Thursday, February 14, 2013

பேன் எடுக்க - பொறுக்கிகள்

கெமிக்கல் இல்லை,மெஷின் இல்லை,ஷாம்பூ இல்லை,இயற்கையான முறையில் வெறும் கையினை மட்டுமே பயன்படுத்துவோம். 2 வயதிலிருந்ந்து 92 வயது வரை உள்ளவர்களுக்கு இது வரை 5000 த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சேவை செய்து உள்ளோம்.இத்தொழிலில் கைதேர்ந்தவர்கள் மட்டுமே உங்கள் வீட்டிற்கே வருவார்கள்.

ஒரு மணிநேரத்திற்கு 200$ + ட்ராவலிற்கான பணமும் வசூலிக்கப்படும்.
2001-லிருந்து சேவை செய்து கொண்டிருக்கிறோம்.
95% - 100% ரிசல்ட் இருக்கும்.
தூரமாய் இருப்பவர்களுக்கு ஃபோனிலும் கன்சல்டேஷன் உண்டு.
$2 ஒரு நிமிஷத்திற்கு வசூலிக்கப்படும்.
இரண்டு மணிநேர செமினாருக்கு $300 வசூலிக்கப்படும்.
பள்ளிகளுக்கு சம்மர் கேம்ப்,போர்டிங் விசிட்,கல்லூரி விசிட் செய்யப்படும்.
அட பாவிகளா...என்னத்த சொல்றது.
இதுக்கு கூடவா காசு  Nit-Picker செண்டரை நடத்துபவர் Helen Hadley.அம்மணி சூப்பரா யோசித்து இருக்காங்க.

8 comments:

Anonymous said...

சங்கீத அகடாமிக்கு போய் சூடா போண்டா சாப்பிட்டது போல இருக்கு. விதார்த்த நிலை மனிதர்கள் எதையும் வெற்பிளம்பாய் தகிதமெண்டு தொழிலாக மாற்றிடுவர். செய்குத தறிவாம் செம்மை சேர் ஒருவாக்கின் கைத்தளம் என்பார் இதை காக்கைப்பாடினியார்

ADHI VENKAT said...

பேன் எடுக்கும் நிபுணரா!!!! எப்படியெல்லாம் போய்க்கிட்டு இருக்குது....:))

செங்கோவி said...

அட கர்மம் பிடிச்சவங்களா..இதுக்குப் பதிலா 2 டால்ர் கொடுத்து மொட்டை அடிச்சிக்கலாமேய்யா!

செங்கோவி said...

//Your comment has been saved and will be visible after blog owner approval. //

பேன் எடுக்கிறதைக்கூட எவ்ளோ ஜாக்ரதையாப் பண்ண வேண்டியிருக்கு...!!!

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் பேன் எடுக்க நிபுணர் தான்..கோவை2தில்லி.

அமுதா கிருஷ்ணா said...

2 டாலரில் மொட்டை சூப்பர் ஐடியா செங்கோவி..
ஜாக்ரதையா பேன் எடுங்க..ஹ..ஹா..ஹா

Unknown said...

அப்போ எங்க பாட்டி எல்லாம் என்னைய விட அதிகமா சம்பாதிபாங்க போல இருக்கே !! பாட்டி, உங்களுக்கு பிளைட் டிக்கெட் எடுத்திட்டேன் !! :-)

ஜீவன் சுப்பு said...

ஹா ஹா ஹா ..!