Thursday, June 20, 2013

ஸ்ரீலங்கா

சின்னவன் ரிஷி டிகிரி முடித்து மே மாதம் வேலை தேடி தேடி களைத்து போய் எங்காச்சும் வெளிநாட்டிற்கு ஒரு டூர் போகணும் வேலைக்கு போய்ட்டா எனக்கு ரொம்ப லீவெல்லாம் கிடைக்காது என்று என்னை நொய் நொய் என்றான். சரி பையன் எங்காச்சும் போய் வந்தால் அப்புறமா தீயாய் வேலை செய்வானே என்றால் பட்ஜெட் செம டைட். எனவே இருக்கும் பட்ஜெட்டில் எங்கே செல்லலாம் என்று யோசித்து சிலோன் போலாம் என்று முடிவு செய்தோம்.

கண்டி-மாத்தளை-ரத்தோட்டா மலை மேல் இருக்கும் ஃப்ரெண்டின் டீ எஸ்டேட்டில் இந்த வீட்டில் 6 நாட்கள்
கனடாவில் இருக்கும் லோகா அம்மாவின் கொழும்பு-வெள்ளவத்தை இந்த வீட்டில் 5 நாட்கள்
 டேரா போடலாம் என்று முடிவு செய்து இரண்டு பேரும் ஜூன் 3-ல் விடு ஜூட். 

எவ்வளவு பிரச்சனைகள் போர்,சுனாமி என்று ஆனா எங்கு போனாலும் ஒரு பிட் பேப்பர். குப்பை என்று கண்ணில் படவே இல்லை. இந்த விஷயத்தில் நிஜமாகவே பொறாமையாக இருந்துச்சு. பளிச் ரோடுகள்.



மட்டகளப்பு பீச்சில் கடலில் அலையே இல்லாமல் இப்படி ஒரு அமைதி.குளிக்க சூப்பரான இடம். 


பொலனருவாவில் பழைய நகரத்தை வெளிநாட்டவரிடம் அதிகமான நுழைவு சீட்டிற்கு பணம் வாங்குவதால் அழகாய் பராமரிக்கிறார்கள் போல்.



பண்டாரவெளையில் ரோட்டின் நடுவில் பெரிய ரோஜாக்கள் பூத்து குலுங்குகின்றன.மாடுகளோ, மனிதர்களோ அதை டிஸ்டர்ப் செய்றது இல்லை. 

சீதையை ராவணன் வைத்திருந்த இடம் ராவணஎல்லை

நுவரேலியா போறப்ப சூப்பரா வானம் தூவனமாய் எங்களை வா வா என்று இப்படி வரவேற்றது.

பொட்டானிக்கல் கார்டன் ஒரு மலை அடிவாரத்தில் 

பண்டாரவளையிலிருந்து நுவரேலியா போற வர வழி எல்லாம் இப்படி

கொழும்பு வெள்ளவத்தையில் தங்கி இருந்த வீட்டிற்கு பக்கத்தில் ரயில்வே ஸ்டேஷன்,ரயில்வே லைனுக்கு பக்கத்தில் கடல்

டீ ஏஸ்டேட்டில் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு பின்னால் அவர்கள் இடத்திலேயே குட்டியாய் ஒரு அருவி
                          அருவியை தாண்டி இன்னும் போனால் இந்த இடம்

பிடிவாதம் செய்து என்னை கூட்டி போன ரிஷிக்கு தான் நன்றி சொல்லணும்.இங்கேயிருக்கும் படங்கள் எல்லாம் அவன் எடுத்தது. மிக விரைவில் அடுத்தும் போகணும் என்று முடிவோடு திரும்பினேன்.




6 comments:

இராஜராஜேஸ்வரி said...

பண்டாரவெளையில் ரோட்டின் நடுவில் பெரிய ரோஜாக்கள் பூத்து குலுங்குகின்றன.மாடுகளோ, மனிதர்களோ அதை டிஸ்டர்ப் செய்றது இல்லை

அழகான காட்சிகள் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

pudugaithendral said...

என்ன ஒரே பதிவுல இலங்கை பயணத்தை முடிச்சிட்டீங்க???

20 பதிவாவது தேருமே!!! சொர்க்க பூமிக்கு போயிட்டு வந்திருக்கீங்க. சந்தோஷம்.

சாந்தி மாரியப்பன் said...

அழகாயிருக்கு..

அதானே.. நல்லாக்கேளுங்க தென்றல் :-))

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி..

அமுதா கிருஷ்ணா said...

20
பதிவாஆஆஆஆஆஆஆஆஆஆ...இப்ப எல்லாம் ஒரு பதிவை தேற்றுவதே பெரும்பாடா இருக்கு புதுகைத் தென்றல்..

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்.