இரண்டு பூரி சுட அவ்ளோ நேரம் ஆகும்.தேய்த்து நேரம் ஆவதால் பூரியும் எண்ணெய் குடிச்சுடும்.

சர்வீஸிற்கு வரும் பையன் சும்மா கழட்டி துடைத்து திரும்ப மாற்றி தருவான். அதை இப்ப நானே செய்து கொள்கிறேன்.

வாங்கி இன்னும் இரண்டு வருடம் கூட முடியவில்லை என்பதாலும்,கிரானைட் கட் செய்த இடத்தினை திரும்ப மூடி அந்த இடத்தில் சாதாரண ஸ்டவ் வைக்கணுமே என்றும் இது நாள் வரையில் இந்த Faber-டன் மல்லுக்கட்டி கொண்டு இருக்கேன். மூன்று பர்னரையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தவே முடியாது. ஒன்னுல செய்தாலே விளங்காது.

சமையல் வேலை முடிக்கவே முன்பை விட ஒரு மணிநேரம் அதிகம் ஆகிறது.

இப்ப தோசை சுட கூட முடியலை.நிலைமை ரொம்ப மோசம் ஆனதால் தூக்கி அவுங்க முகத்தில் எறிந்துட்டு (குப்பை தொட்டி) புதுசா ஒரு கேஸ் ஸ்டவ் வாங்கிவிட முடிவு செய்துட்டேன்.
                                 Faber Gas Hob (Model: GB 30 MT,Black Glass) Price:Rs. 9491


பாருங்க பார்க்க எவ்ளோ அழகா இருக்கு.

ஆனா,அனலே பத்தாது.எதுக்கு தான் இதை வாங்கினேனோ என்று தெரியாமல் ஞேன்னு முழிச்சுட்டு இருக்கேன்.தூக்கி போடு தூக்கி போடு என்று கணவரும் பசங்களும் சொல்லி சொல்லி அலுத்து போனார்கள்.இப்ப தூக்கி போட ஒத்து கொண்டதும் அடுத்து என்ன வாங்குவது என ஒரே குழப்பம்ஸ்.

ஒழுங்கு மரியாதையா இந்தியன் மேட்,சமைக்கிற லட்சணத்திற்கு இரண்டு பர்னர் இருக்கிறதா வாங்கினா போதும் என்று முடிவிற்கு வந்தாச்சு. வந்து படிச்சதுக்கு நல்லதா ஒரு ஸ்டவ் சொல்லிட்டு போங்க.இனிமேயாவது வடை,பூரி சுடணும்.

18 comments:

sathishsangkavi.blogspot.com said...

ரெகுலர் ஸ்டவ் வாங்கிக்குங்க... அப்பதான் சர்வீஸ்க்கு ஆள் கிடைக்கும்.. புதுசு புதுசா வாங்குனா அப்புறம் அடுத்த 2 வருசத்தில் அதையும் மாத்த வேண்டி இருக்கும்....

Avargal Unmaigal said...

நாம கேஸ் ஸ்டவ் வாங்கும் போது ஒவ்வொறு ப்ர்னரின் BTU என்ன என்று பார்த்து வாங்க வேண்டும். நிச்சயம் நீங்கள் உபயோகிக்கும் ஸ்டவின் btu 5000 ஆக இருக்கும் அதனால்தான் அதிக நேரம் எடுக்கிறது. குறைந்த பட்சம் 10,000 BTU வாவது இருக்க வேண்டும். நான் உபயோகிக்கும் ஸ்டவில் 5 பர்னர் அதில் ஒன்று 18,000 மற்ற இரண்டு 12 000 மிடில் ஒன்று 10,000 கார்னர் ஒன்று 5,000 இந்த 5,000 நை சிம்மர் என்ரு சொல்லுவோம் இது மிக ஸ்லோ குக்க்குங்கு உபயோகப்படுத்து வோம். இந்த 18,000 பரனர் சமைப்பதற்கு மிக உபயோகம் தோசை இதில் சுடும் போது கண்ணசைந்தால் கருகி போய்விடும்

A Btu is defined as amount of heat required to raise the temperature of 1 pound (0.454 kg) of liquid water by 1 °F (0.56 °C) at a constant pressure of one atmosphere.The British thermal unit (symbol Btu or sometimes BTU) is a traditional unit of energy equal to about 1055 joules. It is the amount of energy needed to heat one pound of water by one degree Fahrenheit.

அதனால் அடுத்த ஸ்டவ் வாங்கும் போது இந்த BTU வ் அளவு என்ன என்பதை தெரிந்து வாங்குங்கள் அதன் பின் பிரச்சனைகள் இருக்காது

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம்.ரெகுலர் ஸ்டவ் தான் நம் இந்திய முறை சமையலுக்கு ஏற்றது என்ற முடிவிற்கு வந்தாச்சு சங்கவி....

அமுதா கிருஷ்ணா said...

நன்றி அவர்கள் உண்மைகள் BTU பற்றி தெரிந்து கொண்டேன். அதன்படி விசாரித்து வாங்கணும்.அழகா இருக்குன்னு வாங்கினா இப்படிதான்.

சாந்தி மாரியப்பன் said...

ரெகுலர்தாங்க நமக்கு சரிப்படும். அதுவும் கண்ணாடி பதிச்சது வாங்காதீங்க. அந்த மாடல் ஃபெயிலியர் ஆகுதாம். தண்ணீர் படறப்ப கண்ணாடி விரிசல் விடுதுன்னு விற்பனையாளரே சொன்னார். எவர்சில்வர் பாடிதான் பெஸ்ட்டு. எங்கூட்ல சன்ஃப்ளேம் நாலுபர்னர் கொண்டது வாங்கினோம். ஜூப்பராயிருக்கு. இதுலயும் மூணு அளவுகள் இருக்கு. எல்லாத்துலயும் பெரிசை வாங்கினீங்கன்னா கடாயும் தவாவும் பக்கத்துப்பக்கத்து பர்னர்ல வெச்சாக்கூட இடிக்காது. மற்ற அளவுகள்ல ஒண்ணு வெச்சா இன்னொண்ணை வைக்க முடியாது.. இடிக்கும்.

ஹுஸைனம்மா said...

ம்ம்ம்.. பயனுள்ள விஷயம் தெரிஞ்சுகிட்டேன். இந்த ஹாப் வகை அடுப்பு பார்க்க அழகா இருக்கேன்னு நினைப்பேன். ஆனா ரொம்ப குனியணும்னு வாங்கினதில்லை. நல்லதாப் போச்சு.

கோவை நேரம் said...

கிச்சனை அழகு படுத்துதே அப்படின்னு வாங்கினா ரொம்ப கஷ்டம தான் போல...

ராஜி said...

எங்க ஓரகத்தி வீட்டுல இருக்குதுன்னு என் வீட்டுக்காரரை கேட்டு நச்சரிக்குறேனே! அப்போ வாங்க வேணாம்ன்னு சொல்லுறீங்களா?!

ப.கந்தசாமி said...

தப்பு உங்க பேர்ல வச்சுட்டு கம்பெனிக்காரன அநியாயமா குறை சொல்லக்கூடாது. கிச்சன் அழகுக்காக மட்டுமே. வர்ரவங்களுக்கு ஷோ காட்டறதுக்கு. சமையல் செய்ய பின்னால தனியா சின்னதா ஒரு கிச்சன் கட்டிக்க வேணும்கிறது ஏன் தெரியல உங்களுக்கு?

வெங்கட் நாகராஜ் said...

நமக்கெல்லாம் இந்தியாவின் ரெகுலர் அடுப்பு தான் ஒத்து வரும்!

எங்க வீட்டுலயும் மூணு பர்னர் கொண்ட சன்ஃப்ளேம் அடுப்பு தான். ஒரு பிரச்சனையும் இல்ல....

Unknown said...

ஓல்ட் இஸ் கோல்ட்

அமுதா கிருஷ்ணா said...

அமைதி சாரல் ஜூப்பராய் இருக்கும் சன்ஃப்ளேம் மாடல் நம்பர் சொல்லுங்கப்பா..

அமுதா கிருஷ்ணா said...

ஹூஸைனம்மா என் உயரத்திற்கு சரியா மேடை கட்டி அதிலே புதைச்சது இந்த ஹாப் இப்ப காலை வாரிடுச்சு.

அமுதா கிருஷ்ணா said...

ராஜி அவர்கள் உண்மைகள் சொல்ற மாதிரி BTU பார்த்து கேட்டு வாங்கினா நல்லதா கிடைக்கும்.நம் இந்தியன் கேஸ் அடுப்புகளிலெயே இந்த ஹாப் வகை கிடைக்குது.

அமுதா கிருஷ்ணா said...

பழனி.கந்தசாமி சார் பட்டாதானே புத்தி வருது.

அமுதா கிருஷ்ணா said...

வெங்கட் நாகராஜ்,சக்கரகட்டி வருகைக்கு நன்றி.

ADHI VENKAT said...

இந்திய மாடல் தான் எப்பவுமே பெஸ்ட். எவர்சில்வர் தான் தேய்த்து சுத்தப்படுத்துவதற்கு வசதி.

சாந்தி மாரியப்பன் said...

sunflame 4 burner gas stove is 4246

Spectra plus

நாலு பர்னர்களுக்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கறதால் தவா, தோசைக்கல், குக்கர், வாணலி இப்படி பெரிய பாத்திரங்கள் எதுவானாலும் அருகருகே உள்ள பர்னர்கள்ல வைக்கலாம். கொடுத்திருக்கும் மாடல் நம்பரை கூகுளிச்சுப் பார்த்துக்கோங்க. இதை விட சின்ன அளவுகள் பிரயோசனப்படலை.