Friday, February 25, 2011

ஒரே டெர்ரரா இருக்கே..

ம்மா டெர்ரர் ஃபேமிலி ஒரு கடை ஆரம்பிச்சு இருக்காங்கம்மா. மாலையில் வீட்டிற்குள் வரும் போதே நகுல் சொல்லிக் கொண்டே வந்தான். டெர்ரர் ஃபேமிலி?

எங்கள் தெருவின் கார்னர் வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் குண்டாக(குண்டாக இருப்பவர்கள் எல்லாம் திட்டாதீங்கப்பு) இருப்பார்கள். ஒவ்வொருவரும் எப்போதும் ஒரு 15 அல்லது 20 பவுன் நகை போட்டிருப்பார்கள். தண்டி தண்டியாக செயின், ப்ரேஸ்லெட், மோதிரம் என்று ஆண்களும் நகை போட்டு இருப்பார்கள்.அந்த வீட்டு ஆண்கள் எல்லாம் மிக பெரிய மீசை வைத்து இருப்பார்கள். அவர்கள் குடும்பத்திற்கு நகுல் வைத்த பெயர் தான் டெர்ரர் ஃபேமிலி.அடுத்த நாள் இந்த முட்டைகள் டெர்ரர் கடையில் வாங்கி வந்தான்.


ஐயோ, இன்னைக்கு டெர்ரர் குழம்பா நான் வெளியில் சாப்பிட்டுக்றேம்மா. இது ரிஷி.டெர்ரர் குழம்பு-புளிக்குழம்பு. கலர் பார்க்க டெர்ரரா இருக்காம்.



                                இப்படி இரண்டு டெர்ரர்களிடம் மாட்டிக் கொண்ட நான் கீழே நடுவில்.


10 வருடங்களுக்கு முன்னால் இந்த இரண்டு டெர்ரரும் சேர்ந்து ஒரு கருப்பு குட்டி நாயினை தெருவில் இருந்து தூக்கி வந்துச்சுங்க. டாக்டரிம் கூட்டி போய் ஊசி போடும் போது தான் அந்த நாய் பெண் என்றே தெரிந்தது. கார்டில் பெயர் எழுத நாய் பெயர் டாக்டர் கேட்டால், ஓ பெயரே இன்னும் முடிவு செய்யலையே.ஆனால், உடனே ஒரு பெயர் வைச்சுதுங்க. 
RINA..RI for Rishi..Na for Nagul.
ஆனால் இப்போ இப்ப மருவி ரீனாவாகி போச்சு. அதிலும் ரிஷி அதற்கு R.ரினா என்று வைக்கணும் என்று ஒரே வம்பு. அவன் பெயர் தான் இன்ஷியலாம். தல அப்ப ப்ரைமரி ஸ்கூலில் இருந்தார். 

12 comments:

அன்புடன் அருணா said...

டெரர் பதிவா இருக்கே!

குறையொன்றுமில்லை. said...

நல்லா இருக்கே டெரர் ஃபேமிலியும்
பெண் குட்டியும். தொடருங்க.

Chitra said...

ha,ha,ha,ha,ha... funny!

Ram said...

இந்த நாய் வளக்குறதுன்னா பலருக்கு பிடிக்காது.. அதுவும் எங்கவூட்ல ஒரு நாள் நாய தூக்கிகிட்டு வந்து பின்னாடி அடிவாங்குன சம்பவங்கள் நடந்திருக்கு.. முதல்ல நீங்க சொன்ன டெரர் குடும்பத்தின் முதல் அறிகுறி(குண்டு) வன்மையாக கண்டிக்கிறேன்.!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா நடக்கட்டும் நடக்கட்டும்...

குறையொன்றுமில்லை. said...

நல்ல படங்கள், நல்லபதிவு.

வெங்கட் நாகராஜ் said...

ஒரே டெரர்-ஆ இருக்கே :)

ADHI VENKAT said...

:)))))

அமுதா கிருஷ்ணா said...

நன்றி அருணா.

நன்றி லக்‌ஷ்மி மேடம்.

நன்றி சித்ரா.

அமுதா கிருஷ்ணா said...

தம்பி முதலிலேயே கோவிச்சக்கூடாதுன்னு சொல்லிட்டேன்..

நன்றி ராஜாராம் சார்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி நாஞ்சில் மனோ..வெங்கட்ராஜ்,கோவை2தில்லி..

Asiya Omar said...

இண்ட்ரெஸ்டிங் டெர்ரர்...இந்த மாதிரி அனுபவம்..ராணீன்னு பேர் வச்சு கடைசியில் அது ராஜாவான கதை தான் நினைவு வருது.