தமிழ்நாட்டில் இருக்கிற மொத்தம் 234 தொகுதியில போட்டியிடுற வேட்பாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 724 பேர்களாம்.
அதுல கிரிமினல் கேஸ் பதிவானர்கள் 140 பேர்..அம்மா,அய்யா,கேப்டன் இவர்களையும் சேர்த்து.
அதுல கொலை செய்ய முயற்சித்தவர்கள் என்று கேஸ் இருப்பவர்கள் 25 பேர்..
அதுல 8 ஆப்பு வரை படித்தவர்கள் 150 பேர்கள்
அதுல 10ஆப்பு வரை படித்தவர்கள் 200 பேர்கள்
டிகிரி வரை படித்தவர்கள் 250 பேர்கள்
முதுகலை படித்தவர்கள் 50 பேர்கள்
வக்கீல்,டாக்டர் மீதம் உள்ளவர்கள்.
பெண் வேட்பாளர்களில் கிரிமினல் கேஸ் இருப்பவர்கள் 4 பேர்
இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது?
இப்ப மதுரை மேற்கு எடுத்துகிட்டீங்கன்னா போட்டியிடும் மூவருமே கிரிமினல் கேஸ் பதிவானவர்கள். அதில் இருவர் 10-ஆவதும் ஒருவர் டிகிரியும் படித்து உள்ளனர். அதில் கொலை முயற்சி வழக்கு யார் பேரில் இல்லையோ அவரை தேர்ந்தெடுக்கலாம்.ஆனால்,டிகிரி முடித்தவர் பேரில் கொலைமுயற்சி வழக்கு உள்ளது.எனவே 10 ஆப்பு படித்தவர் தான் ஜெயிப்பாரோ.
அதுவே மதுரவாயல் தொகுதியினை எடுத்துக் கொண்டால் போட்டியிடும் மூவரில் இருவர் செக்ஷன் 302(மர்டர் கேஸ்), ஒருவர் செக்ஷன் 307 கொலை முயற்சி வழக்கும் பதிவாகி உள்ளது. மர்டரை விட அட்டம்ட் மர்டர் பரவாயில்லை என்பதால் செக்ஷன் 307 பதிவாகி உள்ளவருக்கு ஓட்டு போடலாமோ.
அதுவே நாகப்பட்டிணம் தொகுதியினை எடுத்துக் கொண்டால் ஒருவர் அட்மட் மர்டர்,மர்டர் அது இது என்று 10 கிரிமினல் கேஸ்களில் சிக்கி உள்ளார். நல்லவேளை அவர் 10 ஆவது தான் படித்து உள்ளார். எனவே 10 கேஸ்கள் மட்டுமே.இன்னும் படித்து இருந்தால்??
ஆகா, தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் பெரிய கட்சியினை சேர்ந்த மூவருமே கிரிமினல் வழக்குகளில் சிக்கவில்லை. இப்படி மூவருமே நல்லவங்கன்னாலும் குழப்பம் தான்.அதனால்,ரோடு போட்டது யாரு?அந்த ரோடை பாழாக்கியது யாருன்னு தேடணும்.
வேலூர் பரமாத்தி தொகுதியில் போட்டியிடும் ஒருவரின் மேல் 36 கிரிமினல் கேஸ்கள்.மனிதர் எம்.ஏ.பொலிட்டிகல் சயின்ஸ். அடகொக்கமக்கா!!!
அம்மா மேல் 10 கேஸ்கள்.படித்தது 10ஆப்பு.
அய்யா மேல் 1 கேஸ்-எதிர்த்து போட்டியிடுபவர்கள் மேல் ஒரு கேஸும் இல்லை.அய்யாவும் 10 ஆப்பு பாஸ்
கேப்டன் மேல் 1 கேஸ்.இவரும் 10 ஆப்பு பாஸ்
ஸ்டாலின் மேல் நோ கேஸ்-டிகிரி ஹோல்டர்.
இப்படியே பார்த்தோமானால் யாருக்கு ஓட்டு போடறதுன்னே தெரியலை. முதல் முறையாக ஓட்டு போடப்போகும் என் மகன் என்னை கேட்கிறான் யாருக்கும்மா ஓட்டு போடறதுன்னு? ஏண்டா இப்படி ஒரு கேள்வி என்னை பார்த்து கேட்ட?இதற்கு பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம்டா.எக்ஸாம்னா சாய்ஸில் இந்த கேள்வியினை விட்டுடலாம்.
இந்த கணக்கெல்லாம் தோராயமாக எடுக்க உதவிய தளம் இதோ http://myneta.info/tamilnadu2011
அதுல கிரிமினல் கேஸ் பதிவானர்கள் 140 பேர்..அம்மா,அய்யா,கேப்டன் இவர்களையும் சேர்த்து.
அதுல கொலை செய்ய முயற்சித்தவர்கள் என்று கேஸ் இருப்பவர்கள் 25 பேர்..
அதுல 5ஆப்பு வரை படித்தவர்கள் 50 பேர்கள்

13 comments:
//ஏண்டா இப்படி ஒரு கேள்வி என்னை பார்த்து கேட்ட?இதற்கு பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம்டா// ஹா..ஹா..இப்படியா ஒரு தாயை டரியல் ஆக்குவது!
//யாருக்கு ஓட்டு போடறதுன்னே தெரியலை//
எனக்கும் தெரியல அதனால உங்க பதிவுக்கு மட்டும் வாக்கு போட்டாச்சு.
பசங்க யாருக்கு ஒட்டு போடறதுன்னு அம்மா கிட்டே கேக்குறாங்களா? !!!!
ஆமாம் டரியல் தான் ஆகிவிட்டேன் செங்கோவி..
நன்றி தமிழ் வினை
பசங்க அவுங்க அம்மாகிட்டதானே கேட்கிறார்கள் மோகன் குமார்.
ஆகா, தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் பெரிய கட்சியினை சேர்ந்த மூவருமே கிரிமினல் வழக்குகளில் சிக்கவில்லை. இப்படி மூவருமே நல்லவங்கன்னாலும் குழப்பம் தான்.அதனால்,ரோடு போட்டது யாரு?அந்த ரோடை பாழாக்கியது யாருன்னு தேடணும்.
..... சரியா போச்சு.... நல்லா பாருங்க.... யாராவது ஒரு ஆளு, சுயேட்சையாக - நல்ல மனுஷனாக போட்டியிடலாம். ஆனால், தப்பி தவறி ஜெயித்து விட்டாலும், அப்படியே நல்லவராக இருப்பாரா என்பதற்கு அவர் guarantee கொடுப்பாரா என்று தெரியலியே....
என்னுடைய அரசியல் பார்வை. அலசல் மூலம் சொல்கிறேன்.. தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஜெயலலிதா தவறிவிட்டார்.. எளிதில் வெற்றிக்கோட்டை தொட்டிருக்க வேண்டியவர் , தன் செயல்களாலேயே போட்டியை கடுமையாக்கி கொண்டு.. இன்றைய நிலையில்.. திமுகவிற்கு வழி விட்டு விட்டார் என்பதே நிதர்சனம்.. அவருக்கு கடந்த இரண்டு மாதத்தில் பக்கபலமாக நின்ற பத்திரிககள் பல ஓவர் கான்பிடன்ட் டோஸ் கொடுத்து விட்டது .. அதை தாமதமாகவே புரிந்துக்கொண்டு , இப்போது என்னனென்னமோ செய்து பார்கிறது.. ஆனால் டூ லேட்..
மற்றொரு முக்கிய காரணி , முகவின் பிரசார வியுகம் .. ஊடகத்தை பயன்படுத்திய முறை.. வடிவேலு முதல் லியோனி, நெப்போலியன், குஷ்பு வரை கடினமாக உழைத்தது ... கலைஞ்சரின் மேடை பேச்சு.. எங்குமே அம்மையாரை திட்டாமல், அர்ச்சிகாமல் .. பழைய தலைவர்களை நினைவு கூர்ந்து பேசியது மக்களை கவர்ந்துள்ளது.. ஸ்டாலின் சூறாவளி சுற்றுபயணனும் பெரிய பிளஸ்.
ஜெயா டிவியிலேயே வடிவேலுவையும், அவர் கலைஞரை "இவர் தான் தலைவர் " என்று சொன்னதை திரும்ப திரும்ப காண்பிக்க வைத்திருகிறது என்றால் வடிவேலின் பிரசாரம் பற்றி புரிந்துக்கொள்ளலாம் ..
மொத்தத்தில் பிரசார வியுகத்தில் திமுக பல்கலை கழகம் என்றால் அமரர் எம்ஜியார் உருவாக்கி வைத்த அதிமுக கோட்டை இன்னும் 6 ஆம் வக்குப்பு கூட தேறவில்லை..
என் கணிப்பு
திமுக - 128 - 148
அதிமுக - 85 - 105
மற்றவர்கள் - 1 - 3
பார்க்கலாம்
ஆமாம் சித்ரா அதுவுமில்லாமல் உங்க அப்பா போட்ட ஓட்டு மாதிரி 61 ஆவது ஓட்டாகி விடப் போகிறது.சுயேச்சைக்கு போடுகிற ஓட்டை சொல்றேன்.
பட்டியல் எல்லாம் பக்காவா இருக்கே விஜயகாந்துக்கு கொ.ப. செ. ரெடியா?
என்னவொரு கஷ்டமான கேள்வி :-))
அமுதா, ஆளி விதைக்கு பதில் அளித்து விட்டேன்
சென்னை இருப்பதால்
என் பதிவு சென்னை ப்ளாசா வை பார்வையிடவும், முடிந்த போது சென்று வாருஙக்ள்
உஙக்ள் தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்
அப்படியே ஒரு சின்ன அவார்டையும் பெற்றுகொள்ளுங்கள்.
http://samaiyalattakaasam.blogspot.com/2011/04/blog-post_14.html -
சென்னை ஃப்ளாசா
http://samaiyalattakaasam.blogspot.com/2011/04/blog-post_21.html
அவார்டு
Yes Ms Amudha Krishna!
In today's politics, whether state or national, one cannot expect to elect an Angel. The electorate need to pick and choose amongst devils, ghosts, spirits, vampires and genies. It is the order of the day. The great fear before us is, what dimension it would take in the years to come. God only knows.......
Post a Comment