Wednesday, April 10, 2013

அம்மாவும்,மூன்று லட்சமும்,பின்னே நாங்களும்.........1

அம்மாவிற்கு செப்டம்பரில் ஒரு அட்டாக் வந்து ஆஞ்சியோ ப்ளாஸ்டி செய்து ஸ்டெண்ட் வைத்தார்கள்.இந்த மார்ச் 3-ல் திரும்ப ஒரு அட்டாக். இந்த முறை ரொம்ப வலியில்லை.  ஓடு ஓடுன்னு ரெகுலர் செக்கப் போகும் ஹாஸ்பிட்டலுக்கு போனா இசிஜி பார்த்து உடனே ஆஞ்சியோக்ராம் செய்ய சொல்லி அந்த ரிசல்ட் வந்ததும் பைபாஸ் சர்ஜரி செய்யணும் உடனே பெரிய ஹாஸ்பிட்டல் மூவ் ஆகணும் என்றதும் பைபாஸ் சர்ஜரிக்கு எவ்ளோ செலவு ஆகும் என்று கேட்க 1,60,000 ஆகும் என்று ஆஞ்சியோ செய்த டாக்டர் சொன்னார். உடனே, ஆம்புலன்சில் அம்மாவை காமாட்சி ஹாஸ்பிட்டலுக்கு ஷிஃப்ட் செய்தேன்.

சனி இரவு போய் திங்கள் மாலை அந்த ஹாஸ்பிட்டலுக்கு 36 ஆயிரம் கட்டி விட்டு காமாட்சிக்கு ஆம்புலன்சில் வந்தோம்.

இங்கே ஒரு முக்கிய தகவல்..சென்னையில் நான் பயணம் போகாதா வண்டி ஆம்புலன்ஸ் தான். அதிலும் பயணம் செய்தாச்சு!!!!

மார்ச் 4 ஆம் தேதி மாலை 5.30 க்கு காமாட்சி ஹாஸ்பிட்டலில் எமர்ஜென்சி வார்டில் அம்மாவை படுக்க வைச்சாச்சு. அங்கிருந்த டாக்டரிடம் சர்ஜனை மீட் செய்யணும் அவர் தான் இப்ப இங்க வரச் சொன்னார் என்று சொன்னதும், அவர் வருவார் நீங்க ரிஷப்ஷனில் கூப்பிடுறாங்க போய் பணம் கட்டிட்டு வாங்க என்றதும் போனேன். அங்கே உடனே 20 ஆயிரம் கட்டினால் தான் ஐசியுவில் அட்மிட் செய்ய முடியும் என்றார்கள்.சரி சர்ஜரிக்கு எவ்வளவு என்றதும் 3 பேக்கேஜ் இருக்கு 1,45,000 ன்னா ஜெனரல் வார்டு,1,75,000 ன்னா ரூம், 1,95,00 ன்னா ஏசிரூம்.9 நாட்கள் பேக்கேஜ் இதில் 30,000 வரை தான் மருந்து செலவு அடங்கும். இரண்டு நாள்கள் தான் ஐசியு வாடகை அடங்கும்...சர்ஜரிக்கு பிறகு டயாபடிஸ்,கிட்னி பிரச்சனை வந்தால் அந்த டாக்டருக்கு விசிட்டிங் சார்ஜ் தனி தனியே கொடுக்கணும் ஆக மொத்தம் 3 லட்சம் வந்திடும் என்று ரிஷப்ஷனில் இருப்பவர் சொன்னார். அப்புறம் எதற்கு பேக்கேஜ்??? உடனே சர்ஜனுக்கு ஃபோன் செய்தேன். (ரிங் டோன் -- கிச்சு கிச்சு தாம்பாளம் கீயா கீயா தாம்பாளம்) என்ன சாரே 1,60,000 ஆகும்னாங்க இப்ப இங்க டபுளா சொல்றாங்க என்றதும் இருங்கம்மா ரிஷப்ஷனுக்கு நான் பேசிட்டு உங்க லைன்னுக்கு வரேன் என்றார் சர்ஜன்.

பேசிட்டேன் 1,75 க்கு கூட 25 ஆயிரம் இல்லை 40 ஆயிரம் தான் வரும் அதற்கு மேலே வராது நான் பேச்சிட்டேன் நீங்க அம்மாவை ஐசியுவிற்கு மூவ் செய்யுங்கள் என்று சொன்னதும் ரிஷப்ஷன் ஆள் ஏம்மா உங்ககிட்ட தோராயமா 3 லட்சம் வரும் என்றேன்.ஏம்மா அந்த டாக்டர் கிட்ட என்னை போட்டு கொடுத்தீங்க நீங்க அப்போலோ போக போறதா அவர் என் கிட்ட கத்துகிறார் என்று வெடு வெடுன்னார்.நானும் பதிலுக்கு பாசமானேன்.
( நான் அப்போலோன்னு சொல்லவேயில்லையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்) .

ஓகோ அப்போலோவிலும் இந்த பணம் தான் வருமா ஓக்கேன்னு என் கஸினிற்கு (பெத்தாலஜிஸ்ட் இன் ராமசந்திரா) ஃபோன் செய்தேன்.ரிப்போர்ட்டை படித்து காண்பித்து அம்மாவின் நிலை இப்படி இருக்கு, இங்கேயோ பேரம் நடக்குதுடா என்ன செய்ய? அம்மாவை அப்படியே இன்னொரு ஆம்புலன்சில் ஏத்தி கொண்டு அப்போலோ இல்லைன்னா ராமசந்திரா வந்திடவா  என்று கேட்டேன். அவர் இல்லைக்கா நீங்க இருக்கும் ஹாஸ்பிட்டலில் அனெஸ்தடிஸ்ட் என் ஃப்ரெண்ட் தான் நான் பேசிட்டேன் சர்ஜன் நல்லா செய்றாராம் எனவே நீங்க ட்ராஃபிக்கில் இப்ப வேற ஹாஸ்பிட்டல் அலைந்தாலும் நேரம் தான் போய் கொண்டே இருக்கும் அதுவும் இல்லாமல் அங்கேயும் இந்த பணத்தை விட ஜாஸ்தி தான் ஆகும் நீங்க குழப்பிக்காம சர்ஜரிக்கு ஓக்கே சொல்லிடுங்க என்றான்.என் கணவருக்கு,தம்பிக்கு,தங்கைக்கு ஃபோனில் விஷயத்தை சொல்ல அவர்களும் குழம்ப வேண்டாம் ஓகே சொல்லிட்டு அம்மாவை ஐ.சி.யுவிற்கு மூவ் செய்திடு நாங்க எல்லோரும் வந்துட்டே இருக்கோம் என்றார்கள்.

                                                                                beating heart photo: beating heart lunapic-beating.gif
                       
                                                                                                   

7 comments:

Anonymous said...

Hospitala nenaichala oru bayamathan iruku. eppo evlo kepanganu theriyatu. Karunakaran

ADHI VENKAT said...

இங்கயும் பேக்கேஜா!!!

அம்மா இப்போ நலம் தானே.... அதை முதல்ல சொல்லுங்க...:)

வெங்கட் நாகராஜ் said...

பேக்கேஜ் எனச் சொன்னாலும் தனியாக சில வசதிகளுக்குக் காசு வாங்கி விடுவார்கள்.

பணம் ஒன்று தானே பிரதானம்!

அம்மா நலம்தானே?

சாந்தி மாரியப்பன் said...

அம்மா இப்போ எப்படி இருக்காங்கப்பா..

Avargal Unmaigal said...

அம்மா நலமாக இருப்பார்கள் என நினைக்கிறேன், அவர் மேலும் நலமாக எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்

Siva said...

உங்கள் அம்மா இப்போது நலமாக உள்ளார்களா ? எல்லா இடங்களிலும் இப்போது பேரம் பேசினால் தான் பயன் கிடைக்கும். நாம் பிறக்கும் மருத்துவமனை முதல் இறக்கும் வரையில்.

Anonymous said...

எனக்கும் இதுபோன்ற அனுபவம் நேர்ந்ததுண்டு.